170- நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று சொன்னேன். ஆயினும் அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள் நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.
புகாரி-323: உம்முஸலமா (ரலி)
‘மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உறங்குதல்’ என்று தலைப்பை மாற்றுங்கள்.