உயிரற்றதிலிருந்தே உயிரினம் தோன்றியது

கேள்வி எண்: 14. உயிரினங்கள் என்பது உயிரற்ற அணுக்களால் உருவான சேர்மங்களின் (Molecules) தொகுப்பே என்ற நவீன அறிவியலாளர்களின் கூற்றை மெய்ப்படுத்தும் இறை வசனமாகிய “நீயே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகின்றாய்: நீயே உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துகின்றாய்” என்ற வசனம் எது?

பதில்: “(நாயனே) நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய். நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய். மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய். மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றி கொடுக்கின்றாய்” (அல்குர்ஆன்: 3:27)

சிறு விளக்கம்: நாம் உயிரினங்கள் என்பது எண்ணற்ற செல்களால் ஆன ஒரு மூலக்கூறு என்பதைப் படித்திருக்கின்றோம். அதாவது ஒரே ஒரு செல்லிலிருந்து செல் டிவிசன் என்ற முறையில் பல்கிப் பெருகி கோடிக்கணக்கான செல்களால் உருவானதே உயிரினங்களின் உடல்கள். இந்த ஒவ்வொரு செல்லிலும் DNA என்ற சேர்மம் (Molecule) இருக்கிறது. இதுவே உயிரினங்களின் தோற்றத்திற்கு மூலக்காரணமாய் அமைந்த சேர்மம் ஆகும். DNA என்ற இந்த சேர்மத்தை தோற்றுவிக்கும் மூலப்பொருள் அமினோ அமிலம் (Amino Acid) என்ற மூலக்கூறு ஆகும். இந்த அமினோ அமிலம் எப்படி உருவாகின்றது எனில், அம்மோனியா, மீதேன், நீர், போன்ற மூலக்கூறுகளுடன் (Molecules) மின்னல் சேர்ந்து இவை அமினோ அமிலமாக மாறுகின்றது. இவைகள் அனைத்தும் உயிரற்றவை என்பதை நாம் அறிவோம். உயிரற்ற இவைகளிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்தும் இறைவன் உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவன் ஆவான்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.