இரண்டு பேர் இரகசியம் பேசுதல்

அதாவது மூவரில் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசுதல். இது சபைக்குக் கேடு விளைவிப்பவைகளில் ஒன்றாகும். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையையும், விரோதத்தையும், குரோதத்தையும் தோற்றுவிப்பதற்காக ஷைத்தான் செய்யும் ஒரு சூழ்ச்சி ஆகும்.

இதன் சட்ட நிலையையும் காரணத்தையும் தெளிவுபடுத்தியவாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் மூன்று பேர் இருந்தால் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசாதீர்கள் – மற்றவர்களும் வந்து நீங்கள் எல்லோரும் கலந்திருந்திடும் வரையில்! ஏனெனில் அது அவருக்கு மனம் வருந்தச் செய்யும்’ அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி.

நால்வர் இருக்கும் போது மூவர் மட்டும் இரகசியம் பேசுவதையும், ஐவர் இருக்கும் போது நால்வர் மட்டும் இரகசியம் பேசுவதையும், இப்படியாக ஒருவரை விட்டு விட்டு மற்றவர்கள் சேர்ந்து இரகசியம் பேசுவதையும் இது உள்ளடக்கும். இதுபோல மூன்றாமவருக்குத் தெரியாத மொழியில் இருவர் இரகசியம் பேசுவதையும் இது உள்ளடக்கும். இப்படியாக ஒருவரை விட்டு விட்டு மற்றவர்கள் இரகசியம் பேசுவது ஒரு வகையில் அவரை அற்பமாகக் கருதுவதாக அமையும். அல்லது தன்னைப் பற்றி அவர்கள் தவறாகப் பேசுகிறார்களோ என்பது போன்று அவர் எண்ணத் தோன்றும் என்பதில் ஐயமில்லை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

This entry was posted in எச்சரிக்கை. Bookmark the permalink.