“நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”. (அல்குர்ஆன்: 39:7)
தன்னை நிராகரிப்பதை அறவே விரும்பாதவன்
உயிரற்றதிலிருந்தே உயிரினம் தோன்றியது
கேள்வி எண்: 14. உயிரினங்கள் என்பது உயிரற்ற அணுக்களால் உருவான சேர்மங்களின் (Molecules) தொகுப்பே என்ற நவீன அறிவியலாளர்களின் கூற்றை மெய்ப்படுத்தும் இறை வசனமாகிய “நீயே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகின்றாய்: நீயே உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துகின்றாய்” என்ற வசனம் எது?
பதில்: “(நாயனே) நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய். நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய். மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய். மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றி கொடுக்கின்றாய்” (அல்குர்ஆன்: 3:27)
சிறு விளக்கம்: நாம் உயிரினங்கள் என்பது எண்ணற்ற செல்களால் ஆன ஒரு மூலக்கூறு என்பதைப் படித்திருக்கின்றோம். அதாவது ஒரே ஒரு செல்லிலிருந்து செல் டிவிசன் என்ற முறையில் பல்கிப் பெருகி கோடிக்கணக்கான செல்களால் உருவானதே உயிரினங்களின் உடல்கள். இந்த ஒவ்வொரு செல்லிலும் DNA என்ற சேர்மம் (Molecule) இருக்கிறது. இதுவே உயிரினங்களின் தோற்றத்திற்கு மூலக்காரணமாய் அமைந்த சேர்மம் ஆகும். DNA என்ற இந்த சேர்மத்தை தோற்றுவிக்கும் மூலப்பொருள் அமினோ அமிலம் (Amino Acid) என்ற மூலக்கூறு ஆகும். இந்த அமினோ அமிலம் எப்படி உருவாகின்றது எனில், அம்மோனியா, மீதேன், நீர், போன்ற மூலக்கூறுகளுடன் (Molecules) மின்னல் சேர்ந்து இவை அமினோ அமிலமாக மாறுகின்றது. இவைகள் அனைத்தும் உயிரற்றவை என்பதை நாம் அறிவோம். உயிரற்ற இவைகளிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்தும் இறைவன் உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவன் ஆவான்.
கடமையான குளிப்பின் முறை
182- நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்கு தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக்கரத்தால் தமது இடது கையில் தண்ணீரை ஊற்றி இரு கைகளையும் கழுவினார்கள். தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தமது முகத்தைக் கழுவினார்கள். மேலும் தமது தலை மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் சிறிது ஒதுங்கி நின்று தமது இரு கால்களையும் கழுவினார்கள். அவர்களிடத்தில் துவாலை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதில் துடைக்கவில்லை.
இவர்கள் மீது இரக்கம் வேண்டாம்
விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்: மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவரின் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் (நம்பிக்கை கொண்டவர்களில்) ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல்குர்ஆன்: 24:2)
ஒரே நீரிலிருந்து பெறப்படும் பல்வேறு சுவைகள் பற்றி…
இன்னும், பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 3:4)
இரண்டு பேர் இரகசியம் பேசுதல்
அதாவது மூவரில் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசுதல். இது சபைக்குக் கேடு விளைவிப்பவைகளில் ஒன்றாகும். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையையும், விரோதத்தையும், குரோதத்தையும் தோற்றுவிப்பதற்காக ஷைத்தான் செய்யும் ஒரு சூழ்ச்சி ஆகும். Continue reading
கடமையான குளிப்பை எவ்வாறு நிறைவேற்றுவது
181- நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாகத் தங்கள் இரு முன் கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூ செய்வது போல் உளூ செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் முக்கி அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதி விடுவார்கள். பின்னர் அவர்கள் தலை மீது மூன்று முறை கையினால் தண்ணீரால் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்கள் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.
அல்லாஹ்வின் உறுதி மிக்க வாக்கு!
“இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன்: 16:38)
பெண்களுக்குக் கனவில் ஸ்கலிதம் ஆனால்…
180- உம்முஸூலைம் (ரலி) என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு (ஆம்! அவள் உறங்கி விழித்ததும் தன் ஆடையில் இந்திரியத்) தண்ணீரைக் கண்டால் (குளிப்பது அவள் மீது கடமை தான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக்கேட்டுக் கொண்டிருந்த உம்முஸலமா (ரலி) அவர்கள் தமது முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நன்றாகக் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளது குழந்தை (சில சமயங்களில்) எதனால் அவளைப் போன்றிருக்கிறது? என்று கேட்டார்கள்.
நேர்வழியின் பால் அழைப்பு!
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர். (அல்குர்ஆன்: 22:67)