(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன்: 22:65)
இரக்கமும், அன்பும் உள்ள இறைவன்!
சிறு குழந்தைகளின் சிறுநீர்……..
163- நபி (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது குழந்தைகளுக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதனைக் கழுவவில்லை.
மன்னிக்கும் மாண்புடையோன்!
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 4:17)
5. முன்னோர்கள் செய்தது மார்க்கமாகி விடாது
ஒரு சிலருக்கு தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான். ‘தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய், தந்தையரும் நல்லடியார்களிடம் பிரார்த்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத்தான் செல்வார்களா? என்று ஷைத்தான் சிலரின் உள்ளத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகள் கூறியவற்றை உதாசீனப்படுத்தி விட்டு, அவர்களின் முன்னோர்களுடைய பாதையை பின்பற்றுமாறு செய்து விடுகிறான். முன்னோர்கள் செய்தது எல்லாம் மார்க்கமாகி விடாது. குர்ஆன், ஹதீஸ் கூறுவதே மார்க்கமாகும். இவ்வாறு முன்னோர்கள் செய்தார்களே, நாமும் செய்தால் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் பதிலளிக்கின்றான்:
“மேலும், அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்த)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?” (அல்குர்ஆன்: 2:170)
இந்த வசனமும் இன்னும் ஏராளமான வசனங்கள், பார்க்கவும்: 7:27-30, 31:21, 37:69-70, 43:22-24, 10:78, 21:52-54, 11:87, 14:10, 11:109, 5:104. போன்ற யாவும் நாம் நமது மூதாதையர்களையோ, தாய், தந்தையரையோ பின்பற்றக்கூடாது என்றும் அல்லாஹ்வின் திருமறையும், அவனுடைய தூதரின் வழிகாட்டுதலையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. எனவே எங்களின் முன்னோர்கள் நல்லடியார்களிடம் பிரார்த்தித்தார்கள், அதனால் நாங்களும் அவர்களிடம் பிரார்த்திக்கிறோம் என்று எவரேனும் கூறினால், அது நிச்சயமாக வழிகேடேயாகும். ஏனென்றால் அவர்கள் சென்றுபோன சமுதாயம். அவர்கள் செய்தது பற்றி நீங்கள் வினவப்பட மாட்டீர்கள் என்பது அல்லாஹ்வின் கூற்றாகும்.
மேற்கூறப்பட்ட இறைவசனங்கள் எல்லாம் முஸ்லிம்களான நம்மைக் குறித்து இறக்கப்படவில்லை. மாறாக (காஃபிர்கள்) நிராகரிப்பவர்கள் சம்பந்தப்பட்டது – என்று நினைப்போமேயானால் உண்மைதான். ஆனால், இறைவன் தன் அருள்மறையில் நமக்கு முந்தைய சமூகத்தார்களின் வரலாறுகளையும், அவர்கள் (காஃபிர்களாக) நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவர்களை அழித்த நிகழ்வுகளையும் கூறுவதோடு அல்லாமல் பின்வருமாறும் கூறுகிறான்.
“இன்னும், நாம் அதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும் பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்” (அல்குர்ஆன்: 2:66)
:நிச்சயமாக அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது….” (அல்குர்ஆன்: 12:111, இன்னும் பார்க்க: 3:13, 29:43, 43:56, 59:2, 79:26.)
போன்ற வசனங்களின் மூலம் முஸ்லிம்களான நாமும் அதுபோன்ற தவற்றை இழைத்து விடக்கூடாது என்று நம்மை எச்சரிக்கின்றான்! நாம் படிப்பினை பெற வேண்டாமா?
ஆய்வு தொடரும்.
சிறுநீர் கழித்த இடத்தை கழுவுதல் பற்றி….
162- ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித்தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணிர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணிர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.
வானமும் பூமியும் படைத்தல் வீண் விளையாட்டா?
மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்க வில்லை.
வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம். (அல்குர்ஆன்: 21:16-17)
சிறிய ஷிர்க்கும் அதன் வகைகளும்
இஸ்லாம் அனுமதிக்காத வஸீலாக்கள் அனைத்தும் பெரிய ஷிர்க்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும். இது இபாத(வணக்க)த்தின் அந்தஸ்தை அடையாது. இதனைச் செய்தவனை அது இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி விடாது. எனினும் இது பெரும்பாவங்களில் அடங்கும்.
இலேசான முகஸ்துதி:- (நன்மையானவற்றைப்) படைப்புகளுக்காகச் செய்தல், அல்லாஹ்வுக்காக வணக்கத்தைப் புரிந்து அவனுக்காகவே தொழுகின்ற ஒரு முஸ்லிம் தனது வணக்கங்களையும், தொழுகையையும் மனிதர்கள் புகழ வேண்டும் என்பதற்காகச் செய்தல் போன்றவை சிறிய ஷிர்க்கில் அடங்கும். இதுபற்றி பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
“எவன் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறானோ, அவன் நற்கருமங்களைச் செய்து, தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவானாக!” (18:110)
நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க்கைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
‘உங்களிடத்தில் நான் அதிகமாகப் பயப்படுவதெல்லாம் சிறிய ஷிர்க்காகும். அதுதான் ‘ரியா’ (முகஸ்துதி) மறுமைநாளில் அல்லாஹ், மனிதர்களிடத்தில் கூலியை எதிர்பார்க்கின்றவர்களை நோக்கி, ‘எவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக உலகில் அமல்கள் செய்தீர்களோ, அவர்களிடமே இப்பொழுது கூலியை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறுவான்’. ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)
அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்தல்:- ‘எவன் அல்லாஹ் அல்லாதவனைக் கொண்டு சத்தியம் செய்கிறானோ, அவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)
அல்லாஹ் அல்லாதவனைக் கொண்டு சத்தியம் செய்தல் சிலவேளை பெரிய ஷிர்க்காகிவிடும். உதாரணமாக, ‘வலி’க்கு சில ஆற்றல்கள் உண்டு; அவரைக் கொண்டு பொய்ச்சத்தியம் செய்தால் சத்தியம் செய்கின்றவனுக்கு தீங்கு ஏற்படும் என்று சத்தியம் செய்யும் ஒருவன் நம்புவானென்றால் இது பெரிய ஷிர்க்காகும்.
மறைவான ஷிர்க்கு:- உதாரணத்துக்கு, அல்லாஹ்வும் இன்ன மனிதனும் நாடினால் என்று சொல்லுவது போன்று. (இவ்வாறு சொல்லுவது தடை செய்யப்பட்டுள்ளது) அல்லாஹ் இல்லையென்றால், பின்பு இன்னவர் இல்லையென்றால் என்று சொல்வது அனுமதிக்கத் தக்கது.
‘அல்லாஹ்வும் இன்னமனிதனும் நாடினால் என்று நீங்கள் கூறாதீர்கள். அல்லாஹ்வும் பின்பு இன்னமனிதனும் நாடினால் என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல் பற்றி…
161- ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உனக்கு நீயே நன்மை செய்து கொள்கிறாய்
“எவன் இறைவனுக்கு நன்றி செலுத்தினானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை. நிச்சயமாக என் இறைவன் எவருடைய தேவையற்றோனும், மிக்க கண்ணியமானவனுமாக இருக்கிறான்”. (அல்குர்ஆன்: 27:40)
மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-3)
தவாஃப் (வலம் வருதல்)
மாதவிடாய்ப்பெண் கஃபத்துல்லாவில் பர்லான, நபிலான வலம் வருவது ஹராமாகும். அப்படி வலம் வந்தால் அது கூடாது. ஸபா, மர்வாவிற்கிடையே ஓடுவது, அரபாவிலே தங்குவது, முஸ்தலிபா, மினாவில் இரவு தங்குதல், கல் எரிதல் இவைகளும், இவைகளல்லாத ஹஜ், உம்ராவின் ஏனைய எல்லாச் செயல்களும் அவளுக்கு ஹராமல்ல. இதன் பிரகாரம் ஒருபெண் சுத்தமானவளாக வலம் வந்து முடித்த பின்னாலோ, அல்லது ஸபா, மர்வாவிற்கிடையே ஓடிக் கொண்டிருக்கும் போதோ, மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அதில் எந்த பிரச்சனையும் கிடையாது.
பள்ளியில் தங்குதல்.
மாதவிடாய்ப்பெண் பள்ளியில் தங்கியிருப்பது ஹராமாகும்.
உடலுறவு கொள்ளுதல்.
கணவன் மாதவிடாய்ப் பெண்ணான தன் மனைவியிடம் உடலுறவு கொள்வதும், அவள் அதற்காக சம்மதிப்பதும் ஹராமாகும். உடலுறவைத் தவிர தனது உணர்வை முறித்து விடக்கூடிய ஏனைய முத்தமிடுதல், சேர்த்துக் கட்டுதல், மர்ம உறுப்பு அல்லாததில் சுகம் அனுபவித்தல் போன்றவை அவனுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தலாக் (விவாக விலக்கு).
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் தன் மனைவியை கணவன் தலாக் சொல்வது ஹராமாகும். மாதவிடாயாக இருக்கும்போது தலாக் சொல்லி விட்டால் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் அவன் மாறு செய்து விட்டான். இந்நேரத்தில் அவளை அவன் மீட்டிக் கொள்வது கட்டாயமாகும். பிறகு அவன் விரும்பினால் அவளைத் தலாக் சொல்லிக் கொள்ளலாம். அவளுக்கு இரண்டாம் முறை மாதவிடாய் ஏற்படும்வரை விட்டுவிடுவது மிகவும் நல்லது. அவள் சுத்தமாகி விட்டால் அவன் விரும்பினால் அவளை தன்னுடன் வைத்துக் கொள்ளவும் செய்யலாம்.
குளிப்புக் கடமை.
மாதவிடாய்ப்பெண் சுத்தமாகி விட்டால் உடம்பு அனைத்தையும் சுத்தப்படுத்திக் குளிப்பது கடமையாகும். தலைமுடியின் அடிப்பாகத்திற்குத் தண்ணீர் சேராதென பயப்படுமளவிற்கு அழுத்தமான முறையில் கட்டப்பட்டிருந்தாலே தவிர அவளின் தலைமுடியை அவிழ்த்து விடுவது கட்டாயமாகாது. மாதவிடாய்ப்பெண் தொழுகைக்குரிய நேரத்திலேயே சுத்தமாகி விட்டால் தொழுகையை அதற்குரிய நேரத்தில் அடைந்து கொள்வதற்காக விரைவாக குளிப்பது கட்டாயமாகும்.