‘ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து மீள்வதுமில்லை (அதுபற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (அல் குர்ஆன் 9:126)
இறை சோதனையில் நல்லுணர்ச்சி பெறுவதில்லையே!
சத்தியத்துடன் வந்த உண்மை தூதர்!
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) தூதர்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு, நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
4:165. தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
4:166. (நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சி கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
4:167. நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்துக் கொண்டி இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் வழிகெட்டுச் சென்று விட்டார்கள்.
4:168. நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்; அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.
4:169. நரகத்தின் வழியைத் தவிர – அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.
4:170. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்) தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.
அல் குர்ஆன்: அன்னிஸாவு. (பெண்கள்)
திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமில்லாமல் கடன் கேட்பது
மனித உரிமைகளுக்கு அல்லாஹ்விடம் அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறினால் தவ்பா செய்வதம் மூலம் பரிகாரம் பெறலாம். ஆனால் மனித உரிமைகளில் தவறிழைத்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அவற்றை நிறைவேற்றாத வரை தப்பிக்க முடியாது. அந்நாளில் விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. மாறாக, நன்மை, தீமைகளைக் கொண்டே தீர்க்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: “அடைக்கலப் பொருள்களை அவற்றிற்கு உரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” (4:58)
சமுதாயத்தில் பரவலாக காணப்படும் தீமைகளில் ஒன்று தான் கடன் வாங்குவதைச் சாதாரணமாகக் கருதும் போக்கும். சிலர் மிக அவசியத் தேவைக்காகக் கடன் வாங்குவதில்லை. அவர்கள் கடன் வாங்குவதெல்லாம் இருக்கும் வளத்தை அதிகப்படுத்தும் ஆர்வத்தில்தான். மேலும் வாகனம், வீட்டின் அலங்காரப் பொருள் போன்ற அழியும் உலக சாதனங்களை – குப்பைகளைப் புதிது புதிதாகப் பயன்படுத்துவதில் பிறருடன் போட்டி போடும் எண்ணத்தில் தான் கடன் வாங்குகின்றனர். இத்தகையவர்கள் பெரும்பாலும் தவணை முறையில் கொடுக்கல், வாங்கல் செய்யும் வியாபாரங்களில் (Instalment) ஈடுபட்டு விடுகின்றனர். அவை பெரும்பாலும் ஹராமாகவோ அல்லது ஹராமா ஹலாலா என சந்தேகம் கொள்ளும் வியாபாரமாகவோ தான் இருக்கின்றன.
கடன் வாங்குவதை சர்வசாதாரணமாக நினைப்பது திருப்பிக் கொடுப்பதைக் கால தாமதம் செய்வதன் பால், அல்லது அடுத்தவர்களுடைய பணத்தை பாழாக்கி அதை அழிப்பதன் பால் இட்டுச் செல்லும். இச்செயலின் முடிவு பற்றி எச்சரித்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்: ‘யார் திருப்பிக் கொடுத்திட வேண்டுமென்ற நோக்கோடு மக்களின் பொருள்களை (கடனாக) வாங்குகிறாரோ அதனை அல்லாஹ் திருப்பிக் கொடுத்து விடுகிறான். (அதாவது அவர் திருப்பிக் கொடுக்க அல்லாஹ் அவருக்கு உதவுகிறான்) அப்பொருளை நாசப்படுத்திடும் நோக்கில் வாங்கினால் அதனை அல்லாஹ் நாசமாக்கி விடுவான்’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி).
ஆம்! கடன் விஷயத்தில் மக்கள் ரொம்பவும் அலட்சியமாக இருக்கின்றனர். அதை இலேசாகவும் கருதுகின்றனர். ஆனால் அதுவோ அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய விஷயமாக இருக்கிறது. மட்டுமின்றி ஒரு உயிர்தியாகிக்கு – மிகப்பெரும் பாக்கியம், அளப்பரிய கூலி, மிக உயர்ந்த அந்தஸ்து இவையெல்லாம் இருந்தும் கூட கடனை நிறைவேற்றாத குற்றத்திலிருந்து அவர் தப்பிக்க முடியாது.
இதற்கு ஆதாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற்யுள்ளார்கள்; ‘சுப்ஹானல்லாஹ்! கடன் விஷயத்தில் எவ்வளவு கடுமையான எச்சரிக்கையை அல்லாஹ் இறக்கி வைத்திருக்கிறான் தெரியுமா? என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ர்ப்பிக்கப்படுகிறார் எனில் அவர் மீது கடன் பாக்கி இருந்தால் அக்கடனை நிறைவேற்றாத வரை அவர் சொர்க்கம் செல்ல மாட்டார்’
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஜஹ்ஸ் (ரலி) நூல்: நஸயீ.
இத்தனைக்குப் பிறகும் கடன் விஷயத்தில் அலட்சியமாக இருப்பவர்கள் திருந்துவார்களா?
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கிய வஹீயின் துவக்கம் பற்றி…
99- நபி(ஸலà¯)஠வரà¯à®à®³à¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®µà®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®±à¯à®à¯à®à¯à®¯à¯à®¤à®¿ தà¯à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ தà¯à®©à¯à®±à¯à®®à¯ நலà¯à®² à®à®©à®µà¯à®à®³à®¿à®²à¯à®¯à¯ வநà¯à®¤à®¤à¯. ஠பà¯à®ªà¯à®¤à¯ ஠வரà¯à®à®³à¯ à®à®¨à¯à®¤à®à¯ à®à®©à®µà¯ à®à®£à¯à®à®¾à®²à¯à®®à¯ ஠த௠஠திà®à®¾à®²à¯à®ªà¯ பà¯à®´à¯à®¤à®¿à®©à¯ விà®à®¿à®¯à®²à¯à®ªà¯ பà¯à®²à®¤à¯ தà¯à®³à®¿à®µà®¾à® à®à®°à¯à®à¯à®à¯à®®à¯. பினà¯à®©à®°à¯ தனிமà¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ ஠வரà¯à®à®³à®¿à®©à¯ விரà¯à®ªà¯à®ªà®®à®¾à®¯à®¿à®±à¯à®±à¯. ஹிரா à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ ஠வரà¯à®à®³à¯ தனிதà¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯, தமத௠à®à¯à®à¯à®®à¯à®ªà®¤à¯à®¤à®¾à®°à®¿à®à®®à¯ திரà¯à®®à¯à®ªà®¿ வரà¯à®µà®¤à®±à¯à®à¯ à®®à¯à®©à¯ பல à®à®°à®µà¯à®à®³à¯ (à® à®à¯à®à¯ தà®à¯à®à®¿ à®à®°à¯à®¨à¯à®¤à¯) வணà®à¯à®à®µà®´à®¿à®ªà®¾à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®à¯à®ªà®à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯. ஠நà¯à®¤ நாà®à¯à®à®³à¯à®à¯à®à®¾à®© à®à®£à®µà¯ தமà¯à®®à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®à¯à®²à¯à®µà®¾à®°à¯à®à®³à¯. (஠நà¯à®¤ à®à®£à®µà¯ à®®à¯à®à®¿à®¨à¯à®¤à®¤à¯à®®à¯) à®®à¯à®£à¯à®à¯à®®à¯ (தமத௠தà¯à®£à¯à®µà®¿à®¯à®¾à®°à¯) à®à®¤à¯à®à®¾ (ரலி) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ திரà¯à®®à¯à®ªà®¿ வரà¯à®µà®¾à®°à¯à®à®³à¯. ஠தà¯à®ªà¯ பà¯à®©à¯à®±à¯ பல நாà®à¯à®à®³à¯à®à¯à®à¯à®±à®¿à®¯ à®à®£à®µà¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®à¯à®²à¯à®µà®¾à®°à¯à®à®³à¯. à®à®¨à¯à®¤ நில௠ஹிராà®à¯ à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ ஠வரà¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®¤à¯à®¤à®¿à®¯à®®à¯ வரà¯à®®à¯ வர௠நà¯à®à®¿à®¤à¯à®¤à®¤à¯.
(à®à®°à¯à®¨à®¾à®³à¯) à®à®°à¯ வானவர௠à®à®¤à¯à®µà¯à®°à®¾à® à®à®©à¯à®±à®¾à®°à¯. ஠தறà¯à®à®µà®°à¯à®à®³à¯ நான௠à®à®¤à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à®µà®©à®¿à®²à¯à®²à¯à®¯à¯ à®à®©à¯à®±à®¾à®°à¯à®à®³à¯. ஠லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ à®à®¨à¯à®¨à®¿à®²à¯à®¯à¯ பினà¯à®µà®°à¯à®®à®¾à®±à¯ விளà®à¯à®à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯: ‘஠வர௠à®à®©à¯à®©à¯à®ªà¯ பிà®à®¿à®¤à¯à®¤à¯ நான௠à®à®¿à®°à®®à®ªà¯à®ªà®à¯à®®à¯ ஠ளவிறà¯à®à¯ à®à®±à¯à®à®à¯ à®à®à¯à®à®¿à®¯à®£à¯à®¤à¯à®¤à®¾à®°à¯. பிறà®à¯ à®à®©à¯à®©à¯ விà®à¯à®à¯ விà®à¯à®à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯, à®à®¤à¯à®µà¯à®°à®¾à® à®à®©à¯à®±à®¾à®°à¯. (஠பà¯à®ªà¯à®¤à¯) நான௠à®à®¤à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à®µà®©à®¿à®²à¯à®²à¯à®¯à¯! à®à®©à¯à®±à¯à®©à¯. à®à®°à®£à¯à®à®¾à®µà®¤à¯ à®®à¯à®±à¯à®¯à¯à®®à¯ ஠வர௠à®à®©à¯à®©à¯à®ªà¯ பிà®à®¿à®¤à¯à®¤à¯ நான௠à®à®¿à®°à®®à®ªà¯à®ªà®à¯à®®à¯ ஠ளவிறà¯à®à¯ à®à®±à¯à® à®à®à¯à®à®¿à®¯à®£à¯à®¤à¯à®¤à¯ à®à®©à¯à®©à¯ விà®à¯à®à¯ விà®à¯à®à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à®¤à¯à®µà¯à®°à®¾à®, à®à®©à¯à®±à®¾à®°à¯ (஠பà¯à®ªà¯à®¤à¯à®®à¯) நான௠à®à®¤à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à®µà®©à®¿à®²à¯à®²à¯à®¯à¯! à®à®©à¯à®±à¯à®©à¯. ஠வர௠à®à®©à¯à®©à¯à®ªà¯ பிà®à®¿à®¤à¯à®¤à¯ à®®à¯à®©à¯à®±à®¾à®µà®¤à¯ à®®à¯à®±à¯à®¯à¯à®®à¯ à®à®à¯à®à®¿à®¯à®£à¯à®¤à¯à®¤à¯ விà®à¯à®à¯à®µà®¿à®à¯à®à¯,பà®à¯à®¤à¯à®¤à®µà®©à®¾à®à®¿à®¯ à®à®®à¯à®®à¯à®à¯à®¯ à®à®°à®à¯à®à®à®©à®¿à®©à¯ திரà¯à®ªà¯à®ªà¯à®¯à®°à®¾à®²à¯ à®à®¤à¯à®µà¯à®°à®¾à®! ஠வன௠தான௠மனிதன௠஠லà®à¯à®à®¿à®²à¯ (à®à®°à¯à®µà®³à®°à¯à®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ à®à®°à®®à¯à®ª நிலà¯) à®à®°à¯à®¨à¯à®¤à¯ பà®à¯à®¤à¯à®¤à®¾à®©à¯. à®à®¤à¯à®µà¯à®°à®¾à®! à®à®®à®¤à¯ à®à®°à®à¯à®à®à®©à¯ à®à®£à¯à®£à®¿à®¯à®®à¯ மிà®à¯à®à®µà®©à¯ à®à®©à¯à®±à®¾à®°à¯; à®®à¯à®²à¯à®®à¯ à®à®¯à®¿à®·à®¾ (ரலி) à®à¯à®±à®¿à®¯à®¤à®¾à®µà®¤à¯, பிறà®à¯ à®à®¤à®¯à®®à¯ பà®à®ªà®à®¤à¯à®¤à®µà®°à¯à®à®³à®¾à®- ஠நà¯à®¤ வà®à®©à®à¯à®à®³à¯à®à®©à¯ (தமத௠தà¯à®£à¯à®µà®¿à®¯à®¾à®°à¯) à®à¯à®µà¯à®²à®¿à®¤à®¿à®©à¯ à®®à®à®³à¯ à®à®¤à¯à®à®¾ (ரலி)விà®à®®à¯ வநà¯à®¤à¯ à®à®©à¯à®©à¯à®ªà¯ பà¯à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯ à®à®©à¯à®±à®¾à®°à¯à®à®³à¯. à®à®¤à¯à®à®¾ (ரலி) ஠வரà¯à®à®³à¯, நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯à®ªà¯ பà¯à®°à¯à®¤à¯à®¤à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯. (நà®à¯à®à¯à®à®®à¯ தà¯à®°à¯à®¨à¯à®¤à®¤à¯à®®à¯) à®à®¤à¯à®à®¾ (ரலி)விà®à®®à¯ நà®à®¨à¯à®¤ à®à¯à®¯à¯à®¤à®¿à®¯à¯à®¤à¯ தà¯à®°à®¿à®µà®¿à®¤à¯à®¤à¯ விà®à¯à®à¯à®¤à¯ தமà®à¯à®à¯ à®à®¤à¯à®®à¯ நà¯à®°à¯à®¨à¯à®¤à¯ விà®à¯à®®à¯ à®à®©à®¤à¯ தாம௠à®à®±à¯à®¤à®¿à®¯à®¾à® à® à®à¯à®à¯à®µà®¤à®¾à®à®µà¯à®®à¯ à®à¯à®±à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯. ஠பà¯à®ªà¯à®¤à¯ à®à®¤à¯à®à®¾ (ரலி) ஠வரà¯à®à®³à¯; ஠வà¯à®µà®¾à®±à¯ à®à¯à®±à®¾à®¤à¯à®°à¯à®à®³à¯. ஠லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ à®®à¯à®¤à¯ à®à®£à¯à®¯à®¾à® à®à®à¯à®à®³à¯ à®à®°à¯ பà¯à®¤à¯à®®à¯ ஠லà¯à®²à®¾à®¹à¯ à®à®´à®¿à®µà¯à®ªà®à¯à®¤à¯à®¤ மாà®à¯à®à®¾à®©à¯. (à®à®©à¯à®©à®¿à®²à¯) தாà®à¯à®à®³à¯ à®à®±à®µà®¿à®©à®°à¯à®à®³à¯à®à®©à¯ à®à®£à®à¯à®à®¿ à®à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à¯à®°à¯à®à®³à¯ (à®à®¿à®°à®®à®ªà¯à®ªà®à¯à®µà¯à®°à®¿à®©à¯) à®à¯à®®à¯à®à®³à¯à®¤à¯ தாà®à¯à®à®³à¯ à®à¯à®®à®¨à¯à®¤à¯ à®à¯à®³à¯à®à®¿à®±à¯à®°à¯à®à®³à¯. வறியவரà¯à®à®³à¯à®à¯à®à®¾à® à®à®´à¯à®à¯à®à®¿à®±à¯à®°à¯à®à®³à¯, விரà¯à®¨à¯à®¤à®¿à®©à®°à¯à®à®³à¯ à®à®ªà®à®°à®¿à®à¯à®à®¿à®±à¯à®°à¯à®à®³à¯. à®à®£à¯à®®à¯à®¯à®¾à®© à®à¯à®¤à®©à¯à®à®³à®¿à®²à¯ (à®à®à¯à®ªà®à¯à®à¯à®°à¯à®à¯à®à¯) à®à®¤à®µà®¿à®ªà¯à®°à®¿à®à®¿à®©à¯à®±à¯à®°à¯à®à®³à¯ à®à®©à¯à®±à®¾à®°à¯à®à®³à¯.
பினà¯à®©à®°à¯ நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯à®¤à¯ தமத௠தநà¯à®¤à¯à®¯à®¿à®©à¯ à®à®à®©à¯ பிறநà¯à®¤à®µà®°à®¾à®© நவà¯à®à®ªà®²à¯ à®à®©à¯à®ªà®µà®°à®¿à®©à¯ à®®à®à®©à¯ வராà®à®¾à®µà®¿à®à®®à¯ à®
à®´à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®©à¯à®±à®¾à®°à¯à®à®³à¯. நவà¯à®à®ªà®²à¯ à®
à®à®¤à¯ à®à®©à¯à®ªà®µà®°à®¿à®©à¯ à®®à®à®©à¯à®®à¯ à®
à®à®¤à¯, à®
பà¯à®¤à¯à®²à¯ à®à®¸à¯à®¸à®¾à®µà®¿à®©à¯ à®®à®à®©à¯à®®à®¾à®µà®¾à®°à¯. வராà®à®¾ à®
றியாமà¯à®à¯ à®à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯à®¯à¯ à®à®¿à®°à¯à®¸à¯à®¤à®µ à®à®®à®¯à®¤à¯à®¤à¯ தழà¯à®µà®¿à®¯à®µà®°à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. à®®à¯à®²à¯à®®à¯ à®
வர௠ஹிபà¯à®°à¯ à®®à¯à®´à®¿à®¯à®¿à®²à¯ à®à®´à¯à®¤à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à®µà®°à®¾à®à®µà¯à®®à¯. à®à®©à¯à®à¯à®²à¯ வà¯à®¤à®¤à¯à®¤à¯, ஹà¯à®ªà¯à®°à¯ à®®à¯à®´à®¿à®¯à®¿à®²à¯ à®à®´à¯à®¤à®µà¯à®£à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®±à¯ à®
லà¯à®²à®¾à®¹à¯ நாà®à®¿à®¯ à®
ளவà¯à®à¯à®à¯ à®à®´à¯à®¤à¯à®à®¿à®±à®µà®°à®¾à®à®µà¯à®®à¯ à®à®£à¯ பாரà¯à®µà¯à®¯à®±à¯à®± பà¯à®°à¯à®®à¯ வயà¯à®¤à®¿à®à®°à®¾à®à®µà¯à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. à®
வரிà®à®®à¯ à®à®¤à¯à®à®¾ (ரலி), à®à®©à¯ தநà¯à®¤à¯à®¯à®¿à®©à¯ à®à®à¯à®¤à®°à®©à¯ à®®à®à®©à¯! à®à®®à¯ à®à®à¯à®¤à®°à®©à¯ à®®à®à®©à¯ à®à¯à®±à¯à®µà®¤à¯à®à¯ à®à¯à®³à¯à®à¯à®à®³à¯ à®à®©à¯à®±à®¾à®°à¯à®à®³à¯. à®
பà¯à®ªà¯à®¤à¯ வராà®à®¾ நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à®¿à®à®®à¯ , à®à®©à¯ à®à®à¯à®¤à®°à®°à¯ à®®à®à®©à¯! நà¯à®°à¯ à®à®¤à¯à®à¯ à®à®£à¯à®à¯à®°à¯? à®à®©à®à¯à®à¯à®à¯à®à®¾à®°à¯. நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯; தாம௠பாரà¯à®¤à¯à®¤ à®à¯à®¯à¯à®¤à®¿à®à®³à¯ à®
வரிà®à®®à¯ à®à¯à®©à¯à®©à®¾à®°à¯à®à®³à¯. (à®
தà¯à®à¯ à®à¯à®à¯à®à®¤à¯à®®à¯) வராà®à®¾ (நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à®¿à®à®®à¯) à®à®µà®°à¯ தாமà¯, à®®à¯à®¸à®¾à®µà®¿à®à®®à¯ à®à®±à¯à®µà®©à¯ à®
னà¯à®ªà¯à®ªà®¿à®¯ நாமà¯à®¸à¯ (à®à®¿à®ªà¯à®°à¯à®²à¯) à®à®µà®¾à®°à¯ à®à®©à¯à®±à¯ à®à¯à®±à®¿à®µà®¿à®à¯à®à¯ à®à®®à®¤à¯ à®à®®à¯à®à®¤à¯à®¤à®¾à®°à¯ à®à®®à¯à®
®à¯ à®à®®à®¤à¯ நாà®à¯à®à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®±à¯à®®à¯ à®à®®à®¯à®¤à¯à®¤à®¿à®²à¯ நான௠à®à®¯à®¿à®°à¯à®à®©à¯ திà®à®à®¾à®¤à¯à®¤à®¿à®°à®®à®¾à®© à®à®³à¯à®à®©à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯! à®à®©à¯à®±à¯à®®à¯ à®
à®à¯à®à®²à®¾à®¯à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¾à®°à¯. à®
பà¯à®ªà¯à®¤à¯ நபி (ஸலà¯)à®
வரà¯à®à®³à¯, à®®à®à¯à®à®³à¯ à®à®©à¯à®©à¯ வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®±à®µà®¾ பà¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯? à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à®¾à®°à¯à®à®³à¯. à®
தறà¯à®à®µà®°à¯ à®à®®à¯! நà¯à®°à¯ à®à¯à®£à¯à®à¯ வநà¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ பà¯à®©à¯à®± à®à®¤à¯à®¤à®¿à®¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ வநà¯à®¤ à®à®¨à¯à®¤ மனிதரà¯à®®à¯ (à®®à®à¯à®à®³à®¾à®²à¯) பà®à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®³à¯à®³à®ªà¯à®ªà®à®¾à®®à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¤à®¿à®²à¯à®²à¯. (நà¯à®°à¯ வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®±à®ªà¯à®ªà®à¯à®®à¯) à®
நà¯à®¨à®¾à®³à¯ நான௠à®
à®à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ à®à®®à®à¯à®à¯à®ªà¯ பலமா஠à®à®¤à®µà®¿ à®à¯à®¯à¯à®µà¯à®©à¯ à®à®©à¯à®±à¯ à®à¯à®±à®¿à®©à®¾à®°à¯. à®
தன௠பிறà®à¯ வராà®à®¾ நà¯à®£à¯à® நாள௠வாழாமல௠à®à®±à®¨à¯à®¤à¯ விà®à¯à®à®¾à®°à¯. à®à®¨à¯à®¤ à®®à¯à®¤à®±à¯à®à¯à®¯à¯à®¤à®¿à®¯à¯à®à®©à¯ வஹ௠à®à®¿à®±à®¿à®¤à¯ à®à®¾à®²à®®à¯ நினà¯à®±à¯ பà¯à®¯à®¿à®±à¯à®±à¯.
நபி (ஸல்) அவர்கள் உலகிற்கு வந்த நோக்கம் பற்றி..
‘அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! ஆனால் நீங்கள் புறக்கணித்தால், அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால், நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை. (அல்குர்ஆன்: 24:54)
துன்பமான வேதனைக்கு உரியவர்கள்
இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும்; எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும்; பாவமன்னிப்பு இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன்: 4:18)
“தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா”
98- அல்லாஹ்வின்தூதர் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி( ஸல்) அவர்கள், அபூதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன்.அதற்கு அவர்கள்,இது இறைவனுக்கு(அவனது அரியாசனத்திற்குக் கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காகச் செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம் நீ எங்கிருந்து வந்தாயோ,அந்த இடத்திற்கே திரும்பிச் செல், என்று சொல்லப்பட்டு விட்டதைப் போன்று இருக்கும். உடனே அது மறைந்த இடத்திலிருந்து (இறுதிநாளில்) உதயமாகும், என்று சொல்லி விட்டு, அது தான் அது நிலைகொள்ளும் இடமாகும் (தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா) என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்களது ஓதல் முறைப்படி (36:38-ஆவது வசனத்தை) ஓதினார்கள்.
தூக்கம் சிறு மரணமே!
கேள்வி எண்: 4. பிரிட்டீஷ் விஞ்ஞானி டாக்டர் அப்துல்லா அலிசன்-ஐ பிரமிக்கச் செய்து அவர் சத்திய மார்க்கத்தைத் தேர்வு செய்ய காரணமான ‘ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலிலிருந்து வெளிச் செல்கிறது என்றும், எப்பொழுது திரும்புகிறதோ அது வந்தவுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது என்றும், ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை’ என்ற அவரது ஆய்வு முடிவை மெய்ப்படுத்தும் திருமறை வசனம் எது? இது பற்றிய சிறு விளக்கம் தருக.
பதில்: இதன் வசனம் 39:42.
இதன் விளக்கம்: இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் தலைவராக பணியாற்றுபவர் தான் டாக்டர் அலிசன். தூக்கம், மரணம் இவற்றைப் பற்றி பல ஆய்வுகள் செய்த இவர், இறுதியில் தம்முடைய எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் உதவியுடன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் முடிவில் ‘ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலிலிருந்து வெளிச் செல்கிறது என்றும், எப்பொழுது திரும்புகிறதோ வந்தவுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது என்றும், ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை’ என்று கண்டறிந்தார்.
அதே நேரத்தில் திருக்குர்ஆனையும் ஆய்வு செய்த இவர், பல வசனங்கள் இன்றைய அறிவியலோடு ஒத்துப் போவதையும் பின்வரும் வசனம் அவரின் ஆய்வு முடிவை மெய்ப்பித்திருப்பதையும் அறிந்து பெரும் வியப்பிற்குள்ளானார். அந்த வசனம் இதுதான்.
“அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணைவரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் — சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன”. (அல்குர்ஆன்: 39:42)
இறைவனின் இவ்வசனத்தைக் கண்டு அதிசயித்த இவர், எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடந்த ‘குர்ஆன் ஒளியில் மருத்துவம்’ என்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், தாம் சத்திய மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாக கூறினார். மேலும், அவர் கூறுகையில், இஸ்லாத்தில் இந்த அளவுக்கு அறிவியல் நுணுக்கங்களும், அத்தாட்சிகளும் இருப்பதை மேலை நாடுகளும், அறிவியல் உலகமும் (விஞ்ஞானிகளும்) அறியாமல் இருப்பதைக் கண்டு வருத்தமுறுவதாகவும், அதற்கு காரணம்; இத்தனை அறிவியல் நுணுக்கங்கள் நிறைந்த இஸ்லாமிய மார்க்கத்தை பிற மதத்தவர்களுக்கு முஸ்லிம்கள் எடுத்துக்கூற தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
அவருடைய இந்தக் குற்றச்சாட்டில் நிறைய உண்மைகள் இருப்பதை நாம் மறுக்க முடியாது. வெறும் சடங்கு சம்பிரதாயங்களுக்காக (பாத்திஹாக்கள்) ஓதப்படும் மந்திர புத்தகமாகவும், பட்டுத்துணியில் போர்த்தி அலமாரியில் வைக்கப்படும் புனித பொருளாகவும், பேய், பிசாசுகளிலிருந்து பாதுகாவல் பெற தலையணைக்குள் வைத்துப் படுக்கும் பாதுகாவல் புத்தகமாகவும் தான் நாம் குர்ஆனைப் பயன்படுத்துகிறோமே தவிர, அது கூறும் அறிவியல் அத்தாட்சிகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் நாம் கவனிப்பதில்லை.
இந்நேரம் கொள்ளும் விசுவாசம் பயனளிக்காது என்பது பற்றி..
97- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும் போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கைக் கொள்வார்கள். அது எந்த மனிதருக்கும் அவரது (அப்போதைய புதிய) நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும் என்று கூறிவிட்டு, உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில் முன்னரே நம்பிக்கைக் கொள்ளாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) நம்பிக்கைக் கொள்வது எவ்வித பயனையும் அளிக்காது எனும் இந்த (6:158 ஆவது) வசனத்தை ஓதினார்கள்.
புகாரி-4636: அபூஹூரைரா(ரலி)
இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகங்கள்
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம். அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்). தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். (அல்குர்ஆன்: 43: 33,34,35)