ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அ(ல்லாஹ்)வனை துதி செய்து கொண்டு இருக்கின்றனர்; இன்னும் அ(ல்லாஹ்)வன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக அ(ல்லாஹ்)வன் பொறுமையுடையோனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 17:44)
அவனை துதி செய்யாத பொருள் பூமியில் உண்டா
அனைத்துக்கும் மூல ஆதாரம் குர்ஆன் மற்றும் சுன்னா மட்டுமே!
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் குர்ஆனைக் கொண்டும், சரியான ஸுன்னாவைக் கொண்டும் தீர்ப்பு வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அவ்விரண்டின் பக்கமே தீர்ப்புக் கேட்டுச் செல்லவும் வேண்டும். பின்வரும் மறைவசனத்தைக் கொண்டே அவ்வாறு செயல்பட வேண்டும்.“அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக!” (5:49)
‘அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டே தீர்ப்பளித்து, அல்லாஹ் அருளியவற்றையே தேர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய தலைவர்களுக்கும், அவர்களுடைய சமூகத்தவர்களுக்கும் அல்லாஹ் பலத்தைக் கொடுக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: இப்னு மாஜா (ஹஸன்)இஸ்லாமிய நாடல்லாத அந்நிய நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்படுகின்ற பிரான்ஸ் சட்டம், ஆங்கிலேய சட்டம் ஆகியவற்றுக்கு அடிபணியாதிருப்பது கடமையாகும். இஸ்லாத்துக்கு முரண்படுகின்றவாறு தீர்ப்புகள் வழங்கப்படும் நீதிமன்றங்களுக்கு அவர்கள் செல்லாதிருக்க வேண்டும். அறிவாளிகளில் நம்பிக்கையானவர்களிடத்தில் இஸ்லாத்தின் தீர்ப்பைக் கொண்டு நீதி கேட்க வேண்டும். இதுவே அவர்களுக்கு சிறந்தது.ஏனென்றால் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் நீதியாகத் தீர்ப்பு அளிக்கின்றது. நகரங்களிலுள்ள நீதிமன்றங்களுக்குச் சென்று எந்தவிதப் பயனுமற்றதாக வீணாக்கக்கூடிய பணத்தையும், நேரத்தையும் அது சேமித்துக் கொடுக்கின்றது.அவ்வாறு வீணாக்கிக் கொண்டு, இஸ்லாத்துக்கு மாறான தீர்ப்பை எதிர்பார்க்கின்றவனுக்கு மறுமையில் இரட்டிப்பான வேதனையுண்டு. ஏனென்றால் அவன், நீதியுள்ள அல்லாஹ்வுடைய சட்டத்தைப் புறக்கணித்து விட்டு, அநீதியாக நடந்து கொள்ளும், அல்லாஹ்வுடைய படைப்பின் சட்டத்தில் ஒதுங்கிக் கொண்டவனாகிறான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
பால் Vs மது
106- என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூஸா (அலை) அவர்களைப் பார்த்தேன். அவர்கள் ஷனூஆ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணைத் தடவிப்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈஸா அவர்களைப் பார்த்தேன். அவர் நடுத்தர வயதுடைய சிகப்பான மனதராகவும் (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்றும் இருந்தர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நான் தான். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது. மற்றொன்றில் மது இருந்தது (வானவர்) ஜிப்ரீல் (அலை); அவர்கள், இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அதைக் குடியுங்கள் என்று கூறினார்கள். நான் பாலை எடுத்துக் குடித்தேன். நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக் கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும் என்று சொன்னார்கள்.
வறுமையும் பிணியும் ஏன்?
நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. (அல்குர்ஆன்: 7:94)
தஜ்ஜாலின் தோற்றம் குறித்து….
105- நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அங்கிருந்தவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறும் போது அவனுடைய இருகண்களுக்கு மத்தியில் காஃபிர் என எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றதும் இப்னு அப்பாஸ் (ரலி) நான் இதை நபி (ஸல்) கூறக் கேட்கவில்லை. எனினும் மூஸா (அலை) தல்பியா கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை நான் காண்பது போன்று உள்ளது என நபி (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன் என்றார்.
இவர்கள் தெய்வங்களா?
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் (இயேசுவையும்) தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் (அல்லாஹ்) அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன்: 9:31)
விலகாமல் செல்லும் கோள்கள்
கேள்வி எண்: 6. எந்நேரமும் சதா சுழன்று, சுற்றிக் கொண்டிருக்கும் பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் இதர கோள்களும் அதனதன் பாதைகளிலிருந்து விலகி சென்றிடாமல் தாம் தடுத்துக் கொண்டிருப்பதாக இறைவன் கூறும் திருமறை வசனம் எது?பதில்: “நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்” (அல்குர்ஆன்: 35:42)
சிறு விளக்கம்: இப்பிரபஞ்சத்தில் (Universe) பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும் (விண்ணடுக்குகள் – Galaxies) அவற்றில் எண்ணற்ற நட்சத்திரங்களும் (Stars) அந்த நட்சத்திரங்களின் கட்டுப்பாட்டில் பல கோடிக்கணக்கான கோள்களும் (Planets) இருக்கின்றன. இப்பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்றுதான் நமது பூமி மற்றும் சூரியன் இருக்கும் பால்வெளி விண்ணடுக்கு (Milkyway Galaxies) ஆகும். இந்த பால்வெளி விண்ணடுக்கில் நமது சூரியக்குடும்பமும் இதைப்போன்ற இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் இருக்கின்றன. நமது சூரியக்குடும்பத்தில் நாம் வசிக்கும் பூமியும் இன்னும் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர், நெப்டியூன், புளுட்டோ, சனி போன்ற கோள்களும் அவற்றிற்கு பல சந்திரன்களும் இருக்கின்றன.இந்த சந்திரன்கள் கோள்களின் ஈர்ப்பாற்றலால் கட்டுண்டு இருக்கின்றன. கோள்கள் சூரியனின் ஈர்ப்பாற்றலால் கட்டுண்டு இருக்கின்றன. சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் விண்ணடுக்குகளில் காணப்படும் ஈர்ப்பாற்றலால் அந்த விண்ணடுக்குகளில் இருந்து விலகிச் செல்லாமல் இருக்கின்றன.நமது பூமி, சந்திரனை சூரியக்குடும்பத்திலிருந்து விலகி சென்றிடாமல் பாதுகாப்பாக தடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஈர்ப்பாற்றல்கள் என்றுமே மாறாத (Constant) தன்மையுடையதா என்றால் இல்லை என்றே நவீன அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஈர்ப்பாற்றல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கக் கூடியது. பின்னர் அவைகள் நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஈர்ப்பாற்றலில் மாற்றம் ஏற்படும் என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால்,
- வானம், பூமியைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவற்றைப் படைத்த இறைவன் உருவாக்கியிருக்கும் ஈர்ப்பாற்றல் தான்.
- இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த ஈர்ப்பாற்றல், அல்லாஹ் நீக்கி விட்டால் வானங்கள், பூமி இவைகள் ஒன்றோடொன்றிலிருந்து விலகி சென்று விடும். அதை நிறுத்த வேறு யாராலும் முடியாது
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
நபி (ஸல்) அவர்கள் கண்ட அல்லாஹ்வின் சான்றுகள்
104- நான் (மிஃராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவர்களை ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான சுருள் முடிகொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா அவர்களை நடுத்தர உயரமும், சிகப்பும், வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் (சுருள்,சுருளாக இல்லாமல்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும் (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகாப்பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்கு காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை நீங்கள் அவனை (தஜ்ஜாலை) சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவனே உங்கள் அல்லாஹ்!
நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் – எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்? (அல்குர்ஆன்: 6:95)
ஹராமானவற்றை உண்ணுதல்
இறையச்சம் இல்லாதவன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதிக்கிறோம் அதை எவ்வழியில் செலவு செய்கிறோம் என்பதைப் பொருட்படுத்த மாட்டான். மாறாக, அவனுடைய அக்கரை தன் செல்வத்தை அதிகப்படுத்துவதிலேயே இருக்கும். அது திருடுதல், லஞ்சம் வாங்குதல், பிறருடைய பொருளை அபகரித்தல், மோசடி செய்தல், ஹராமான வியாபாரம், வட்டி கொடுக்கல் வாங்கல், அநாதையின் சொத்தை அபகரித்தல் ஆகியவற்றின் மூலமாகவோ அல்லது ஜோதிடம், விபச்சாரம், இசை போன்ற ஹராமான காரியங்களின் பேரில் கிடைக்கக் கூடிய கூலியின் மூலமாகவோ அல்லது பொது சொத்துகளில் கை வைத்தல், பிறரிடம் வற்புறுத்திக் கேட்டு பெறுதல், தேவையின்றி யாசகம் கேட்டல் போன்ற ஹராமான வழியின் மூலமாகவோ கிடைத்தாலும் சரியே! பின்னர் அவன் அதிலிருந்தே உண்பான், உடுத்துவான், வாகனம் வாங்குவான், வீடு கட்டுவான், அதை வாடகைக்கு அமர்த்துவான், வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குவான், ஹராமைக் கொண்டே தன் வயிற்றை நிரப்பிக் கொள்வான் . நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘ஹராமிலே வளர்ந்த ஒவ்வொரு உடலுக்கும் நரகமே பொருத்தமாகும்’ (தப்ரானி)
மறுமையில் அவனுடைய செல்வம் பற்றி – அதை எங்கிருந்து சம்பாதித்தாய்? எவ்வழியில் செலவழித்தாய்? என்று அவனிடம் விசாரணை செய்யப்படும். அங்குதான் அவனுக்கு நஷ்டமும், நாசமும் காத்திருக்கிறது. எனவே யாரிடம் ஹராமான பொருள் எஞ்சியிருக்கிறதோ அவர் விரைந்து தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளட்டும். அது ஒரு மனிதனுக்குரிய உரிமையாக இருந்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அதை அவரிடம் விரைந்து திருப்பிக் கொடுத்து அவரிடம் மன்னிப்புக் கோரட்டும். அந்த மறுமை நாள் வந்து விட்டாலோ விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. மாறாக, நன்மை, தீமைகளைக் கொண்டே தீர்க்கப்படும்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.