நான் வணங்கத் தகுதியான இறைவன்!

“என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அவனையன்றி (மற்றெதனையும், எவரையும்) இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு அதில் ஒன்றையுமே என்னை விட்டுத் தடுத்துவிடாது. அதிலிருந்து என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது”. (அல்குர்ஆன்: 36:22-23)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நான் வணங்கத் தகுதியான இறைவன்!

யாவரையும் மிகைத்தவன் அல்லாஹ்!

அவன் தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குப்படுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ்பீஹ் (துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்: 60:24)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on யாவரையும் மிகைத்தவன் அல்லாஹ்!

கடமையான குளிப்பு!

171-நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் மொண்டு) கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம்.

புகாரி-322: உம்முஸலமா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கடமையான குளிப்பு!

சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன

“இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே! (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்”. (அல்குர்ஆன்: 39:43-44)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன

மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உறங்குதல்.

170- நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று சொன்னேன். ஆயினும் அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள் நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.

புகாரி-323: உம்முஸலமா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உறங்குதல்.

கைவிரல் ரேகையின் முக்கியத்துவம்

கேள்வி எண்: 13. மனிதன் இறந்து மக்கி மண்ணாகிப் போனபின், அவனை உயிர்ப்பிப்பதோடு, அவனின் கைவிரல் ரேகையைக்கூட இறைவன் செவ்வையாக உருவாக்குவான் என்று கூறுவதன் மூலம் கைவிரல் ரேகையின் இன்றைய அதிமுக்கியத்துவத்தை அன்றே பறைசாற்றிய இறைவசனம் எது?

பதில்: “மரித்து (உக்கிப்போன) மனிதனின் எழும்புகளைநாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அல்ல, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்” (அல்குர்ஆன்: 75:3-4)

சிறு விளக்கம்: கைவிரல் ரேகையின் முக்கியத்துவத்தையும் அதனை பதிவு செய்யும் முறையையும் கி.பி. 1880-ல் முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸர் பிரான்சிஸ் கோல்டு என்பவர் தான்.

இவர் கூறுகிறார்” ‘பத்து இலட்சம் நபர்களை எடுத்துக் கொண்டால் அதில் இருவரின் கைவிரல் ரேகைகள்கூட ஒன்று போல இருக்காது’ என்றார். அதனாலேயே இன்று மனிதர்கள் அடையாளத்திற்காகவும், துப்பு துலக்கப்படுவதற்காகவும் இந்த கைவிரல் ரேகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இவ்வளவு நுணுக்கமான ரேகைகளை உடைய கையின் “நுனி விரல்களையும் செவ்வையாக உருவாக்குவான்” என்று தன்னுடைய திருமறையில் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருப்பதும் திருமறை தெய்வீக மறை என்பதற்கு அத்தாட்சியாக விளங்குகின்றது.

Posted in கேள்வி பதில் | Comments Off on கைவிரல் ரேகையின் முக்கியத்துவம்

பூர்த்தியான அல்லாஹ்வின் ஒளி!

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on பூர்த்தியான அல்லாஹ்வின் ஒளி!

சுப்ஹானல்லாஹ்!

169- நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்.

புகாரி-303: மைமூனா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on சுப்ஹானல்லாஹ்!

குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டு போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன்: 47:24)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல் பற்றி…

168- (நபி (ஸல்) அவர்களது மனைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தை துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டு விட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப் படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?

புகாரி-302: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல் பற்றி…