160- உங்களில் ஒருவருடைய (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்து விடுமானால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாய் நக்கிய பாத்திரத்தை……
எவரேனும் நன்மை செய்தால்….
“எவரேனும் நன்மை செய்தால் அது அவருக்கே நன்மையாகும். எவரேனும் பாவம் செய்தால் அது அவருக்கே கேடாகும். உம் இறைவன் தன் அடியார்களுக்கு அறவே தீங்கிழைப்பதில்லை”. (அல்குர்ஆன்: 41:46)
காலுறை மீது மஸஹ் செய்வதற்கு முன்…
159- முகீரா பின் ஷூஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஒரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா? என்று கேட்டார்கள் நான் ஆம் (இருக்கிறது) என்று பதிலளித்தேன் . உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடற்தார்கள். (இயற்கைத்தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள் மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள் இதனால் அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை ஆகவே அவற்றை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹ் செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் (மோஸா எனும்) காலுறைகளை இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள் அவற்றை விட்டுவிடுவிராக! ஏனெனில் நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன் என்று சொல்லி (ஈராக்கையால் அவற்றைத்) தடவி (மஸ்ஹ் செய்து) கொண்டார்கள்.
தன் படைப்புகளிடம் தேவையற்ற இறைவன்
“நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”. (அல்குர்ஆன்: 39:7)
மறைவான இடத்தில் அமர்தல்!
158- நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றேன். அப்போது முகீராவே! தண்ணீர் பாத்திரத்தை எடும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்று என் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்தில் போய் அவர்களுடைய இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். அவர்கள் ஷாம்நாட்டுக் குளிர் ஆடையை அணிந்திருந்தார்கள். உளூ செய்வதற்காக அதிலிருந்து தங்கள் கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கை இறுக்கமாக இருந்ததால் தமது கையை அந்த ஆடையின் கீழ்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்குறிய உளூவைச் செய்தார்கள். தமது இரு கால் உறைகள் மீது (கழுவுவதற்குப் பதிலாக) ஈரக்கையால் மஸஹ் செய்து தொழுதார்கள்.
இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது. (அல்குர்ஆன்: 22:70)
ஆழ்கடலின் இருள் & கடலின் உள் அலைகள்
கேள்வி எண்: 12. இன்றைய நவீன கருவிகளின் உதவியோடு கடலில் ஆராய்ச்சி செய்வது போன்று கடல் ஆய்வு செய்திராத அந்த நாட்களில் இறைவனால் இறக்கியருளப்பட்ட விஞ்ஞான உண்மையான “கடலின் அதிக ஆழத்தில் ஒரே இருள்மயமாக இருக்கும்” என்ற திருமறை வசனம் எது?
பதில்: “….அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும். அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கு மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை” (அல்குர்ஆன்: 24:40)
சிறு விளக்கம்: குர்ஆனும் நவீன விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உறையாற்றிய இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசனின் தலைவர் டாக்டர் ஜாகிர் நாயக் இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்.
கடலியல் (Marine Geology) துரையில் வல்லுனராக இருக்கும் பேராசிரியர் துர்காரோ என்பவர் ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரிடம் அல்குர்ஆன் 24:40 வசனத்தைக் கொடுத்து அவரின் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டதற்கு பின்வருமாறு விளக்கம் கூறினார். குர்ஆனின் இந்த வசனம் சாதாரணக் கடலைப்பற்றி குறிப்பிடவில்லை. இது பெருங்கடலின் ஆழ்கடலைப் பற்றி குறிப்பிடுகின்றது. இன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் பெருங்கடல்களின் அதிக ஆழத்திற்கு சென்ற நம்மால் அங்கே கும்மிருட்டாக இருப்பதைக்காண முடிகிறது. ஏனென்றால் அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற சாதனங்களின் துணையில்லாமல் செல்ல முடியாமல் இருந்தது. எவ்வித உபகரணமும் இல்லாமல் மனிதனால் 20 அல்லது 30 மீட்டர் ஆழத்திற்கு கீழ் செல்ல முடியாது. அதற்கும் கீழே சென்றால் அவன் இறந்து விடுவான். அப்படியிருக்க ஆழ்கடல் என்று சொல்லப்படக்கூடிய 200 அடி ஆழத்திற்கும் கீழே மனிதன் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற அதிநவீன சாதனங்களின் துணையில்லாமல் செல்ல முடியாது.
இன்றுள்ள நவீன கருவிகளின் துணையுடன் ஆழ்கடலை ஆராய்ந்தபோது அவைகள் இருட்டாக இருப்பதற்கு இரு காரணங்களைக் கூறுகின்றனர். முதலாவது காரணம் என்னவெனில், சூரிய ஒளியில் உள்ள நிறங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கடல் நீரில் உட்கிரகித்துக் (Absorbed) கொள்ளப்படுவதுதான். சூரிய ஒளியில் வயலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற ஏழு நிறங்கள் இருப்பதை நாம் படித்திருக்கிறோம். இத ஆங்கிலத்தில் Vibgyor என்று கூறுவர். பேராசிரியர் துர்காரோ கூறுகையில், சூரிய ஒளி பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து 15 முதல் 20 மீட்டர் ஆழத்திற்கு கடந்து வருகையில் அந்த ஒளியில் இருக்கும் சிவப்பு நிறம் தண்ணீரில் உட்கொள்ளப்படுகின்றது. ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 30 மீட்டர் ஆழத்திற்குச் சென்றபின் அவனுடைய காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தால் அதை அவனால் பார்க்கக்கூட முடியாது. ஏனென்றால் சிவப்பு நிறம் 30 மீட்டர் ஆழத்திற்கு வருவது கிடையாது. மேலும் அந்த சூரிய ஒளி கடலின் ஆழத்திற்குச் செல்ல செல்ல 30 முதல் 50 மீட்டர் ஆழத்தில் சூரிய ஒளியிலுள்ள ஆரஞ்சு நிறம் உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றது. சூரிய ஒளி மேலும் கடலின் ஆழத்திற்குச் செல்லும்போது 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் மஞ்சள் நிறமும், 100 முதல் 200 மீட்டர் ஆழத்தில் பச்சை நிறமும், 200 மீட்டருக்கும் கீழுள்ள கடலின் ஆழத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நீலம், இன்டிகோ மற்றும் வயலட் போன்ற நிறங்களும் உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றன. எனவே கடலில் அடுக்கு அடுக்குகளாக காணப்படும் இருள்கள் சூரிய ஒளியின் நிறங்கள் அந்த அடுக்குகளில் உட்கிரகித்துக் கொள்ளப்படுவதாலேயாகும்.
ஆல்கடல் இருட்டாக இருப்பதற்கு மற்றொரு காரணம் சூரியஒளி கடலின் ஆழத்திற்குச் செல்லாமல் தடுக்கும் தடுப்புகளாகும். சூரியஒளி மேகத்தின் மீது படும்போது அம்மேகத்தினால் அவ்வொளி தடுக்கப்பட்டு சிதறடிக்கப்படுகின்றது. இதனால் மேகத்திற்கு கீழே இலேசான இருள் ஏற்படுகின்றது. பின்னர் சிதறடிக்கப்பட்ட அந்த சூரியஒளி, கடலின் மேற்புறமுள்ள அலைகளில் மோதுகின்றது. இது இரண்டாவது தடுப்பாகும். இந்த அலைகளிலிருந்து பிரதிபலிக்கப்படாத ஒளியானது கடலின் உள்ளே செல்கின்றது. அங்கேயும் ஆழ்கடல் அலைகள் இருப்பதால் அவைகளும் தடுப்பாகச் செயல்படுகின்றன. கடலின் உட்புறம் காணப்படும் இந்த Internal Waves எனப்படும் உள் அலைகளைப்பற்றி தகவல் கி.பி. 1900-க்குப் பின்னரே நமக்குத் தெரிய வந்தது. ஆனால், குர்ஆன் இந்த உள் அலைகளைப்பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறி விட்டது.
இந்த ஆழ்கடலின் இருட்டில் ஒருவன் தன் கையை நீட்டினால் அதைக்கூட அவன் பார்க்க முடியாது என்று திருமறை கூறிய அதே விளக்கத்தையே இன்றைய விஞ்ஞானிகளும் கூறுவது மிகவும் ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகத் தூய்மையானவன்)
முகீரா பின் ஷூஃபா (ரலி)யின் கூற்று!
157- நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றார்கள். அப்போது அவர்களை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் தொடர்ந்து சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றி விட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். (அதில்) நபி (ஸல்) அவர்கள் உளூ செய்து விட்டு இரு கால் உறைகளின் மீது மஸஹ் செய்தார்கள்.
இறைவசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால்…
இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 22:72)
கோள் சொல்லுதல்
மக்களிடையே குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும். கோள் சொல்லித் திரிவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இது மக்களிடையே விரோதத்தையும் குரோதத்தையும் மூட்டி விடுவதற்கும் அவர்களுக்கிடையே உள்ள நல்லுறவைத் துண்டிப்பதற்கும் மிகப் பெரிய காரணமாகும். இவ்வாறு செய்பவனை அல்லாஹ் இழித்துரைத்துள்ளான்:
“அதிகமாக சத்தியம் செய்கின்ற அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். அவன் குறைகூறி திரிபவனாகவும் கோள் சொல்லித் திரிபவனாகவும் இருக்கின்றான்” (68:10,11) ‘கோள்ச் சொல்லித் திரிபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்றில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். (ஆனால்) ஒரு பெரிய விஷயத்திற்காக இவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று கூறிவிட்டு, ஆம்! (இதைத் தொடர்ந்து வேறொரு அறிவிப்பில் ‘அது பெரிய விஷயம் தான்’ என்று வந்துள்ளது) அவ்விருவரில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது (சிறுநீர் துளி தன்னில் படாமல்) பேணுதலாக இருக்கவில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள். (புகாரி)
கோள் சொல்வதில் மிக மோசமானது கணவனைப் பற்றி மனைவியிடத்திலும், மனைவியைப் பற்றி கணவனிடத்திலும் குறை கூறித் திரிவதாகும். அவ்விருவருக்கிடையே உள்ள நல்லுறவைக் கெடுப்பதற்கான முயற்சியாகும் இது. அதுபோல பணியாளர்கள் தம் சக பணியாளர்களைப் பற்றி – அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதற்காக – மேனேஜரிடம் அல்லது ஏனைய பொறுப்பாளர்களிடம் கோள் சொல்கின்றனர். இதுவும் மோசமானதாகும். இவையனைத்துமே விலக்கப்பட்டவையாகும்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.