பொய் சத்தியம் செய்து விற்றல்..

பெருமைக்காக ஆடையை கரண்டைக்குக் கீழ் அணிதல், கொடுத்த தான தர்மங்களைச் சொல்லிக் காட்டுதல், பொய் சத்தியம் செய்து பொருட்களை விற்றல் போன்றவற்றுக்கு மறுமையில் கடுந்தண்டனை குறித்து..
68- மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன்,(மக்களின் பயணப்)பாதையில்-தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன். இன்னொருவன், தன்(ஆட்சித்)தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன், அவர் கொடுத்தால் (மட்டுமே)திருப்தியடைந்து, கொடுக்காமல் விட்டால் கோபம் கொள்பவன். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு(மக்கள் கடைவீதியில் திரளும் போது)தன் வியாபாரப் பொருளைக் காட்டி, எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக(இதைக் கொள்முதல் செய்யும் போது) நான் இன்ன(அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒரு மனிதர் உண்மையென நம்பும்படி செய்தவன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்)ஆவான்.

இதைக் கூறி விட்டு,எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ.. என்னும் இந்த(3:77) இறைவசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள்.

புகாரி-2358: அபூஹூரைரா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பொய் சத்தியம் செய்து விற்றல்..

அவதூறு கூறி விரோதத்தை ஏற்படுத்துதல்..

அவதூறு கூறி விரோதத்தை ஏற்படுத்துதல் பற்றி..
67- கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று ஹூதைஃபா(ரலி) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6056: ஹம்மாம் பின் ஹாரிஸ்(ரஹ்)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அவதூறு கூறி விரோதத்தை ஏற்படுத்துதல்..

ஒப்பாரி, கன்னங்களில் அடித்துக் கொள்வது..

ஒப்பாரி வைப்பது கன்னங்களில் அடித்துக் கொள்வது, சட்டையைக் கிழித்துக் கொள்வது, அறியாமைக் கால கலாச்சாரங்களில் ஈடுபடுவது குறித்து..
65- (துன்பத்தின் போது)கன்னங்களில் அறைந்து கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-1298: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி)

66- (என் தந்தை)அபூ மூஸா தமது கடுமையான மரண வேதனையால் மயக்கமடைந்து விட்டார். அவரது தலை அவரது மனைவியின் மடியில் இருந்தது. தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்பு மயக்கம் தெளிந்த போது நிச்சயமாக நபி(ஸல்)அவர்கள் (துன்பத்தின்போது)அதிக சப்தமிட்டு அழும் பெண்ணை விட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் ஆடைகளை கிழித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் தம்மை விலக்கிக் கொண்டார்கள். எவரிடமிருந்து நபி(ஸல்)அவர்கள் தம்மை விலக்கிக் கொண்டார்களோ அவரிடமிருந்து நானும் விலகிக் கொள்கிறேன், என்று கூறினார்.
புகாரி-1296: அபூ புர்தா பின் அபீ மூஸா

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஒப்பாரி, கன்னங்களில் அடித்துக் கொள்வது..

நம்மைச் சார்ந்தவனல்ல..

நம்மை எதிர்க்க ஆயதமேந்துபவன் நம்மைச் சார்ந்தவனல்ல..

63- நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-7070: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

64- நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-7071: அபூ மூசா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நம்மைச் சார்ந்தவனல்ல..

இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்

வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்..

53. நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று கூறினார்கள்.
புகாரி :4477 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)

பெரும் பாவங்கள் குறித்து..
54- (ஒரு முறை)பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் (மூன்றுமுறை)கேட்டார்கள். மக்கள்,ஆம் அல்லாஹ்வின்தூதரே!(அறிவியுங்கள்)என்று சொன்னார்கள். உடனேநபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும்(தான் அவை)என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள். பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்)தான் என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதா, என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக்கூறிக் கொண்டிருந்தார்கள்.
புகாரி-2654: அபூபக்ரா(ரலி)

55- நபி(ஸல்)அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றிக்கேட்கப்பட்டது. நபி(ஸல்)அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றொருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும்பாவங்களாகும்) என்று கூறினார்கள்.
புகாரி-2653: அனஸ்(ரலி)

56- அழித்தொழிக்கும் ஏழு பெரும்பாவங்களைத் தவிருங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நுபி(ஸல்)அவர்கள்,அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது எனஅல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஒடுவதும்,அப்பாவிகளான இறைநம்பிக்கைக் கொண்ட,கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்(அந்தப் பெரும் பாவங்கள்)என்று பதில் கூறினார்கள்.
புகாரி-2766: அபூஹுரைரா(ரலி)

57-ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும், என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு
நபி(ஸல்)அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார், உடனே(பதிலுக்கு)அவர் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார்.(ஆக,தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)என்றார்கள்.
புகாரி-5973: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)

இணைவைக்காது மரணித்தோர் சுவனில்..
58- யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார், என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (அப்படியாயின்) யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார் என நான் கூறுகிறேன்.
புகாரி-1238: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரலி)

59- எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்à®
•ள் கூறினார்கள். உடனே நான்,அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா? எனக்கேட்டேன். அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-1237: அபூதர்(ரலி)

60- நபி(ஸல்)அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொணடபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹவைத் தவிர வேறெவரும் இல்லை)என்று சொல்லி பிறகு அதே நம்பிக்கையில் இறந்து விடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகந்தே தீருவார், என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள். நான் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? ஏன்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் “அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி(சொர்க்கம் புகந்தே தீருவார்)” என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி(சொர்க்கம் புகந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக)அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? ஏன்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திரடினாலும் சரி(சொர்க்கம் புகுந்தே தீருவார்)அபூதரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!(அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)என்று கூறினார்கள்.

அபூதர்(ரலி)அவர்கள் இதை அறிவிக்கும் போது அபூதரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே, என்று கூறிவந்தார்கள்.
புகாரி-5827: அபூதர்(ரலி)

வணக்கத்திற்குறிய நாயன் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒரு நிராகரிப்பவன் வாயால் மொழிந்த பின் அவனைக் கொல்வது பற்றி..
61- பனூ ஸூஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும், அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களுடன் பத்ரில் கலந்து கொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல் கிந்தீ(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களிடம், இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்து விட்டான். பிறகு, அவன் என்னை விட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, அல்லாஹ்வுக்கும் கீழ்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன் என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின்தூதரே! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின்தூதர் நபி(ஸல்)அவர்கள்,(வேண்டாம்) அவனைக் கொல்லாதே என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி)அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்து விட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்! என்றுகேட்க, அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள்,அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்று விட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த(குற்றமற்ற)நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த(குற்றவாளியான) நிலைக்கு நீ சென்று விடுவாய், என்று கூறினார்கள்.
புகாரி-4019: உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார்(ரஹ்)

62- எங்களை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் ஹுரக்கா கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம்.(அவர்களுடன் நடந்த சண்டையில்)அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது, அவர் -லா இலாஹ இல்லல்லாஹ்- அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிகà
¯ கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி)வந்தபோது நபி(ஸல்)அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், உஸாமாவே! அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று (ஏகத்துவ வாக்கியத்தை)மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்? என்று கேட்டார்கள். நான் (நாங்கள் அவரைக் கொன்று விடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு சொன்னார் என்று சொன்னேன்.(ஆனால் என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்)அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே,(பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன்.
புகாரி-4269: உஸாமா பின் ஸைத்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்

நாம் பிரார்த்திக்க தகுதியான ஒரே இறைவன்

அவன் (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்.

அவன் மனிதனை இந்தியத் துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமானஎதிரியாக இருக்கிறான்.
கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ளஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்.

அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலைநேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்து விடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொழிவும்)அழகுமிருக்கிறது.

மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன – நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.

இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன; மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்து விடுவான்.

அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களூக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.

அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம் (ஜைத்தூன்) மரத்தையும், பேரித்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் – நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.

இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன – நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள் பறவைகள் போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருட்கொடைகளை நன்றியுடன்)நினவு கூறும் மக்களுக்கு(த் தக்க)அத்தாட்சியுள்ளது.

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும்,நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும்அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரை பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்கு சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளைநிறுத்தினான்;இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும், பாதைகளையும் (அமைத்தான்)

(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்)நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.

(அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத) (நீங்கள் வணங்குப)வைபோலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா?

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட்கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்கமன்னிப்பவனாகவும், மிகக் கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான்.

அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ. அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.

அவர்கள் இறந்தவர்களே – உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்போழுது எழுப்பப்படுவார்கள்என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல் குர்ஆன்: அத்தியாயம் 16, வசனம் 3 லிருந்து 21 வரை.
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நாம் பிரார்த்திக்க தகுதியான ஒரே இறைவன்

கவனத்தில் கொள்ளுங்கள்!

‘நான் (உங்களுக்கு எதுவும் கூறாது) விட்டுவிடும் போது, நீங்களும் என்னை (கேள்விகள் கேட்காது) விட்டுவிடுங்கள்! ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள்! எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி 7288, முஸ்லிம் 1337, இப்னு ஹுஸைமா 2508, இப்னு ஹிப்பான் 18,21, பைஹகீ குப்ரா 1693 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் விளக்கம்: இந்த ஹதீஸ், தேவையற்ற கேள்விகளை நபி (ஸல்) அவர்களிடம் கேட்கக் கூடாது என்பதைச் சொல்கிறது. ஏனெனில் அக்கேள்விகளுக்கு பதில் சொன்னால் அது உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்கும், அல்லது சில வணக்க வழிபாடுகள் கட்டாய கடமையாக்கப்படலாம். ஏனென்றால் முன்சென்ற சமுதாயத்தினர் கேள்விகளை அதிகம் கேட்டார்கள், கடமையாக்கப்பட்ட போது அதை மீறினார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்தே விளங்குகிறது. இறைகட்டளைகளை மொத்த சமுதாயமும் மீறும் போது அவர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை உங்களால் முடிந்தவரை எடுத்து நடவுங்கள். அதாவது இங்கே ‘உங்களால் முடிந்த அளவு’ என்பதன் பொருளை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்’ என்ற 3:102 வது வசனம் இறக்கப்பட்ட போது நபித்தோழர்கள், ‘அல்லாஹ் விரும்புவது போன்று எவ்வாறு நம்மால் அஞ்ச முடியும், அவ்வாறு அஞ்ச வில்லையானால் நாம் தண்டிக்கப்படுவோமே’ என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது, ‘ஆகவே, உங்களால் இயன்ற அளவு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்’ (63:07) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.

இந்த இடத்தில் இன்னொரு வசனத்தையும் நினைவுபடுத்திக் கொள்வது அவசியமாகும். ‘அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை’ (2:286)ஒரு மனிதனின் நியாயமான அதிகபட்ச முயற்சி என்னவென்பது அவரவர்களுக்கு நன்றாகவே தெரியும். மனிதனை வேண்டுமானால் அவன் எளிதாக ஏமாற்றிவிட முடியும். படைத்த இறைவனை ஏமாற்ற முடியாது. இதை அல்லாஹ்வை அஞ்சும் விஷயத்தில் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on கவனத்தில் கொள்ளுங்கள்!

மானம் இழந்திருத்தல்

அதாவது மனைவியைக் கூட்டிக் கொடுத்தல். இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாவது: ‘மூன்று பேருக்கு அல்லாஹ் சுவனத்தை தடை செய்திருக்கிறான். அவர்கள், மதுவுக்கு அடிமையானவன், பெற்றோரை நிந்திப்பவன், தன் மனைவியிடம் பிறர் மானக்கேடாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளும் அளவு மானம் இழந்தவன் ஆகியோராகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அஹ்மத்)

நமது காலத்தில் இதற்கு உதாரணமாவது:

வீட்டிலுள்ள மனைவி அல்லது மகளின் செயல்களைக் கண்டு கொள்ளாதிருத்தல். அவர்கள் அந்நிய ஆடவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பரஸ்பரம் காதல் உரையாடலைப் பகிர்ந்து கொள்கின்றனர். அதுபோல தம் வீட்டுப் பெண் ஒரு அந்நிய ஆணுடன் தனித்திருப்பதை அனுமதிப்பது, மேலும் வீட்டு டிரைவர் போன்ற அந்நிய ஆடவருடன் தனியாக அவளைப் பயணம் செய்ய விடுவது, இன்னும் பர்தா இல்லாமல் அவள் வெளியேறுவதை அனுமதிப்பது, அதனால் வருவோர் போவோரின் கண்களுக்கு அவள் விருந்தாக நேரிடும். மேலும் தீமைகள் மற்றும் ஆபாசங்களைப் பரப்புகின்ற பத்திரிக்கைகளையும், சினிமா கேசட்டுகளையும் வீட்டில் நுழைய விடுவது போன்றவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Posted in எச்சரிக்கை | Comments Off on மானம் இழந்திருத்தல்

சத்தியத்தைக் கொண்டு இறங்கிய வேதம்!

54:17. நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

39:27. இன்னும் இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

3:138. இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கிறது.

6;90. “இதற்காக நான் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.

16:89. அது (குர்ஆன்) யாவற்றையும் தெளிவாய் விவரிக்கக் கூடியதாய் இருக்கிறது…

17:105. இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கி வைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது; மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.

17:106. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி பகுதியாகப் பிரித்தோம்; இன்னும், நாம் அதனைப் படிப்படியாக இறக்கி வைத்தோம்.

17:107. (நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்குக் கூடுதல், குறைவு எதுவுமில்லை) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் வேத ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதி காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது – சிரவணக்கம் செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

17:108. அன்றியும், “எங்கள் இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

17:109. இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.

17:110. “நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறிவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும், இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக.

17:111. “அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும்,எந்த வித பலகீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கின்றானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சத்தியத்தைக் கொண்டு இறங்கிய வேதம்!

ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

43 நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரலி) கூறியதாவது: ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம், அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறைநிராகரிப்பாகும்.
புகாரி 48 :அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி).

ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு நிராகரிப்போராகாதீர்..

44- நபி(ஸல்)அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது(மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்)என்னிடம் மக்களை அமைதியுடன் செவிதாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக! என்று கூறினார்கள்.(மக்கள் அமைதியுற்ற பின்னர்)எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என்று சொன்னார்கள்.
புகாரி-121: ஜரீர்(ரலி)

45- நபி(ஸல்)அவர்கள்(தமது விடைபெறும் ஹஜ் உரையில்) ; ; உங்களுக்கு கேடுதான் (வைலக்கும்) அல்லது உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்) ; ; எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள், என்று கூறினார்கள். புகாரி 6166 :இப்னுஉமர்(ரலி)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..