நல்லறங்களில் மிகச் சிறந்தது..

அல்லாஹ்வின் மீது விசவாசங்கொள்வது நல்லறங்களில் மிகச் சிறந்தது..

50- செயல்களில் சிறந்தது எது?என நபி(ஸல்)அவர்களிடம் வினவப்பட்டது. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைக் கொள்வது என்றார்கள். பின்னர் எது? என வினவப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது என்றார்கள். பின்னர் எது? என்று கேட்கப்பட்டது ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ் என்றார்கள்.
புகாரி: 26 அபுஹூரைரா (ரலி)

51- நான் நபி(ஸல்)அவர்களிடம் எந்த நற்செயல் சிறந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடுவதும்) ஆகும்,என்று பதிலளித்தார்கள். நான் எந்த அடிமை(யை விடுதலை செய்வது)சிறந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும்(தான் சிறந்தவர்கள்)என்று பதிலளித்தார்கள். நான் என்னால்,அது(அடிமை விடுதலை செய்வது)இயலவில்லையென்றால்? என்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள்,பலவீனருக்கு உதவி செய், அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய் என்று கூறினார்கள். நான் இதுவும் என்னால் இயலவில்லையென்றால்..? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு,ஏனெனில் அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும். என்று கூறினார்கள்.
புகாரி-2518: அபூதர்(ரலி)

52- அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்)அவர்களிடம் நான் கேட்டபோது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும், என்று பதில் கூறினார்கள்.அதற்கு அடுத்து எது? என்றேன். பெற்றோருக்கு நன்மை செய்தல்,என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல் என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்)அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை)மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்)அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
புகாரி-527: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நல்லறங்களில் மிகச் சிறந்தது..

விசுவாசத்தில் குறைவு இருப்பது குறித்து..

மார்க்க விசுவாசத்தில், கடமைகளில் குறைவு இருப்பது குறித்து..

49- ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ நோன்புப் பெருநாள் அன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்)அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்றபோது,பெண்கள் சமூகமே! தான தர்மம் செய்யுங்கள்! காரணம் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள் தாம் என எனக்குக் காட்டப்பட்டது என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன?; என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள், கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக மார்க்க கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மனஉறுதியான கணவனின் புத்தியை மாற்றிவிடக் கூடியவர்களாக உங்களை விட வேறுயாரையும் காணவில்லை என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய மார்க்க கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன என்று அப்பெண்கள் கேட்டனர். ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப் படவில்லையா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆம் என அப்பெண்கள் கூறினர். அது தான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது. ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா? என நபி(ஸல்)அவர்கள்கேட்டார்கள். அதற்கும்,ஆம் எனப் பெண்கள் கூறினர் அது தான் பெண்கள் மார்க்க கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புகாரி-304: அபூ ஸயீதுல் குத்ரி(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on விசுவாசத்தில் குறைவு இருப்பது குறித்து..

அன்சாரிகளை நேசிப்பது குறித்து..

அன்சாரிகளை(மதீனத்து நபித்தோழர்களை)நேசிப்பது ஈமானின் அங்கம்..

47- ஈமானின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-17: அனஸ்(ரலி)

48- இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள். அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-3783: பராஉ(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அன்சாரிகளை நேசிப்பது குறித்து..

நட்சத்திரத்தால் மழையா?

இந்த நட்சத்திரத்தால் மழை பெற்றோம் என்று கூறுபவர் பற்றி..

46- நபி(ஸல்)அவர்கள் ஹூதைபிய்யா என்னுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்து மக்களை நோக்கி உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம். என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனது அருட்கொடையினாலும் நமக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவார். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புகாரி-846: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நட்சத்திரத்தால் மழையா?

ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

43 நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரலி) கூறியதாவது: ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம், அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறைநிராகரிப்பாகும்.
புகாரி 48 :அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி).

ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு நிராகரிப்போராகாதீர்..

44- நபி(ஸல்)அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது(மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்)என்னிடம் மக்களை அமைதியுடன் செவிதாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக! என்று கூறினார்கள்.(மக்கள் அமைதியுற்ற பின்னர்)எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என்று சொன்னார்கள்.
புகாரி-121: ஜரீர்(ரலி)

45- நபி(ஸல்)அவர்கள்(தமது விடைபெறும் ஹஜ் உரையில்) ; ; உங்களுக்கு கேடுதான் (வைலக்கும்) அல்லது உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்) ; ; எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள், என்று கூறினார்கள். புகாரி 6166 :இப்னுஉமர்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் அர்த்தம்

(லாமஃபூத – பிஹக்கின் இல்லல்லாஹ் — அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவருமில்லை என்பதாகும்) இதிலே அல்லாஹ்வைத் தவிர வேறெரு இறைவன் இல்லையென்று கூறுவதும், இறைமைத்துவம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று கூறி உறுதிப்படுத்துவதும் அமைந்துள்ளது.

1. “அல்லாஹ்வைத் தவிர வேறொரு இறைவன் இல்லையென்பதை நீர் அறிந்து கொள்ளும்” (47:19) என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதன் அர்த்தத்தை அறிந்து கொள்வது வாஜிபாகும். இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை அறிவதற்கு முன்னால் இதனை அறிந்தாக வேண்டும்.

2. “எவனொருவன் மனத் தூய்மையுடன் லாஇலாஹ இல்லல்லாஹ்வை மொழிகிறானோ அவன் சுவர்க்கம் பிரவேசிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

மனத்தூய்மை என்றால், அதனை விளங்குவதும், அதன்படி செயல்படுவதும், அதன்பக்கம் (மக்களை) அழைப்பு விடுப்பதுமாகும். ஏனென்றால், இதிலேதான் தௌஹீத் இருக்கின்றது. இதற்காகத்தான் உலகிலுள்ளோர் அனைவரையும் அல்லாஹ் படைத்தான்.

3. நபி (ஸல்) அவர்களது சிறிய தந்தை அபூதாலிப் மரணப்படுக்கையில் இருக்கும்போது, ‘எனது சிறிய தந்தையே! நீங்கள் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுங்கள். அதனைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக மன்றாடுவேன்’ என்று கூறினார்கள். அவர்கள் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூற மறுத்து விட்டார். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

“நபி (ஸல்) அவர்கள் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுங்கள் என்று சொல்லி மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்பதற்காக மக்காவில் பதின்மூன்று வருடகாலம் இருந்தார்கள். ‘ஒரே இறைவனையா நாங்கள் வணங்க வேண்டும்? இவ்வாறு நாங்கள் கேள்விப்பட்டதே இல்லையே’ என்று அம்மக்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் சொல்லக் காரணம் என்னவெனில், அவர்கள் கலிமாவுடைய அர்த்தத்தை விளங்கியிருந்ததனால் தான். எவன் இதனைச் சொல்லுவானோ, அவன் அல்லாஹ் அல்லாத ஏனையவைகளை அழைப்பதை விட்டுவிட்டு, அல்லாஹ்வையே மட்டுமே அழைப்பான். இவர்களைப்பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

“அல்லாஹ்வைத் தவிர வேறொரு நாயனில்லை. (அவனையே நம்பி அவனுக்கே வணக்கம் செலுத்துங்கள்) என்று அவர்களிடம் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொண்டு, பைத்தியம் கொண்ட ஒரு கவிஞனுக்காக எங்களது தெய்வங்களை மெய்யாகவே நாங்கள் விட்டுவிடுவோமா? என்று கூறுகின்றனர். (நபியாகிய அவர் பைத்தியக்காரர்) அல்ல. அவர் உண்மையே கொண்டு வந்தார். தனக்கு முன்னர் வந்த நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார்” (37: 35,36,37)

‘எவனொருவன் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறி அல்லாஹ்வையன்றி வணங்கப்படக் கூடியவை அனைத்தையும் நிராகரிக்கின்றானோ, அவனுடைய பொருளும், அவனுடைய இரத்தமும் ஹராமாகி விடும். (அதாவது அவனுடைய இரத்தத்தை ஓட்டவோ, அவனுடைய பொருளைச் சூரையாடவோ எந்த ஒரு முஸ்லிமும் முற்படக் கூடாது)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

இந்த ஹதீஸின் அர்த்தமாவது, மரணித்தவர்களிடமோ, அவர்கள் அல்லாதவர்களிடமோ தேவைகளைக் கேட்பது போன்ற அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வணக்கம் செலுத்துவதை நிராகரித்து அதனைப் புறக்கணிப்பது, கலிமாவை மொழியக்கூடிய ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

இதில் அபூர்வம் என்னவென்றால், முஸ்லிம்களில் பலர் இந்தக் கலிமாவை நாவினால் மொழிகின்றனர். ஆனால் தங்களுடைய செயல்கள் மூலமாகவும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதன் மூலமாகவும் அதன் அர்த்தத்துக்கு மாறு செய்கின்றனர்.

5. லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது இஸ்லாத்தினதும் தௌஹீதினதும் அஸ்திவாரமாகும். இது வாழ்க்கையின் பூரண வழிகாட்டியாகும். அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வணக்கம் செலுத்தக்கூடிய எல்லா வகைகளையும் இது நெறிப்படுத்துகின்றது. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து அவனை மட்டுமே அழைப்பானென்றால் அவனல்லாத எவருடைய சட்டத்துக்கும் அடிபணியக் கூடாது என்பது அவனுக்குக் கட்டாயப் படுத்தப்படுகிறது.

6. இப்னுரஜப் அவர்கள் ‘அல்இலாஹ்’ (இறைவன் இரட்சகன்) என்ற பதத்துக்குப் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள். இலாஹ் என்பவன் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியவனாகவும், கண்ணியப்படுத்தப்படக் கூடியவனாகவும், விருப்பத்துடனும், அச்சத்துடனும், ஆதரவுடனும் பொறுப்புச் சாட்டப்படக் கூடியவனாகவும், பிரார்த்தனை செய்யப்படக் கூடியவனாகும், மாறு செய்யப்படக் கூடாதவனாகவும் இருக்க வேண்டும். இவையனைத்தும் வல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு மட்டுமே பொருந்தும்.

இறைவனுக்கு மட்டுமே சொந்தமான மேற்கூறப்பட்ட பண்புகளில் ஏதேனுமொன்றைக் கொண்டு படைப்புகளில் ஒன்றை அல்லாஹ்வுடன் எவன் இணையாக்குகின்றானோ அவன், தான் மொழிந்த லாஇலாஹ இல்லல்லாஹ்விலே பிழை விட்டவனாவான். இது படைப்புக்கு வழிபட்டதாக அமைகின்றது.

7. லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவானது ஷிர்க்கைக் கொண்டு அதனை முறித்து விடாதவனுக்கு மட்டுமே பயன்படுகின்றது. உழுவுடன் இருப்பவனுக்கு உலுவை முறிக்கும் செயலொன்று நடந்து விட்டால், எப்படி உலு முறிந்து விடுமோ, அவ்வாறே கலிமா மொழிந்தவன் ஷிர்க் வைத்து விட்டால் அவனுடைய ஈமான் முறிந்து விடுகின்றது. அப்பொழுது அவனுடைய கலிமா அவனுக்கு பயனற்றதாக ஆகி விடுகின்றது.

‘எவனுடைய கடைசி வார்த்தை லாஇலாஹ இல்லல்லாஹ்வாக இருக்கின்றதோ, அவன் சுவர்க்கம் பிரவேசிப்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, ஹாகிம் (ஹஸன்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on லாஇலாஹ இல்லல்லாஹ்வின் அர்த்தம்

அந்நியப் பெண்ணைப் பார்த்தல்

“(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்” (24:30) கண்கள் செய்யும் விபச்சாரம் (விலக்கப்பட்டவைகளைப்) பார்ப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

மார்க்கம் அனுமதிக்கின்ற ஒரு அவசியத் தேவைக்காகப் பார்ப்பது விதிவிலக்காகும். உதாரணமாக ஒருவன் தான் மணமுடிக்க விரும்பும் பெண்ணைப் பார்ப்பது, மருத்துவர் நோயாளையைப் பார்ப்பது போல. இவ்வாறே ஒரு பெண் அந்நிய ஆணை தவறான நோக்குடன் பார்ப்பதும் ஹராமாகும். அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் (நபியே!) நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தம் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்” (24:31)

அதுபோல தாடி, மீசை முளைக்காத இளைஞனையும் அழகான வாலிபனையும் இச்சையுடன் பார்ப்பதும் விலக்கப்பட்டதாகும். ஒரு ஆண் இன்னொரு ஆணின் மர்மஸ்தானத்தையும், ஒரு பெண் இன்னொரு பெண்ணின் மர்மஸ்தானத்தையும் பார்ப்பது ஹராமாகும். எந்த எந்த மர்ம உறுப்பைப் பார்ப்பது கூடாதே அதைத் தொடுவதும் கூடாது. துணிக்கு மேல் தொட்டாலும் சரியே.

சில செய்திதாள்களில், பத்திரிக்கைகளில், சினிமாக்களில் வரக்கூடிய (ஆபாசமான) படங்களை, அவை நிஜமல்லவே, வெறும் படங்கள் தானே எனும் அடிப்படையில் பார்ப்பது ஷைத்தானின் திருவிளையாடல் ஆகும். இவற்றில் தீமைகளும் காம உணர்வு தூண்டப்படுவதும் தான் இருக்கின்றன என்பது வெள்ளிடைமலை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on அந்நியப் பெண்ணைப் பார்த்தல்

சகோதரத்துவத்தை சமாதி கட்டும் முஸ்லிம்களுக்கு

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே! ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். 49:11

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும், உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேச வேண்டாம். 49:12

நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். 13:22

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 23:3

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள் தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள். மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால், ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலிகிப் போய்) விடுவார்கள். 25:63

அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து: ‘எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை’ என்று கூறுவார்கள். 28:55

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தி உடையவர்களுக்கே மேலான முடிவு உண்டு. 28:83

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: ‘நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?’ 41:33

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்குமிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். 41:34

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சகோதரத்துவத்தை சமாதி கட்டும் முஸ்லிம்களுக்கு

தௌஹீதும் அதன் பிரிவுகளும்

அல்லாஹ் தனக்கு அடிபணிவதற்கென்றே படைத்தவை அனைத்தும் (வேறெவருக்கும் வழிபடாமல்) அவனுக்கு மட்டுமே வழிபடுவதில் ஒருமைப் படுத்துவதற்கே தௌஹீத் எனப்படும். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:

“என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை” (51;56)

அதாவது ‘வணக்கத்தில் என்னைத் தனிமைப்படுத்துவதற்கும், பிரார்த்தனையில் என்னை ஒருமைப்படுத்துவதற்குமே நான் படைத்தேன்’ என்பதாக அல்லாஹ் கூறுகிறான். ‘முஹம்மத் (ஸல்) அவர்களுக்காகத்தான் உலகம் படைக்கப்பட்டது’ என்று சொல்லப்படும் கூற்றை மேற்காட்டிய வசனம் பொய்யாக்குவதைக் காணலாம்.

பின்வருமாறு தௌஹீது வகைப்படுத்தப்படும். அவை குர்ஆனிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. “தௌஹீதுர் ரப்பி” (படைப்பதில் ஒருமைப்படுத்தல்) படைப்பவனும் போசிக்கின்றவனும் அல்லாஹ்தான் என்று அறிவதையே “தௌஹீதுர் ரப்பி” குறிக்கும். நிராகரிப்பவர்களில் பலர் இந்த வகையை அறிந்துள்ளனர். இந்த அறிவு அவர்களை இஸ்லாத்தில் பிரவேசிக்கச் செய்யவில்லை. இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:

“அவர்களைப் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின் அல்லாஹ் தான் என்று நிச்சயமாக கூறுவார்கள்” (43:87)

பொது உடமைவாதிகளான நாத்திகர்கள் இறைவன் இருக்கின்றான் என்பதையே மறுக்கின்றனர். இவர்கள் ஜாஹிலிய்யாக் காலத்திலிருந்த காஃபிர்களை விட மோசமானவர்கள்.

“தௌஹீதுல் இலாஹ்” (இரட்சிப்பில் ஒருமைப் படுத்தல்) இது மார்க்கமாக ஆக்கப்பட்ட வணக்க வகைகளில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதாகும். இந்த வகை, துஆக்கேட்டல், உதவிக்கு அழைத்தல், கஃபாவைத் தவாப் செய்தல், அறுத்துப் பலியிடல், நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்களாகும். இந்த வகையைத்தான் காஃபிர்கள் நிராகரிக்கிறார்கள்.

நபி நூஹ் (அலை) அவர்களின் காலம் முதல் முஹம்மத் (ஸல்) அவர்களது காலம் வரை வாழ்ந்த எல்லா நபிமார்களுக்கும் அவர்களுடைய உம்மத்துக்கும் இடையில் இந்த பிணக்கு இருந்து கொண்டே இருந்தது.

அல்குர்ஆன் பல இடங்களில் இந்த அம்சத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றது. “உன்னையே வணங்குகின்றோம்; உன்னிடமே உதவி தேடுகின்றோம்” என்று ஸுரத்துல் பாத்திஹாவில் பிரார்த்தனை புரிவதைக் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே துஆ இறைஞ்சுகின்றோம். ‘வணக்கத்தில் உன்னை மட்டுமே சொந்தமாக்குகின்றோம். உன்னிடம் மட்டுமே பிரார்த்தனை புரிந்து அழைக்கிறோம். உன்னையல்லாத வேறெவரிடமும் உதவி தேட மாட்டோம்’ என்பதே மேற்படி வசனத்தின் அர்த்தமாகும்.

‘தௌஹீதுல் இலாஹ்’ என்பது துஆவிலே அல்லாஹ்வைத் தனிமைப் படுத்துதல், அவனுடைய வேதத்தைக் கொண்டே தீர்ப்பு வழங்குதல், அவனால் ஏற்படுத்தப்பட்ட ஷரீஅத்தையே சட்டமாக அங்கீகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்குவதாகும். பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் அவையனைத்தும் அடங்கியுள்ளன.

“நிச்சயமாக நான் தான் அல்லாஹ்; என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; என்னையே நீர் வணங்குவீராக” (20:14)

“தௌஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத்” (அல்லாஹ்வுடைய பெயர்களிலும், வர்ணனைகளிலும் ஒருமைப் படுத்தல்) அல்லாஹ்வைப் பற்றி அவனும், அவனுடைய ரஸுலும் எவ்வாறு சொன்னார்களோ, அவ்விதமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அமைப்புக்கள், அர்த்தங்கள் கற்பிக்காமல் உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுடைய ஸிபத்துகளில் ‘இஸ்திவாஉ’ (அமைந்து விடல்) ‘நுஸுல்’ (இறங்குதல்) ‘அல்-யது’ (கை) ‘அல் மஜீஉ’ (வருகை) போன்றவைகளும் அடங்குகின்றன.

உதாரணமாக ‘இஸ்திவாஉ’ என்ற சொல்லுக்கு ‘அல் உலுவ்வு’ (உயர்வு) ‘அல் இர்திபாஉ’ (உயர்தல்) என்பன அல்லாஹ்வுக்குப் பொருந்தக் கூடியனவாக இருப்பதாக தாபிஈன்கள் விளக்கமளித்து உள்ளார்கள் என்று ஸஹீஹுல் புகாரியில் பதிவாகி இருக்கின்றது. பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் செவியுறுவோனாகவும் உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான்” (42:11)

1. அத்தஃவீல்: (அர்த்தம் கொடுத்தல்) ‘தஹ்வீல்’ என்றால், சில குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்குமுள்ள வெளிப்படையான அர்த்தங்களைத் திரித்து பிழையான வேறு அர்த்தம் கற்பிப்பதாகும். உதாரணமாக ‘இஸ்தவா’ (சமமானான்) என்ற சொல்லுக்கு, ‘இஸ்தவுலா’ (ஆட்சி செலுத்தினான்) என்று வேறு அர்த்தம் கற்பிப்பதாகும்.

2. அத்தஃதீல்: (உள்ளதை இல்லையென்று கூறல்) அல்லாஹ்வுடைய ஸிபத்துக்களை மறுத்து அவற்றை இல்லையென்று கூறுவதற்கே அத்தஃதீல் என்று சொல்லப்படும். உதாரணமாக வானத்துக்கு மேல் அல்லாஹ்வின் உயர்வு என்பது போன்றாகும். வழிதவறிய கூட்டத்தினர் அல்லாஹ் எங்கும், எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்று கூறுகின்றனர். “ஆறு நாட்களில் வானம் பூமியைப் படைத்து விட்டுப் பின்னர் அர்ஷின் மீது அமைந்து விட்டான்” (32:4) என்ற குர்ஆனின் கூற்றுக்கு, ‘எல்லா இடங்களிலும் அல்லாஹ் இருக்கிறான்’ என்ற பிழையான கூற்று முரண்படுகின்றது.

3. அத்தக்யீப்: (அமைப்பு ஏற்படுத்தல்) அல்லாஹ்வுடைய அமைப்பு இப்படித்தான் என்று கூறி, அவனுடைய ஸிபத்துக்களுக்கு மாதிரி கற்பித்து ஒப்பிடுதலுக்கு ‘அத்தக்யீப்’ என்று சொல்லப்படும். அல்லாஹ் அர்ஷில் அமைந்திருப்பதை அவனுடைய படைப்புக்களுடன் ஒப்பிட முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அவனுடைய அமைப்பை அறிய முடியாது.

4. அத்தம்தீல்: (உதாரணம் கற்பித்தல்) அல்லாஹ்வுடைய ஸிபத்துக்களை அவனுடைய படைப்புக்களுடைய ஸிபத்துக் (அமைப்புக்) களுடன் உதாரணம் கற்பித்து ஒப்பாக்கிக் கூறுவதற்கு ‘அத்தம்தீல்’ எனப்படும். ஸஹீஹ் முஸ்லிமில் ‘அல்லாஹ் முதலாவது வானத்துக்கு இறங்குகிறான்’ என்று கூறப்பட்டுள்ளது. இறங்குகிறான் என்பதை, “நாங்கள் இறங்குவது போன்று இறங்குகிறான்’ என்று உதாரணம் கற்பிக்கக் கூடாது. இறங்குகிறான் என்ற விஷயத்தை மட்டும் சொல்லப்பட்டவாறு உண்மையென அங்கீகரிக்க வேண்டும். இறங்குவதற்கு வேறு அர்த்தமுண்டு என்று சொல்லுதல் வழிகேடாகும்.

‘நாங்கள் இறங்குவது போலவே அல்லாஹ் இறங்குகிறான்’ என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் ஒப்பீடு செய்து காட்டியதாக பொய்யான கதையொன்று கற்பனை செய்யப்பட்டுள்ளது. அவருடைய நூல்கள் எதிலும் இப்படியான ஒன்றை நாங்கள் கண்டதில்லை. ஆனால் அதற்கு மாறாக, ‘தம்தீல்’ (உதாரணம் கற்பித்தல்) ‘தஷ்பீஹ்’ (ஒப்பாக்குதல்) போன்றவற்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தக் கூடாது என்று அவர் தனது நூல்களில் கூறியுள்ளதைக் கண்டு கொள்ளலாம்.

5. அத்தப்வீழ்: (பரம்சாட்டுதல்) அல்லாஹ்வுடைய ஸிபத்துக்களைப் பொறுத்தமட்டில் அவை எப்படி என்பதை எவராலும் விபரிக்க முடியாது. இப்படியான இடத்தில் இதன் அமைப்பு முறையை எவரும் அறிய முயற்சிக்கக் கூடாது. அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறியிருப்பதை அவ்வாறே ஏற்றுக் கொண்டு, அதற்கு மேற்பட்ட விளக்கத்தை அவனிடம் சாட்டி விடுதல். இதனையே ‘அத்தப்வீழ்’ என்று சொல்லப்படும். அமைப்பு முறையிம் மட்டும் தான் இது இடம்பெறும். சொற்களுக்கு அர்த்தம் சொல்வதில் இந்தத் ‘தப்வீழ்’ இடம்பெறாது. உதாரணத்துக்கு ‘அல்இஸ்திவாஉ’ என்ற சொல்லுக்கு ‘அல்உலுவ்வு’ (உயர்தல்) என்று கருதப்படும். ஆனால் இதன் அமைப்பு என்ன? என்பது பற்றி அல்லாஹ் மட்டுமே அறிவான். ‘தப்வீழ்’ பற்றி இங்கு கூறப்பட்ட விளக்கமனைத்தும் ஸலபுஸ்ஸாலிஹீன்களுடையதாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதும் அதன் பிரிவுகளும்

அந்நிய ஆணுடன் பெண் தனியே பயணித்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மண முடிப்பதற்கு விலக்கப்பட்ட ஆண் துணையுடன் அல்லாது ஒரு பெண் பயணம் செய்ய வேண்டாம்’ அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:புகாரி, முஸ்லிம். இத்தடை ஹஜ் எனும் புனிதப் பயணம் உட்பட எல்லாப் பயணங்களையும் உள்ளடக்கும். மணமுடிப்பதற்கு ஆகுமான – அந்நிய ஆணுடன் அவள் பயணம் செல்வது தீய மனிதர்களை அவளுடன் சில்மிஷங்கள் செய்யத் தூண்டும். பலவீனமான அவள் சில போது அதற்கு ஆட்பட வேண்டியது வரும். அல்லது குறைந்த பட்சம் அவளுடைய மானம் மரியாதைக்குக் களங்கமாவது ஏற்பட்டு விடும்.

இது போன்றே அந்நிய ஆணுடன் ஒரு பெண் விமானத்தில் பயணமாவதும் ஹராமாகும். கணவனோ, சகோதரனோ வழி அனுப்பி வைக்கத்தானே செய்கிறார். கணவனோ, சகோதரனோ வரவேற்க வருகிறார் தானே என்று மக்கள் நினைக்கலாம். அப்போதும் அது கூடாததே! ஏனெனில் அவளுக்கு அடுத்த சீட்டில் அவளுடன் பயணம் செய்பவர் யார்? (அந்நியன் தானே!) விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு வேறொரு விமான நிலையத்தில் விமானம் தரை இறக்கப்பட்டாலோ, விமானம் புறப்பட தாமதமாகி விட்டாலோ, புறப்படு நாள் மாறி விட்டாலோ நிலைமை என்னாவது? இது போன்ற சம்பவங்கள் ஏராளம் நடந்திருக்கின்றன.

மஹ்ரமான துணைக்கு நான்கு நிபந்தனைகள் உள்ளன. அவன் முஸ்லிமாக, பருவமடைந்தவனாக, புத்தி சீர் நிலையிலுள்ளவனாக, ஆணாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது போல. ‘அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணுக்கும் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட நாட்கள் பயணமாவது ஹலால் இல்லை. அவளுடன் அவளுடைய தந்தையோ, மகனோ, கணவனோ, சகோதரனோ அல்லது அவள் மணமுடிப்பதற்கு விலக்கப்பட்ட (மஹ்ரமான) ஆண் துணை இருந்தாலே தவிர!’ அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: முஸ்லிம்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on அந்நிய ஆணுடன் பெண் தனியே பயணித்தல்