நாய் வளர்க்கத் தடை.

1012. கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவு குறைந்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5480 இப்னு உமர் (ரலி).

1013. நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2322 அபூஹுரைரா (ரலி).

1014. ‘அஸ்த் ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர் (ரலி) என்னிடம், ‘விவசாயப் பண்ணையையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் எவ்விதத் தேவையுமின்றி நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (ஊதியம்) குறைந்து விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டேன்” என்றார்கள். நான், ‘இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?’ என்று வினவினேன். சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர் (ரலி), ‘ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடமிருந்து நானே நேரடியாகச் செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 2323 அபூஸூஃப்யான் பின் அபூஜூஹைர் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.