சுவனப்பூங்காவில் ஒரு பகுதி

நபி (ஸல்) அவர்கள் ‘என்னுடைய வீட்டுக்கும், மிம்பருக்குமிடையில் இருக்குமிடம் சுவனப்பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்’ என்று கூறியிருக்கிறார்கள். நபிகளைப் பற்றி இப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஹதீஸைச் சிலர் திரித்து நபியவர்களின் ‘வீடு’ என்று கூறியதை ‘கப்று’ என்று அறிவித்திருக்கிறார்கள். நபியவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது உயிரோடு தானே இருந்தார்கள். கப்றில் அவர்கள் அடக்கப்படிருக்க வில்லையே அப்படியிருக்க எனது கப்று என்று எப்படி நபியவர்கள் கூறியிருக்க முடியும்? எனவேதான் ஸஹாபாக்களில் எவரும் கப்று என்று வந்த ஹதீஸை ஆதாரமாக கொள்ளவில்லை. இதனால் நபியவர்கள் மரணமடைந்த பிறகு எங்கே அவர்களின் புனித மேனியை அடக்கம் செய்ய வேண்டுமென்பதில் அபிப்பிராய வித்தியாசங்களையும் கூறியிருக்கிறார்கள். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , | Comments Off on சுவனப்பூங்காவில் ஒரு பகுதி

மஸ்ஜிதுன் நபவிக்குப் பயணமாகுதல்

நேர்ச்சைகள் செய்வது கடனைப் போன்றதாகும். கடனை திருப்பி ஒப்படைப்பது கட்டாயமாவதைப் போல நேர்ந்த கடன்களையும் திருப்ப வேண்டுமென அனைத்து இமாம்களும் கூறியிருக்கிறார்கள். எனவே நபியவர்களின் கப்றை நோக்கிப் பிரயாணம் செய்ய வேண்டுமென்று ஒருவர் நேர்ந்தால் அல்லது மற்ற நபிமார்கள், நன்மக்கள் ஆகியோருடைய கப்றுகளில் ஏதேனுமொன்றுக்குப் போக வேண்டுமென்று நேர்ந்தால் அதை நிறைவேற்றுதல் அவசியமில்லை. மாறாக அதை நிறைவேற்றினால் விலக்கப்பட்ட ஒரு அனுஷ்டானத்தைச் செய்தவனாகி விடுகிறான் என்று அனைத்து அறிஞர்களும் ஏகோபித்து அபிப்பிராயப் படுகிறார்கள். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on மஸ்ஜிதுன் நபவிக்குப் பயணமாகுதல்

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தற்கான கூலி!

14:42. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்துக் கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாக இருக்கின்றான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதபடுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை – இறுதி) நாளுக்காகத்தான்.

14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.

14:44. எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்கவில்லையா?” (என்றும்)

14:45. அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டி இருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).

14:46. எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்த போதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.

14:47. ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.

14:48. இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.

14:49. இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.

14:50. அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.

14:51. அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

14:52. இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.

அல் குர்ஆன்: ஸூரத்து இப்ராஹீம்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தற்கான கூலி!

குறிப்பு (3)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்நேரம் கலீபாவிடம் இமாம் அவர்கள் கூறினார்களாம். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on குறிப்பு (3)

குறிப்பு (2)

அல்லாஹ்விடம் அவன் படைப்பினங்களைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தல் தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம் சென்று அவற்றைக் காரணம் காட்டியும், அவற்றைப் பொருட்டாகக் கொண்டும் கேட்பது விலக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சிலர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும் தம் தஃவாவுக்குச் சான்றாகக் கூறினார்கள். எனவே மக்களில் பலர் இம்மாதிரி துஆச் செய்வதைக் காணலாம். ஆனால் இது விஷயத்தில் நபிகளைப்பற்றி அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் பலம் குன்றியவையும், புனையப் பட்டவையுமாகும். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on குறிப்பு (2)

வெள்ளிக்கிழமை!!!

62:9-10. இறை நம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக் கிழமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் – வாங்கலை* விட்டு விடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்! பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள். அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்!** மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடும்.***

அல் குர்ஆன்: அல் ஜும்ஆ.

*இந்தக் கட்டளையில் ‘திக்ரு’ என்பது சொற்பொழிவைக் குறிக்கின்றது. ஏனெனில், பாங்கு சொன்ன பிறகு அண்ணலார் (ஸல்) செய்து வந்த முதல் செயல் தொழுகையாக இருக்கவில்லை. மாறாக சொற்பொழிவாகவே இருந்தது. எப்போதும் சொற்பொழிவுக்குப் பிறகுதான் அண்ணலார் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றி வந்தார்கள். ‘அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள்’ என்னும் வாசகத்தின் கருத்து, “ஓடி வாருங்கள்” என்பதல்ல. மாறாக, “முடிந்த வரை வெகு விரைவாக அங்கு சென்றடைய முயலுங்கள்!” என்பதேயாகும். “கொடுக்கல் – வாங்கலை விட்டு விடுங்கள்” என்பதன் பொருள், கொடுக்கல் – வாங்கலை விட்டுவிடுவதன்று. மாறாக தொழுகைக்கு செல்ல வேண்டும் எனும் அக்கறை, முனைப்பு ஆகியவற்றைத் தவிர வேறெல்லாப் பணிகளையும் ஈடுபாடுகளையும் விட்டு விடுவதாகும். ஜும்ஆ பாங்குக்குப் பிறகு வியாபாரம் மற்றும் அனைத்து விதமான கொடுக்கல் – வாங்கலும் விலக்கப்பட்ட செயல்களாகும் என்று இஸ்லாத்தின் சட்ட நிபுணர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால் நபி மொழியின்படி குழந்தைகள், பெண்கள், அடிமைகள், நோயாளிகள், பயணிகள் ஆகியோருக்கு ஜும்ஆவின் கடமையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

**இதன் பொருள் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பூமியில் பரவிச் செல்வதும் வாழ்க்கைத் தேவைகளை தேடுவதில் முழுமையாக ஈடுபடுவதும் கட்டாயம் என்பதல்ல. மாறாக, இந்தக் கட்டளை ‘இதற்கான அனுமதியுண்டு’ எனும் கருத்தில் அளிக்கப்பட்டதாகும். ஏனெனில், ஜும்ஆவின் பாங்கினைக் கேட்டு எல்லா வியாபாரத்தையும் விட்டு விடும்படி கட்டளையிடப்பட்டிருந்தது. எனவே, தொழுகை பரவிச் சென்று, நீங்கள் உங்களுடைய எந்த வியாபாரத்தைச் செய்ய விரும்புகிறீர்களோ அதனைச் செய்யுங்கள்; அதற்கு உங்களுக்கு அனுமதி இருக்கிறது என்று கூறப்பட்டது. இது 5:2-இல் கூறப்பட்டுள்ள கட்டளையைப் போன்றதாகும். அதில் ‘இஹ்ராமுடைய’ நிலையில் வேட்டையாடுவதைத் தடை செய்த பின்னர், “நீங்கள் இஹ்ராமை களைந்து விட்டால் வேட்டையாடுங்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் கருத்து, கட்டாயம் வேட்டையாடுங்கள் என்பதல்ல. மாறாக, இதற்குப்பின் நீங்கள் வேட்டையாடலாம் என்பதாகும். எனவே, எவர்கள் இந்த வசனத்தின் வாயிலாக, திருக்குர்ஆனின்படி, ‘இஸ்லாத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை நால் அல்ல’ என்று ஆதாரம் கூறுகிறார்களோ அவர்கள் தவறாகக் கூறுகின்றார்கள். வாரத்தில் ஒருநாள் விடுமுறை வேண்டும் என்றால், யூதர்கள் சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையையும் விடுமுறை நாளாக்கிக் கொண்டிருப்பதைப்போல் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக கொள்ள வேண்டும்.

***இது போன்ற இடங்களில் ‘கூடும்’ என்னும் சொல்லைக் கையாள்வதின் கருத்து அல்லாஹ்வுக்கு ஐயமேதும் இருக்கின்றது என்பதல்ல. (இத்தகைய எண்ணம் கொள்வதிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!) மாறாக, இது உண்மையில் இராஜகம்பீரப் பாணியாகும். ஓர் இரக்கமுள்ள எஜமானன் தன் பணியாளனிடம் “நீர் இன்ன பணியை ஆற்றும்; உமக்கு முன்னேற்றம் கிட்டக்கூடும்” என்று கூறுவதைப் போன்றதாகும் இது! இதில் நுட்பமானதொரு வாக்குறுதி மறைந்துள்ளது. அதனைப் பெறுகின்ற ஆவலில் அப்பணியாளன் மனப்பூர்வமாக மிகுந்த ஆர்வத்துடன் அப்பணியை நிறைவேற்றுகின்றான்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வெள்ளிக்கிழமை!!!

குறிப்பு (1)

ஒருவன் அடுத்தவனை நோக்கி நபியவர்களின் பொருட்டால் கேட்கிறேன் (அவர்களைக் கொண்டு) அல்லது அவர்களை முன்னிறுத்திக் கேட்கிறேன் என்று கூறினால் இக்கூற்றிலுள்ள ‘நபியைக் கொண்டு கேட்கிறேன்’ என்பதின் கருத்தில் நபியை ஈமான் கொண்டு விசுவாசித்து அவ்விசுவாசத்தைப் பொருட்டாக வைத்துக் கேட்பதை கருதப்பட்டால் இக்கூற்று தவறாகாது என்று சில அறிஞர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். எனவே இத்தகைய பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on குறிப்பு (1)

நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

6:130. (மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் ஏற்படப்போகும் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்களே எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கி விட்டது – அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்

6:131. (இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்து விட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்.

6:132. ஒவ்வொருவருக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு; உம் இறைவன் அவர்கள் செய்வதைப் பற்றி பாராமுகமாக இல்லை.

6:133. உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் – அவன் நாடினால் உங்களைப்போக்கி உங்களுக்குப் பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்றே – தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.

6:134. நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது (கியாமத் – இறுதி நாள்) வந்து விடும். (அதை) நீங்கள் தடுத்து விட முடியாது.

6:135. (நபியே!) நீர் கூறும்: “என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே; அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் – நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

அல் குர்ஆன்: அல் அன்ஆம் (கால்நடைகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்!

2:204. (நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.

2:206. “அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது; நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.

அல் குர்ஆன்: அல் பகரா.

22:3. இன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.

22:8. இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழிகாட்டியோ, வேத(ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்து தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.

22:9. (அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம (தீர்ப்பு) நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்கச் செய்வோம்.

22:10. ” உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்).

அல் குர்ஆன்: அல் ஹஜ்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்!

இறைவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு

பகுத்தறிவு படைத்தவன் தன்னைப் படைத்த இறைவனுக்கும், படைக்கப்பட்ட படைப்புகளுக்கும் இடையிலுள்ள பல வித்தியாசங்களை விளங்கிக் கொள்வான். ஒன்று: அல்லாஹ் பிறரின் வணக்க வழிபாடுகளில் இருந்தெல்லாம் தேவையற்றவன். அவன் ஒருபோதும் தன் அடியார்களை வேண்டி நிற்க மாட்டான். பிறரை வேண்டி நிற்பது மனிதப் பண்பல்லவா! எத்தனைப் பெரிய மாமன்னரானாலும் பிறரின் உதவி ஒத்தாசைகளை விட்டு விலகி நின்று வாழ முடியாது. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Comments Off on இறைவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு