கேள்வி எண்: 55. ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன்’ என்று யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? Continue reading
திருடர்களில் மிக மோசமான திருடன் யார்?
மதுபானங்கள் செத்த விலங்குகள் பன்றி விக்கிரகங்கள் விற்க தடை.
1018. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது! அது விலக்கப்பட்டது!’ எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!” என்று கூறினார்கள்.
1019. ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி), ‘அவரை அல்லாஹ் சபிப்பானாக! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக ஆக்கப்பட்டபோது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா?’ எனக் கேட்டார்.
1020. ”யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவித்தல்! எச்சரிக்கை செய்தல்! அறிவுடையோர் நல்லுணர்வு பெறுதல்!
14:42. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்துக் கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாக இருக்கின்றான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதபடுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை – இறுதி) நாளுக்காகத்தான்.
14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும். Continue reading
மதுபானங்கள் விற்கத் தடை.
1017. ‘பகரா’ அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள்.
இரத்தம் உறிஞ்சி எடுக்க கூலி.
1015. அனஸ் (ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அபூ தய்பா என்பவர் குருதி உறிஞ்சி வாங்கினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு(க் கூலியாக) இரண்டு ‘ஸாஉ’ உணவு கொடுத்தார்கள். மேலும், அபூ தய்பாவின் எசமானர்களுடன் நபி (ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) அவர்கள் குறைத்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும், வெண்கோஷ்டமும்தான், உங்கள் குழந்தைகளை (அவர்களின்) அடிநாக்கு அழற்சியைப் போக்க (தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் அவசியம் கோஷ்டத்தைப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
கற்பனைக்கு எட்டாதவன்!
மனிதனுக்குக் ‘கற்பனா சக்தி’ என்றொன்றை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்தக் கற்பனா சக்தி எல்லோருக்கும் ஒரேவிதமாக அமைவது இல்லை. ஒவ்வொருவரது அறிவு, அனுபவம், திறமை, ஆர்வம் என்பவற்றுக்கமைய அது வித்தியாசப்படும். அத்தகையவர்களுள் ஆன்மீக ஆர்வம் மேலிட்டு அதில் அதிக ஈடுபாடு கொண்ட பல மதத்தைச் சேர்ந்தவர்கள் இறைவனைப் பற்றிய கற்பனையில் ஈடுபடலாயினர். அத்தகைய ஈடுபாடுகள் மூலமே விதவிதமான விக்கிரகங்கள் தோற்றம் பெற்றன. Continue reading
நாய் வளர்க்கத் தடை.
1012. கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவு குறைந்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1013. நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1014. ‘அஸ்த் ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர் (ரலி) என்னிடம், ‘விவசாயப் பண்ணையையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் எவ்விதத் தேவையுமின்றி நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (ஊதியம்) குறைந்து விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டேன்” என்றார்கள். நான், ‘இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?’ என்று வினவினேன். சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர் (ரலி), ‘ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடமிருந்து நானே நேரடியாகச் செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள்.
நாய் விற்ற காசு.
1010. ”நபி (ஸல்) அவர்கள் நாய் விற்ற காசையும் விபச்சாரியின் கூலியையும் ஜோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!”
1011. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்.
ஹவாரிய்யூன்கள் எனப்படுபவர்கள் யார்?
கேள்வி எண்: 54. ஹவாரிய்யூன்கள் எனப்படுபவர்கள் யார்? அவர்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனை என்ன? Continue reading
தேவைக்கு அதிகமான நீரைத் தடுக்காதே.
1009. (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.