தொழுகை கடமையாகுதல்!

103- நான் இறை இல்லம் கஃபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விளிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தட்டு என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காரை எழும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம் ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பபட்டது. கோவேறுக் கழுதையை விட சிறியதும் கழுதையை விட பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன்.

முதல் வானத்தை நாங்கள் அடைந்தோம். யார் அது என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் (வந்திருப்பவர்) யார் என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளித்தார். அவரை அழைத்து வரச்சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா? என்று கேட்கப்பட்து. ஆம் என்றார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் (என்) மகனும் இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவு ஆகுக என்று சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாகங்கள் சென்றோம். யார் அது என்று வினவப்பட்டது. அவர் ஜிப்ரீல் என்று பதிலளிக்க உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கவர் முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆள்அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவர் ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும் யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும் என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம் யார் அது என்று கேட்கப்பட்டது, ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், சகோரரும் நபியுமான உங்களின் வரவு நல்வரவாகட்டும், என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது, முஹம்மது என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது.ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன்,அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் ஜந்தாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை, என்று (வாழ்த்து) சொல்à
®²à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à¯. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை)அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது,ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது.முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளிக்கப்பட்டது. அவரது வருகை நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.அவர் இறைவா! என் சமுதாயத்தினரில் சுவர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சுவர்க்கம் புகுவார்கள்,என்று பதிலித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று வினவப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது.உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள், மகனும் நபியுமான உங்கள் வரவு நல்லவரவாகட்டும் என்று சொன்னார்கள்.

பிறகு அல் பைத்துல் மஃமூர் எனும் வளமான இறை இல்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர் இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள்.அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும் என்று சொன்னார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ஹஜ்ர் எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன.(ஸல்ஸபீல்,கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ்,நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், உள்ளேயிருப்பவை இரண்டும் சுவர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.

பிறகு என் மீது ஜம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள் என்ன செய்தாய் என்று கேட்டார்கள். நான் என் மீது ஜம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள் என்று சொன்னார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் à®
¨à®¾à®±à¯à®ªà®¤à®¾à®• ஆக்கினான். பிறகு முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஜந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்ன செய்தாய்? என்று கேட்க, அதை இறைவன் ஜந்தாக ஆக்கி விட்டான் என்றேன். அதற்கு அவர்கள் முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள்.அதற்கு, நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன் என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக) நான் என் (ஜந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமுல்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஜம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன் என்று அறிவிக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-3207: மாலிக் பின் ஸாஃஸா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகை கடமையாகுதல்!

நோவினை செய்யும் வேதனை என்ற நன்மாராயம்!

ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (அல்குர்ஆன்: 9:34)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நோவினை செய்யும் வேதனை என்ற நன்மாராயம்!

மற்றவருடைய சிபாரிசு பயனளிக்குமா?

2:48. “நீங்கள் மறுமை நாளை அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்! அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்குப் பலனளிக்காது. எந்தவொரு ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்காகப் பரிந்து பேசுவதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாக) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்”.

2:123. “எந்த நாளில் ஒரு ஆத்மா மற்றவொரு ஆத்மாவுக்கு எந்தப் பலனையும் அளிக்காதோ அந்நாளைப் பயந்துக் கொள்ளுங்கள். அந்த ஆத்மாவிடமிருந்து எந்தவொரு பரிகாரமும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. அதற்காக எவர் பரிந்துரைத்தாலும் பலனில்லை. அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்”.

40:18. “அநீதி செய்பவர்களுக்கு உதவியாளர்கள் அந்நாளில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். அனுமதி பெற்ற சிபாரிசுகாரர்களும் இருக்கமாட்டார்கள்”.

74:48. “அவர்களுக்காகப் பரிந்து பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது”

70:40-48. சுவனத்திலிருப்பவர்கள் நரகவாதிகளைப் பார்த்து உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என முஷ்ரிக்குகளான குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘நாங்கள் தொழக்கூடியவர்களில்லை. ஏழைகளுக்கு நாங்கள் ஆகாரமளிக்கவில்லை. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் சேர்ந்து நாமும் வீணில் மூழ்கிக் கிடந்தோம். கூலிகள் வழங்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். நாங்கள் மரணித்து இதை உறுதியாகக் காணும் வரையில் இவ்வாறே இருந்தோம்’ என்று கூறுவார்கள். எனவே அவர்களுக்காகப் பரிந்துரை பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது”

2:255. “அல்லாஹ்வுடைய அனுமதியின்றி அவனிடத்தில் எவருக்காக யாரால்தான் பரிந்துபேச முடியும்…?”

53:26. “வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். அவர்கள் (எவருக்காகவும்) ஷபாஅத்துச் செய்தாலும் அது எந்தப் பயனும் அளிக்காது. ஆனால் அல்லாஹ் தான் விரும்பி திருப்திப்பட்டு எவருக்கு ஷபாஅத்துக்கு அனுமதி கொடுக்கின்றானோ (அத்தகையவர் பரிந்துப் பேசுவது பயனளிக்கும்).”

21:28. “அவர்களுக்கு முன்பின் இருப்பவற்றை அவன் நன்றாக அறிகின்றான். அவன் விரும்பியவர்களுக்கன்றி மற்றெவருக்கும் இந்த மலக்குகள் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அவனுக்கஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்”

34:23. “அல்லாஹ்வுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறெவருடைய சிபாரிசு செய்வதும் பலனளிக்காது.”

10:18. “முஷ்ரிக்குகள் தமக்கு நன்மையோ தீமையோ எதுவும் செய்யமுடியாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர்”.

6:51. “நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை”

32:4. “அல்லாஹ் தான் வானங்கள் பூமி இவற்றுக்கிடையிலுள்ளவை அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்து பிறகு அர்ஷின் மீது ஸ்திரப்பட்டான். உங்களை இரட்சிப்பதற்கும், உங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும் அவனை தவிர வேறு ஒருவருமில்லை. இதனை நீங்கள் சிந்திக்கவேண்டாமா?”.

39:43-44. “இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே! (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்”.

20:109. “அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து அவர்களின் பேச்சைக் கேட்க விரும்பினானோ அவர்களைத் தவிர மற்றெவருடைய சிபாரிசும் பயனளிக்காது.”

36:22-23. “என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அவனையன்றி (மற்றெதனையும், எவரையும்) இறைவானாகிய நான் எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு அதில் ஒன்றையுமே என்னை விட்டுத் தடுத்துவிடாது. அதிலிருந்து என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது”.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மற்றவருடைய சிபாரிசு பயனளிக்குமா?

உருவம் இல்லாமலேயே நீ தங்கியிருந்த இடம்!

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, ( பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 6:98)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உருவம் இல்லாமலேயே நீ தங்கியிருந்த இடம்!

நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் பற்றி…

102- நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம் ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு, அதை மூடி விட்டார்கள். பிறகு ஜிப்ரீல் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் திற என்றார்கள். அவ்வானவர், யார் அவர்? என்று வினவினார். அதற்கு நான் தான் ஜிப்ரீல் என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், உம்முடன் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மது இருக்கிறார்கள், என்ற கூறினார்கள். அதற்கு வானவர் அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா? என்று கேட்டார், ஜிப்ரீல் ஆம் என்றார்கள். (இந்தக் கேள்விகளுக்குப் பின்னர்) வானவர், முதல் வானத்தைத் திறந்து கொடுத்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறிச் சென்றோம். அப்போது அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அவரின் வலது பக்கம் சில மனிதர்களும் இடது பக்கம் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தமது வலது பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தமது இடதுப் பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார். இந்நிலையிலுள்ள அம்மனிதர் நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இவர் யார்? என நான் கேட்டேன். இவர் தான் ஆதம். அவருடைய வலது பக்கமும் இடது பக்கமும் உள்ளவர்கள் அவருடைய சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலது பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள், இடது பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள்ஆவர். அவர் தமது வலது பக்கம் பார்த்துச் சிரிக்கிறார், தமது இடது பக்கம் பார்த்து அழுகிறார் என்று கூறினார்கள்.

பின்னர் ஜிப்ரீல்(அலை)என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தின் காவலரிடம் திற எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்வியைப் போலவே இவரும் கேட்டு விட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி) கூறுகிறார்கள்: –

வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம் (அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி (ஸல்) குறிப்பிட்டார்கள். ஆனால் முதல் வானத்தில் ஆதம் (அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை- ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு இத்ரீஸ் (அலை) பக்கமாகச் சென்ற போது நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக! என இத்ரீஸ் (அலை) கூறினார்கள். அப்போது இம்மனிதர் யார்? என நான் கேட்டேன். இவர் இத்ரீஸ் (அலை) என ஜிப்ரீல் (அலை) பதில் கூறினார்கள்.

பின்னர் மூஸா (அலை) பக்கமாகச் சென்றபோது நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக! எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டேன். இவர் தான் மூஸா (அலை) என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். பின்னர் ஈஸா (அலை) பக்கமாகச் சென்றபோது நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக! எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டேன். இவர் ஈஸா (அலை) என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். பின் இப்ராஹீம் (அலை) பக்கமாக நான் சென்றேன். அப்போது நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக! என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல் (அலை) இடம் கேட்டேன். இவர் இப்ராஹீம் (அலை) என்று கூறினார்கள்.

-இப்னு அப்பாஸ் (ரலி) அபூஹப்பா அல் அன்ஸாரி (ரலி) ஆகியோர் அறிவிக்கும் வேறு ஒரு அறிவிப்பில் பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச்சென்ற போது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. அல்லாஹ் உனது உம்மதà¯
à®¤à®¿à®©à¯ மீது ஜம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் (அதை ஏற்றுத்) திரும்பி நான் வந்து கொண்டிருந்தபோது, மூஸா (அலை) பக்கமாகச் சென்றேன். அப்போது உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்? என்று கேட்டார்கள். ஜம்பது நேரத் தொழுகையை கடமையாக்கினான் என்றேன். நீங்கள் இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் அதற்கு சக்தி பெற மாட்டார்கள். என மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். நான் திரும்பச் சென்றேன். அப்போது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதைப் பெற்றுக் கொண்டு) நான் மூஸா (அலை) இடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். நீங்கள் உங்கள் இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் அதற்குச் சக்தி பெற மாட்டார்கள் என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா (அலை) இடம் வந்தேன். (கொஞ்சம் குறைத்தான் என்றேன்) நீங்கள்உங்கள் இறைவனிடம் திரும்பச்செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் இதற்கு சக்திபெற மாட்டார்கள். என்றார்கள். நான் திரும்பச் சென்றேன் அப்போது ஜந்து நேரத் தொழுகையை கடமையாக்குகிறேன். அது ஜம்பதிற்குச் சமம். எனது சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா (அலை) இடம் வந்தேன். அப்போது உங்கள் இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள் என்றார்கள். இனிமேல் எனது இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) நான் வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்.

பின்னர் ஜிப்ரீல் (அலை) என்னை ஸித்ரதுல் முன்தஹா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழ்ந்திருந்தன.அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் நான் நுழைக்கப்பட்டேன். அதில் முத்துக்களினால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-349: அபூதர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் பற்றி…

யா அய்யுஹல் முத்தஸ்ஸீர்!

101- நான் அபூ ஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் முதன் முதலாக அருளப் பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார் போர்த்தியிருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸீர்) எனும் (74:1 ஆவது) வசனம் என்றார்கள். நான் (நபியே!) படைத்த உங்கள் இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (96:1 ஆவது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகின்றார்கள் என்றேன். அதற்கு அபூ ஸலமா அவர்கள் நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். நீங்கள் (என்னிடம்) கேட்டது போலவே நானும் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக்குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப்பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. ஆகவே நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை நான் கண்டேன். ஆகவே நான் (என் துணைவியாரான) கதீஜாவிடம் சென்று,எனக்குப் போர்த்திவிடுங்கள். குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்! என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தி விட்டார்கள். என் மீது குளிந்த நீரையும் ஊற்றவும் செய்தார்கள். அப்போது போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும் உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள் எனும் (74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன.

புகாரி- 4922: யஹ்யா பின் அபீ கஸீர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on யா அய்யுஹல் முத்தஸ்ஸீர்!

அணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு

கேள்வி எண்: 5. அணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு என்ற இன்றைய அறிவியல் கருத்தை கூறும் வசனம் எது?

பதில்: இதன் வசனம் 34:3, 10:61.

சிறு விளக்கம்: அறிவியலில் இயற்பியல் என்றொரு பிரிவு இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பிரிவுதான் அணுக்களைப் பற்றிய பாடமாகும். அணு என்பது ஒரு பொருளின் மிக மிக சிறிய துகளாகும். இந்த அணு என்பதே மிகச்சிறிய பொருள் என்றும், இதை யாராலும் பிளக்க முடியாது என்ற தத்துவத்தை 23 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறியவர் டெமாக்ரேட்ஸ் (Democritus) என்ர கிரேக்க அறிஞர். அரபுலகிலும் சரி உலகின் மற்ற பாகங்களிலும் சரி இந்தக் கொள்கையே பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அறிவியலின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்ட இக்காலத்து விஞ்ஞான உலகம், ஓர் அணுவை எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியுட்ரான்கள் என பிரிக்க முடியும் என்று நிரூபித்து விட்டனர். அணு என்பதற்கு அரபியில் ஜர்ராஎன்று அழைக்கப்படுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனால் அருளப்பட்ட அருள்மறை திருக்குர்ஆனில் இந்த அணுவை விடச் சிறிய பொருட்களும் உண்டு என கூறியிருப்பின் இது நமக்கு எல்லோருக்கும் ஆச்சரியமளிக்காதா என்ன? ஆம் திருக்குர்ஆன் இந்த உண்மையையும் கூறுகிறது.எனினும் நிராகரிப்பவர்கள் ‘(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராதுஎன்று கூறுகிறார்கள். அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும். அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன். வானங்களிலோ பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது. இன்னும் அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹூல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக” (அல்குர்ஆன்: 34:3, 10:61.)

இவ்வசனத்தில் அணுவை விடச் சிறியதோ அல்லது பெரியதோ என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் அணுவைவிட சிறிய பொருட்களும் உண்டு என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை கூறியிருப்பதை நாம் அறியலாம்.

Posted in கேள்வி பதில் | Comments Off on அணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு

நபியே நீர் கூறும்!

(நபியே!) நீர் கூறும்: ”உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்) வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (அல் குர்ஆன் 6:65)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நபியே நீர் கூறும்!

முஃமினான சகோதரியே!

 முஃமினான சகோதரியே! உன் முன்னால் உயர்வான பதினோறு உபதேசங்களை வைக்கின்றோம். உன் நலன் கருதிய மார்க்கச் சகோதரனாய். அவற்றை நீ கடைப்பிடித்துக் கொள். நிச்சயமாக அல்லாஹ் நாடினால் நீ பாக்கியசாலியாக வாழ்ந்து, புகழத்தக்க நிலையில் மரணிப்பாய்.மேலும் இவற்றை கடைப்பிடித்தொழுக அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொள்.

  1. சங்கை மிகு இறை வேதத்திலும் அவனது திருத்தூதரின் நடைமுறையிலும் வணக்கங்களாக மார்க்கமாக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வை மட்டுமே நீ வணங்கி வர வேண்டும்.

  2. கொள்கைகளிலும் வணக்கத்திலும் அல்லாஹ்விற்கு இணை வைப்பதை விட்டும் நீ தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இணை வைப்பது நல்ல செயல்களை அழித்து, நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

  3. பித்அத்துக்களைத் தவிர்ந்து கொள். அது வணக்க வழிபாடுகளில் இருந்தாலும் அல்லது கொள்கைகளில் இருந்தாலும் சரியே. ஏனெனில் பித்அத் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேட்டைப் பின்பற்றுபவன் நரகத்திற்குச் செல்வான். பித்அத் என்பது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையாகும்.

  4. தொழுகையில் முழுமையான பேணுதலுடன் இருந்து வா. நிச்சயமாக யார் தொழுகையைப் பேணி பாதுகாத்து வருகிறார்களோ, அவர்கள் மற்றவற்றையும் மிகப் பேணுதலாக செய்து வருவார்கள். யார் தொழுகையைப் பாழாக்கி விடுகிறார்களோ அவர்கள் மற்றவற்றையும் பாழ்படுத்துபவர்களாவார்கள்.

  5. உனக்கு கணவனிருந்தால் அவனுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள். அவன் விரும்புகின்ற எதையும் நீ மறுத்து விடாதே. அவன் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்யாமல் ஏவுகின்ற அவனது ஏவல் விலக்கல்களுக்கு மாறு செய்யாதே.

  6. உனது கணவன் ஊரிலிருக்கும் போதும் இல்லாத போதும் உனது கற்பையும் அவனது பொருளையும் பாதுகாத்துக் கொள்.

  7. உனது அண்டை வீட்டுப் பெண்களிடம் சொல்லாலும் செயலாலும் அழகிய முறையில் நடந்து கொள்.

  8. உனது பெற்றோருக்கு உபகாரம் செய்வது கொண்டு அவர்களிடம் நன்முறையில் நடந்து கொள்ளவும். அவர்கள் இருவரிடத்திலும் சொல், செயலால் வேதனை செய்யாமலிருப்பதற்கும், நன்மையான காரியங்களில் அவர்கள் இருவருக்கும் கட்டுப்பட்டு நடந்து கொள்ளவும். நன்மையல்லாதவற்றை அவர்கள் ஏவினால் அவைகளுக்கு கட்டுப்படாமல் இருப்பதற்கும் பழகிக்கொள். ஏனெனில் படைத்தவனுக்கு மாறு செய்வதில் படைக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்படுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

  10. குழந்தைகள் இருப்பின் சிறந்த முறையில் அவர்களுக்கு உண்மை, ஆரோக்கியம், சிரந்த சொற், செயல்கள், நல்லொழுக்கம், அழகிய குணங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க பழகிக் கொள். ஏழு வயதை அடையும் போது தொழும் படியும் ஏவிக்கொள்.

  11. திக்ரு செய்து அல்லாஹ்வை தியானிப்பதையும், தர்மம் செய்வதையும் அதிகப்படுத்திக் கொள். உனக்கும், உனது கணவன், குழந்தைகளுக்கும் போக எஞ்சியவை குறைவாக இருப்பினும் ஏழைகளுக்குக் கொடுத்து உதவிக்கொள். ஏனெனில் நிச்சயமாக தர்மம் தீய விபத்துக்களை விட்டும் பாதுகாக்கிறது.
               

இஸ்லாமிய பெண்ணுக்கு ஒரு நூல்

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on முஃமினான சகோதரியே!

போர்வை போர்த்தியவரே எழுவீராக!

100 -நான் நடந்து கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒருக் குரலைக்கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்கும் இடையே ஒரு ஆசனத்தில் அமர்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (வீட்டிற்குத்) திரும்பி வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது போர்வை போர்த்தியவரே எழுவீராக! (மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக! (74:1) என்பது தொடங்கி அசுத்தங்களை விட்டு ஒதுங்கி விடுவீராக! என்பது வரை ஜந்து வசனங்களை இறைவன் அருளினான் என நபி (ஸல்) கூறினார்கள். வஹீ நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றிக் கூறும் போது ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) இதை அறிவித்தார். அவர் மேலும் அதன் பின் வஹீ அடிக்கடி தொடர்ந்து வரலாயிற்று என்று கூறினார்.

புகாரி-4: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on போர்வை போர்த்தியவரே எழுவீராக!