ஷிர்க் தோன்றக்கூடிய இடங்களில் சில….

இஸ்லாமிய உலகில் பரவியிருக்கும் ஷிர்க்குகள் வெளியாகக்கூடிய இடங்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களில் மாபெரும் துன்பமாகும். முஸ்லிம்களிடத்தில் தௌஹீதை முன்வைக்கின்றவர்கள் சந்திக்கும் சோதனைகள் கஷ்டங்கள் முதலானவைகளும். இதல்லாத இன்னும் பல நோவினைகளும் இதன் காரணமாகத்தான். முஸ்லிம்களிடத்தில் நம்பிக்கையிலும் நடத்தையிலும் ஷிர்க் வெளியாகின்றது.

அதிகமான முஸ்லிம் நாடுகளில் உள்ள ஷிர்க் நடைபெறக்கூடிய இடங்கள் இதற்குச் சான்றாய் அமைந்துள்ளதைக் காணலாம். இதனை அதிகமான முஸ்லிம்கள் இஸ்லாம் என்றே கருதுகிறார்கள். இதனால்தான் ‘இஸ்லாம் ஷிர்க்கை ஒழிப்பதற்காகவே வந்துள்ளது’ என்பதை அறிந்திருந்தும், அந்த ஷிர்க்குகளை அவர்கள் மறுக்கிறார்களில்லை. அவர்கள் இஸ்லாம் என்று கருதிக் கொண்டிருப்பவற்றில் சில பின்வருமாறு:-

அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆக் கேட்டல்:- மௌலிது வைபவங்களில் படிக்கக்கூடிய கவிகள், பாட்டுக்கள் போன்றவற்றில் இது அமைந்துள்ளதைக் காணலாம். மக்கள் படிக்கின்ற பாடல்களைப் பின்வருமாறு செவிதாழ்த்தியுள்ளேன்.

‘ரஸூல் மார்களுக்குத் தலைவரே! என்னைத் தாங்கிக் கொள்பவரே!

நீங்கள் தான் அல்லாஹ்வுடைய வாசலும் நான் நம்பிக்கை வைக்கத் தகுதியுள்ளவரும் ஆவீர்கள்.

ரஸூலுல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் என்னைக் கை தாங்குங்கள்.

சமூகமளிப்பவர்களில் தலைவரே! எனது துன்பத்தை உங்களைத் தவிர வேறெவரும் மாற்றமாட்டார்.

இவ்வாறான ஒன்றை (நபியவர்களால் தனது மௌத்துக்குப் பின்னால் செவிதாழ்த்த முடியாது, அவ்வாறு) நபியவர்கள் செவிதாழ்த்தினாலும் இதனைவிட்டு நீங்கியே இருப்பார்கள். ஏனென்றால் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவரும் கஷ்டத்தை, இலகுவானதாக மாற்ற முடியாது.

இதுபோலவே பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் புத்தகங்களிலும் இப்படியான பாடல்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். அவற்றிலே (மௌத்துக்குப்பின் மறுமை ஏற்படுவதற்கிடையில்) எந்தவித உதவியும் செய்யச் சக்தியற்ற ரஸூல்மார்கள், நபிமார்கள், அவுலியாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரிடம் உதவி கேட்பதாகவும் அமைந்துள்ளது.

பள்ளிவாசல்களில் அவுலியாக்கள் நல்லடியார்கள் ஆகியோர்களை அடக்கம் செய்தல்:- முஸ்லிம்கள் வாழுகின்ற அதிகமான பகுதிகளிலுள்ள சில பள்ளிவாசல்களினுள் கப்றுகள் இருப்பதைக் காணலாம். அவற்றின் மீது கட்டிடங்கள் கட்டி, குப்பாக்கள் (கோபுரங்கள்) கட்டப்பட்டுள்ளன. அவற்றில் அடக்கம் செய்யப்பட்டிருப்போரிடம், சிலர் தமது தேவைகளைக் கேட்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் இதனைப் பின்வருமாறு கூறித் தடைசெய்துள்ளார்கள்.

‘அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சபிப்பானாக! அவர்கள் தமது நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக எடுத்துக் கொண்டனர்’. ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

பள்ளிவாசல்களினுள் நபிமார்களை அடக்கஞ்செய்வதையே இஸ்லாம் அனுமதிக்கவில்லையென்றால், மஷாயிகுகள், உலமாக்கள் போன்றோர்களை அடக்கஞ்செய்வது எவ்வாறு அனுமதிக்கப்படும்? அல்லாஹ்விடம் கேட்கவேண்டியதை, அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கேட்பது ஷிர்க் என்பதையும், மரணித்தவர்களைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பதை இஸ்லாம் தடை செய்கின்றது என்பதையும் மக்கள் நன்கறிந்துகொண்டே அவுலியாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரைப் பள்ளிவாசல்களினுள் அடக்கம் செய்கின்றனர்,

அவுலியாக்களுக்காக நேர்ச்சை செய்தல்:- சில மனிதர்கள் குர்பானிக்குரிய ஒரு மிருகத்தையோ அல்லது பணத்தையோ, அதல்லாத வேறு பொருட்களையோ தனக்கு விருப்பமான ஒரு குறிப்பிட்ட ‘வலி’ (அல்லாஹ்வுடைய நேசனு)க்காக நேர்ச்சை செய்கின்றனர். இந்த நேர்ச்சை ஷிர்க்காகும். இதனை நிறைவேற்றாமலிருப்பது கடமையாகும். ஏனென்றால் நேர்ச்சை ஓர் ‘இபாதத்’. இது அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும். இதுபற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“(மூமின்களாகிய) அவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளை நிறைவேற்றி வைக்கின்றனர். நீண்ட வேதனையுடைய நாளைக்கும் பயப்படுகின்றனர்” (76:7)

அறுக்கின்றபோது அல்லாஹ்வுக்காக என்று ‘நிய்யத்’ வைத்தாலும் இந்தச்செயல்பாடு இணைவைப்பவர்களின் செயல்பாட்டைத் தழுவியதாகும். அவர்கள் தங்களுடைய நேர்ச்சைகளைத் தங்களது சிலைகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடங்களில் வைத்தே நிறைவேற்றுவார்கள். இதற்கொப்பாகவே முஸ்லிம்கள், தங்களது அவுலியாக்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடங்களில் நிறைவேற்றுவார்கள். இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

‘அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிடுகின்றவனை அல்லாஹ் சபிக்கிறான்’ ஆதாரம்: முஸ்லிம்.

முஹ்யித்தீன் அப்துல்காதிர் – அல்ஜீலானிய்யீ, ரிபாஈ, பதவி (ரஹ்-ஹிம்) ஹுஸைன் (ரலி) போன்றோரின் கப்றுகளை ‘தவாப்’ செய்தல்:- இவர்களின் கப்றுகளை மக்கள் ‘தவாப்’ (வலம் வருதல்) செய்கின்றனர். தவாப் என்பது ஓர் ‘இபாதத்’தாகும். அல்லாஹ்வுடைய கட்டளைக்கமைய கஃபத்துல்லாஹ்வைச் சூழ மட்டுமே தவாப் செய்ய வேண்டும். வேறெந்த ஒன்றையும் ‘தவாப்’ செய்யக்கூடாது. குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“அவர்கள் புராதன ஆலயத்தை (கஃபத்துல்லாவை)த் ‘தவாப்’ செய்யவும்” (22:29)

கப்றுகளை நோக்கித் தொழுவது அனுமதிக்கப்பட்டதல்ல:- இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

‘கப்றின் மீது அமரவோ, அதனை நோக்கித் தொழவோ வேண்டாம்’ ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்களுடைய பின்வரும் சொல்லுக்கமைவாக ‘பரக்கத்’தை நாடிக் கப்றடிகளுக்கு யாத்திரை மேற்கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.

‘மூன்று பள்ளிவாசல்களுக்கன்றி (வேறெந்த இடத்திற்கும் நேர்ச்சை செய்து) யாத்திரை மேற்கொள்ளக் கூடாது. ஒன்று: மஸ்ஜிதுல் ஹறாம் (கஃபத்துல்லாஹ்). இரண்டு: எனது இந்தப் பள்ளிவாசல் (மஸ்ஜிதுந்நபவி). மூன்று: மஸ்ஜிதுல் அக்ஸா என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

நாம் மதினா செல்ல விரும்பினால், (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) மஸ்ஜிதுந்நபவியைத் தரிசிப்பதற்காகவும், (அதன் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ள) நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்வதற்காகவும் செல்கிறோம் என்று சொல்லுவது சரியான சொல்லாகும்.

குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணாக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது சரியானதென்று நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதிருப்பது, குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்பட்டவற்றைக் கொண்டு தீர்ப்பளிப்பது போன்றாகும்.

இதற்கு உதாரணம் சில மஷாயிகுகள் வெளியாக்கும் மார்க்கத்தீர்ப்புக் (பத்வாக்)கள் போன்றாகும். இவை, இஸ்லாத்தின் மூலகருத்துக்களுக்கு முரண்படுகின்றன. இது, எதிர்த்துப் போராடவேண்டுமென அல்லாஹ் பிரகடனப்படுத்திய பாவச்செயலான வட்டியை ஆகுமென்று கூறுவது போன்றாகும்.

குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்படுகின்றவாறு கட்டளை பிறப்பிக்கின்ற, அதிகாரிகள், அறிஞர்கள், உலமாக்கள், மஷாயிகுகள் போன்றோருக்கு வழிபடுதல்:- நபி (ஸல்) அவர்களுடைய சொல்லுக்கமைவாக, இது வழிபாட்டில் ஷிர்க்காகும்.

‘படைத்தவனுக்கு மாறுசெய்யும் வகையில் படைக்கப்பட்டவனுக்கு வழிபடக்கூடாது’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

இதுபற்றி அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகின்றான். “அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹை (ஈஸாவை)யும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே, அவர்கள் (யாவரும்) ஏவப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ்வையன்றி வேறெந்த நாயனுமில்லை. அவர்கள் இணைவைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்” (9:31)

இவ்வசனத்துக்கு ஹுதைபா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள். ‘யூதர்களிலுள்ள அறிஞர்கள் ஹலாலாக்கியதையும், அவர்கள் ஹறாமாக்கியதையும் சரியென ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வழிபடுவது கொண்டு ‘இபாதத்’ செய்வதே மேற்படி வசனத்தின் கருத்தாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ஷிர்க் தோன்றக்கூடிய இடங்களில் சில….

ஏமாற்றும் சொற்ப சுகமான இவ்வுலக வாழ்க்கை

57:20. அறிந்து கொள்ளுங்கள்; “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும், (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் (தீர்ப்பு நாளில்) கடிமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு – நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன்: 57:20)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on ஏமாற்றும் சொற்ப சுகமான இவ்வுலக வாழ்க்கை

கப்றுடைய வேதனைக்கு இதுவும் காரணம்

167-நபி (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, தங்கள் கப்ரில் வேதனைச் செய்யப்படும் இரு மனிதர்களுடைய சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படவில்லை, என்று சொல்லி விட்டு, ஆம்! (அது பெரிய விஷயம் தான்) அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை, மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் எனக் கூறிவிட்டு, ஒரு பேரீச்ச மட்டையை கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது அந்த இரு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-216: இப்னு அப்பாஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கப்றுடைய வேதனைக்கு இதுவும் காரணம்

வரையறையற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகள்

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட்கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 16:18)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on வரையறையற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகள்

மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை….

166- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும், பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவவேண்டும், பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழுது கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-227: அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை….

இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகங்கள்

43:26. இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;

43:27. “என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்) . அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்” (என்று கூறியதையும் நினைவு கூறுவீராக)!

43:28. இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.

43:29. எனினும், இவர்களிடம் உண்மையும், தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.

43:30. ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது “இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.

43:31. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள (மக்கா, மதினா) பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக்கூடாதா?”

43:32. உம் இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்.” இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரை விட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.

43:33. நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.

43:34. அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).

43:35. தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்): ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தான்.

அல் குர்ஆன்: அஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகங்கள்

ஆடையில் பட்ட இந்திரியத்தை……..

165- நான் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, நான் நபி (ஸல்) அவர்களுடைய ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களுடைய ஆடையில் ஆங்காங்கே காணப்படும் என்று கூறினார்கள்.

புகாரி-231: ஸுலைமான் பின் யஸார் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஆடையில் பட்ட இந்திரியத்தை……..

அல்லாஹ் மிகத் தூய்மையானவன்!

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணை வைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (அல்குர்ஆன்: 60:23)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ் மிகத் தூய்மையானவன்!

அனுமதியின்றி வீட்டுக்குள் எட்டிப் பார்த்தல்

“இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும் அவர்களுக்கு ஸலாம் கூறாதவரையும் நுழையாதீர்கள்” (24:27)

அனுமதி கோருவதற்குக் காரணம் அந்த வீட்டிலுள்ளவர்களின் தனிப்பட்ட செயல்களை காரியங்களை பார்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். ‘அனுமதி கோருதல் ஏற்படுத்தப்பட்டது பார்வையின் காரணமாகத்தான்’ என்பது நபிமொழி. (புகாரி)

இன்று வீடுகள் கட்டிடங்கள் நெருக்கமாகவும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தும் இருக்கின்றன. ஜன்னல்களும் வாசல்களும் நேருக்கு நேர் உள்ளன. இதனால் அக்கம் அக்கத்தில் வசிப்போரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் பரஸ்பரம் பார்வையில் படும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளன. பெரும்பாலோர் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதில்லை. சில பொழுது உயரமான கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் சிலர் தம் ஜன்னல் வழியாகவும் மாடி வழியாகவும் தமக்குக் கீழே இருக்கின்ற அண்டை வீடுகளை எட்டிப் பார்க்கின்றனர். இது நம்பிக்கைத் துரோகமாகும். மட்டுமல்ல இது அண்டை வீட்டாரின் கண்ணியத்தைக் குலைக்கக் கூடியதாகவும் தகாத காரியத்தின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகவும் இருக்கின்றது. இதனால் எத்தனையோ துன்பங்களும் குழப்பங்களுமே ஏற்பட்டுள்ளன. இச்செயல் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்குச் சான்றாக பிறருடைய வீட்டில் எட்டிப் பார்ப்பவருடைய கண்ணுக்கான நஷ்டயீட்டை ஷரீஅத் தளர்த்தியிருப்பதே போதுமானதாகும்.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘ஒருவர் பிறருடைய வீட்டில் அனுமதியின்றி எட்டிப் பார்த்தால் அவருடைய கண்ணைப் பறிப்பது அவ்வீட்டாருக்கு ஆகுமானதாகும்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

அஹ்மதுடைய ஒரு அறிவிப்பில் ‘அவருடைய கண்ணைப் பறித்து விடுங்கள். அதற்கு நஷ்டயீடோ, பழிக்குப் பழியோ கிடையாது’ என்றும் உள்ளது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Posted in எச்சரிக்கை | Comments Off on அனுமதியின்றி வீட்டுக்குள் எட்டிப் பார்த்தல்

நீரைக் கொண்டு தெளித்து சுத்தம் செய்தல்

164- நான் (பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத எனது சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது அக்குழந்தை நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (சிறுநீர்பட்ட இடத்தில்) தெளித்தார்கள். அதைக் கழுவவில்லை.

புகாரி-223: உம்மு கைஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நீரைக் கொண்டு தெளித்து சுத்தம் செய்தல்