கேள்வி எண்: 55. ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன்’ என்று யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்: ‘திருடர்கள் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான் என்று நபித்தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவுவையும், ஸுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: அஹ்மத், ஹாகிம், தப்ரானி.