Tag Archives: தடை செய்யப்பட்ட வியாபாரம்

மதுபானங்கள் செத்த விலங்குகள் பன்றி விக்கிரகங்கள் விற்க தடை.

1018. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மதுபானங்கள் செத்த விலங்குகள் பன்றி விக்கிரகங்கள் விற்க தடை.

மதுபானங்கள் விற்கத் தடை.

1017. ‘பகரா’ அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள். புஹாரி :459 ஆயிஷா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மதுபானங்கள் விற்கத் தடை.

நாய் விற்ற காசு.

1010. ”நபி (ஸல்) அவர்கள் நாய் விற்ற காசையும் விபச்சாரியின் கூலியையும் ஜோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!” புஹாரி :2237 அபூ மஸ்ஊது அல் அன்சாரி (ரலி). 1011. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். புஹாரி :3323 இப்னு உமர் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நாய் விற்ற காசு.