கேள்வி எண்: 13. மனிதன் இறந்து மக்கி மண்ணாகிப் போனபின், அவனை உயிர்ப்பிப்பதோடு, அவனின் கைவிரல் ரேகையைக்கூட இறைவன் செவ்வையாக உருவாக்குவான் என்று கூறுவதன் மூலம் கைவிரல் ரேகையின் இன்றைய அதிமுக்கியத்துவத்தை அன்றே பறைசாற்றிய இறைவசனம் எது?
பதில்: “மரித்து (உக்கிப்போன) மனிதனின் எழும்புகளைநாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அல்ல, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்” (அல்குர்ஆன்: 75:3-4)
சிறு விளக்கம்: கைவிரல் ரேகையின் முக்கியத்துவத்தையும் அதனை பதிவு செய்யும் முறையையும் கி.பி. 1880-ல் முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸர் பிரான்சிஸ் கோல்டு என்பவர் தான்.
இவர் கூறுகிறார்” ‘பத்து இலட்சம் நபர்களை எடுத்துக் கொண்டால் அதில் இருவரின் கைவிரல் ரேகைகள்கூட ஒன்று போல இருக்காது’ என்றார். அதனாலேயே இன்று மனிதர்கள் அடையாளத்திற்காகவும், துப்பு துலக்கப்படுவதற்காகவும் இந்த கைவிரல் ரேகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இவ்வளவு நுணுக்கமான ரேகைகளை உடைய கையின் “நுனி விரல்களையும் செவ்வையாக உருவாக்குவான்” என்று தன்னுடைய திருமறையில் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருப்பதும் திருமறை தெய்வீக மறை என்பதற்கு அத்தாட்சியாக விளங்குகின்றது.