குளிப்பு கடமையான நேரத்தில் உறங்க….

175- மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி) கேட்க வெட்கப்பட்டு மிக்தாத் (ரலி)யை நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். அதற்காக உளூ செய்வது தான் கடமை (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-178: அலீ (ரலி)

176- நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவி விட்டுத் தொழுகைக்குரிய உளூ செய்வார்கள்.

புகாரி-288: ஆயிஷா (ரலி)

177- நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளூ செய்து விட்டுத் தூங்கலாம் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

புகாரி-287: உமர் (ரலி)

178- இரவு நேரத்தில் தமக்கு குளிப்புக் கடமையாகி விடுகிறது என உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு உளூ செய்யும், உமது உறுப்பைக் கழுவி விட்டு நீர் தூங்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-290: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

179- நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் எல்லா மனைவியரிடமும் சென்று வருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.

புகாரி-284: அனஸ் பின் மாலிக்(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குளிப்பு கடமையான நேரத்தில் உறங்க….

அல்லாஹ்!

அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 60:22)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்!

மாதவிடாயின் போது….

174- எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எனது மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

புகாரி-297: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாயின் போது….

எக்காலத்திலும் முறியடிக்க முடியாத இறை சவால்!

“இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 17:88)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on எக்காலத்திலும் முறியடிக்க முடியாத இறை சவால்!

மாதவிடாயின் போது மனைவியுடன்….

173- எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்னை அணைப்பார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களின் தலையை கழுவுவேன்

புகாரி-2030 – 2031: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாயின் போது மனைவியுடன்….

அனைத்து மார்க்கத்தையும் மிகைத்த இஸ்லாம்!

அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான்.முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள் இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே ( அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்). (அல்குர்ஆன்: 9:33)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அனைத்து மார்க்கத்தையும் மிகைத்த இஸ்லாம்!

6. ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகி விடுமா?

சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் எதுவும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீர்கள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர் – ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே இறைவனுக்குப் பயந்த மார்க்க அறிஞர்கள் வன்மையாக கண்டித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் கண்டித்து வருகிறார்கள். இஸ்லாத்தின் மற்ற சில அம்சங்களில் வேண்டுமானால் ஆலிம்களிடையே கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர, ஈமானுக்கு வேட்டு வைக்கும் கப்று வணக்கத்தைப் பற்றிய தெளிவுகளில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை நன்கு கற்றுணர்ந்த அறிஞர்களிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர்கள் ஒருமித்த குரலாக இத்தீயச் செயல்களை எதிர்க்கவே செய்கின்றனர். ஆனால், கப்று வணக்கமுறைகளை ஆதரிப்போரின் கைகளில் அதிகாரமும், பொருளாதாரமும் இருப்பதால் அவர்கள், கப்று வணக்கமுறைகளுக்கு எதிரான ஆலிம்களின் குரல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுக்கின்றனர்.

ஆனால் ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் ஒரு சில சொற்பமானவர்களே, கப்று வணங்கிகளிடமிருந்து அற்ப உலக ஆதாயம் பெரும் பொருட்டு, நல்லடியார்களிடம் நேரடியாகக் கேட்டுப்பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி, நல்லடியார்களின் கப்றுகளில் நடைபெறும் மார்க்கத்திற்கு விரோதமான கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், மேளதாளம் போன்ற அனாச்சாரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும், இவர்களே முஸ்லிம்களிடையே புரையோடிப்போய் இருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து வகையான பித்அத்தான காரியங்களுக்கும், மூடப் பழக்கவழக்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்து தங்களின் வயிற்றைக் கழுவிக் கொள்கின்றனர். இத்தகையவர்கள் குர்ஆன், ஹதீஸை கூறுபவர்களைப் பார்த்து, இவர்களுக்கு என்ன தெரியும்? மார்க்கம் என்பது பெரும் கடலைப் போன்றது. இவர்கள் வெறும் மொழிப்பெயர்ப்புகளைப் பார்த்து விட்டு உளருகின்றனர் என்கின்றார்கள். நாம் கூறும் குர்ஆன், ஹதீஸ் போதனைகளில் தவறில்லாதபோது இத்தகைய வலுவற்ற வார்த்தை ஜாலங்கள் மூலம் மக்களை ஏன் திசைதிருப்ப வேண்டும்? உண்மையில் நாம் கூறுவதில் தவறு இருந்தால் அதை குர்ஆன், ஹதீஸைக் கொண்டே சுட்டிக்காட்டி நம்மை நேர்வழிப்படுத்துவது இத்தகைய ஆலிம்கள் மீது கடமையல்லவா? சிந்தித்துப்பாருங்கள்! மேலும் இந்த குர்ஆன், ஹதீஸ்களையெல்லாம் மொழிப்பெயர்த்து தந்தவர்கள் யார்? ஆலிம்கள் தானே! இவர்கள் குறை கூறுபவர்களை விடவும் தேர்ச்சி பெற்ற அறிஞர்களல்லவா? குர்ஆனையோ, ஹதீஸையோ மொழிப்பெயர்ப்புகளின் மூலம் புரிந்து கொள்ள முடியாது என்றால், நம்மிடையேயுள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிரந்தங்களின் பொழிபெயர்ப்பின் நிலை என்ன? அறிஞர்பெருமக்கள் ஏன் பல ஆண்டுகளாக அயராது உழைத்து நமக்கு மொழிபெயர்த்து தரவேண்டும்? அவை எல்லாம் விழலுக்கிறைத்த நீரா? இத்தகைய பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களை திசைதிருப்பும் இவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையிலே கடுமையாக எச்சரிக்கின்றான்.

“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்” (அல்குர்ஆன்: 2:42)

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கி பின்னரும் – யார் மறைக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும், சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்” (அல்குர்ஆன்: 2:159)

‘மார்க்கத்தின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வது தீமைகளில் மிக மோசமானதும், பொய்யின் வகைகளில் மிக கொடியதும் ஆகும். அதற்கு கூலி நரகமே’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரநூல்: புகாரி.

மேலும், அல்லாஹ் தன் திருமறையில் (2:160)ல் கூறி இருப்பதைப் பார்த்து, தவறை உணர்ந்து, பாவமன்னிப்பு கோரி அவனின் பொருத்தத்தை பெற்றிட வேண்டும்.

எனவே சமுதாய மக்களுக்கு மார்க்க அறிவை புகட்டி சமுதாயத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பிலுள்ள சமுதாயத்தின் கண்களான உலமாபெருமக்கள் அல்லாஹ்வும், அவனது ரஸூலும் நமக்கு காட்டித்தந்த உண்மையான இஸ்லாத்தை எதற்கும், எவருக்கும் பயப்படாமல் துணிந்துக்கூறி, நாளை மறுமையில் அல்லாஹ் அளிக்கவிருக்கும் அளப்பரிய செல்வங்களைப் பெற்றிட வேண்டுகிறோம். அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய ஆற்றலைத் தந்து மார்க்க சேவை செய்வதன் மூலம் ஈருலகிலும் நற்பேருகளைப் பெற வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

ஆக்கம்
இஸ்லாமிய கல்வி மையம்
கூத்தாநல்லூர்

ஆய்வு இனிதே நிறைவுற்றது.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on 6. ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகி விடுமா?

உற்று நோக்கவேண்டிய அவனின் அத்தாட்சிகள்

அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரித்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக் குலைகளும் இருக்கின்றன; திராட்சை தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் (நம்பிக்கை) கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன. (அல்குர்ஆன்: 6:99)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உற்று நோக்கவேண்டிய அவனின் அத்தாட்சிகள்

மாதவிடாயுள்ள மனைவி கணவனுக்குப் பணிவிடை…

172-நபி (ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். நான் அதை வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வர மாட்டார்கள்.

புகாரி-2029: ஆயிஷா(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாயுள்ள மனைவி கணவனுக்குப் பணிவிடை…

அனைத்துக்கும் சொந்தக்காரன்!

வானங்களுடையவும், பூமியுனுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான். (அல்குர்ஆன்: 5:120)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அனைத்துக்கும் சொந்தக்காரன்!