மார்க்க விசுவாசத்தில், கடமைகளில் குறைவு இருப்பது குறித்து..
49- ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ நோன்புப் பெருநாள் அன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்)அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்றபோது,பெண்கள் சமூகமே! தான தர்மம் செய்யுங்கள்! காரணம் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள் தாம் என எனக்குக் காட்டப்பட்டது என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன?; என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள், கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக மார்க்க கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மனஉறுதியான கணவனின் புத்தியை மாற்றிவிடக் கூடியவர்களாக உங்களை விட வேறுயாரையும் காணவில்லை என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய மார்க்க கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன என்று அப்பெண்கள் கேட்டனர். ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப் படவில்லையா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆம் என அப்பெண்கள் கூறினர். அது தான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது. ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா? என நபி(ஸல்)அவர்கள்கேட்டார்கள். அதற்கும்,ஆம் எனப் பெண்கள் கூறினர் அது தான் பெண்கள் மார்க்க கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-304: அபூ ஸயீதுல் குத்ரி(ரலி)