182- நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்கு தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக்கரத்தால் தமது இடது கையில் தண்ணீரை ஊற்றி இரு கைகளையும் கழுவினார்கள். தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தமது முகத்தைக் கழுவினார்கள். மேலும் தமது தலை மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் சிறிது ஒதுங்கி நின்று தமது இரு கால்களையும் கழுவினார்கள். அவர்களிடத்தில் துவாலை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதில் துடைக்கவில்லை.
புகாரி-259: மைமூனா (ரலி)
183- நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது ஹிலாப் பாத்திரம் போன்ற ஒன்றை கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து தமது கையில் அள்ளித் தமது தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தமது இரு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்.
புகாரி-258: ஆயிஷா (ரலி)