1008. ”செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒத்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கடனைத் திருப்பிச் செலுத்த வசதியுள்ளவன் பற்றி….
அவதாரம் எடுத்தல்!
சில மதங்களில் இறைவன் மனித அவதாரம் எடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. இக்கருத்து இஸ்லாமிய இறைக்கருத்துக்கு நேர் எதிரானதாகும்.
அல்லாஹ், ஒருபோதும் ஒரு மனிதராகவோ, அல்லது வேறு ஏதாவது உயிரினமாகவோ அவதாரம் எடுத்து வருவது இல்லை. காரணம், அவன் அழிவே இல்லாதாவன். ஏனைய எல்லாமே அழியக்கூடியன. மனிதனும் மற்றைய உயிரினங்களும் பிறந்து இறந்து விடுவன. மற்ற இயற்கைப் படைப்புகளும் என்றோ அழியக்கூடியன. எனவே, அழியக்கூடியவை மூலமாக அழிவே இல்லாதவன் அவதாரம் எடுத்துத் தோற்றம் தருகிறான் எனக் கூறுவதும் நம்புவதும் இறைவனைக் கேலி செய்வது போன்ற செயலாகும். Continue reading
கடனாளிக்கு அதிக கால அவகாசமளித்தல்.
1006. ”உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் ‘நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?’ எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!” என்று கூறினார். உடனே, ‘அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல்விட்டு விடுங்கள்!’ என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1007. ”(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கடனாளி திவாலானால்….
1005. ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தன் பொருளை அப்படியே (கொடுத்தபோது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன்காரர்களை விட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?
கேள்வி எண்: 53. மறுமையில் ஈஸா நபி (அலை) அவர்களுக்கும், இறைவனுக்கும் நடக்க இருக்கும் உரையாடல் குறித்து திருமறை கூறுவது என்ன? இதன் மூலம் நாம் பெறும் படிப்பினைகள் யாவை? Continue reading
கடனில் சிறிது தள்ளுபடி செய்தல்.
1003. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சத்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) புறப்பட்டு வந்து, ‘நன்மை(யான செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?’ என்று கேட்டார்கள். அந்த மனிதர், ‘நானே இறைத்தூதர் அவர்களே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.
1004. இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து ‘கஹ்பே!” என்று கூப்பிட்டார்கள். ‘இதோ வந்தேன் இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். ‘பாதி’ என்பதைக் காட்டும் விதமாகச் சைகை மூலம் காட்டி ‘உம்முடைய கடனில் இவ்வளவைத் தள்ளுபடி செய்வீராக!” என்று கூறினார்கள். ‘அவ்வாறே செய்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே!’ என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்களிடம் ‘எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
கனிகள் பழுக்கும் முன் விற்காதே.
1002. மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடைவது வரை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ‘பக்குவமடைவது என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டதற்கு ‘சிவக்கும்வரை” என்று விடையளித்துவிட்டு, ‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால்…? எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும்?’ எனக் கேட்டார்கள்.
நிலத்தைப் பண்படுத்தி மரம் நடுவதன் சிறப்பு.
1001. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்
கேள்வி எண்: 52. “நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்ற திருமறை வசனம் எது? இவ்வசனத்தின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள் யாவை? Continue reading
பிறருக்கு குத்தகை நிலத்தை தானமாக வழங்குதல்.
998. நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், ‘(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்” என்றேன். இதைக்கேட்ட தாவூஸ் (ரஹ்) (என்னிடம்) சொன்னார்கள்: அம்ரே! (என்னுடைய நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து நான் உதவுகிறேன். ஏனெனில், ‘நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. மாறாக, ‘உங்களில் ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்குவிட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக் கொள்வதை விட, தன் சகோதரனுக்கு (இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி அதைக்) கொடுத்து விடுவது சிறந்ததாகும்’ என்றே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று மக்களில் பேரறிஞரான இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.