Category Archives: வெற்றியாளர்கள்

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதின் சிறப்பு!

 அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதை நம்மீது கட்டாயப்படுத்தி சட்டமாக்கியுள்ளான். இதுபற்றித் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான். “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். (ஆகவே) மூமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்” (33:56) மேற்காட்டிய வசனத்தில் உள்ளவாறு, அல்லாஹ் சொல்லும் “ஸலவாத்” … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதின் சிறப்பு!

அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையும் எவ்வாறு நேசிப்பது?

ஒருவன் அல்லாஹ்வை நேசிக்கின்றவனாக ஆவதற்கு, அவனுடைய ரஸூலைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதைப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான். “நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாபங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மன்னிப்போனும் மிக்க இரக்கமுடையோனுமாக இருக்கிறான் என்று (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறும்” … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையும் எவ்வாறு நேசிப்பது?

நபி (ஸல்) அவர்கள் பேரில் மௌலிது வைபவம் நடத்துதல்.

இவ்வைபவம், நபி (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்கள், தாபிஈன்கள், நான்கு இமாம்கள் ஆகியோர்களோ அல்லது சிறப்பெனக் கருதப்பட்ட காலங்களிலிருந்தவர்களோ செய்யாததாகும். மார்க்க அடிப்படையில் இதற்கு எந்தவித ஆதாரமுமில்லை. மௌலிது ஓதுகின்றவர்கள் அதிகமாக, ஷிர்க்கிலேயே மூழ்கியுள்ளனர். அவர்கள், மௌலிதுகளில் பின்வருமாறு ஓதுவார்கள்.

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on நபி (ஸல்) அவர்கள் பேரில் மௌலிது வைபவம் நடத்துதல்.

துன்பம் ஏற்படுவதற்கான காரணங்களும் அவற்றை நீக்குவதற்கான வழிகளும்.

துன்பங்கள் ஏற்படுவது பற்றியும் அவற்றை அடியார்களிடமிருந்து அல்லாஹ் நீக்குவது பற்றியும் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on துன்பம் ஏற்படுவதற்கான காரணங்களும் அவற்றை நீக்குவதற்கான வழிகளும்.

ஈமானுடைய கிளைகளின் வகைகள்!

‘ஈமான் என்பது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட கிளைகள் கொண்டதாகும். அவற்றில் மிக உயர்வானது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்லுவதாகும். மிகத்தாழ்ந்தது பாதையில் (பிறருக்குத்) தீங்கு ஏற்படுத்தக் கூடியதை அகற்றி விடுவதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் சொன்னதை இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ஈமானுடைய கிளைகளின் வகைகள்!

ஈமானுடைய கிளைகளும், குஃப்ருடைய கிளைகளும்

1. சொல், செயல், விசுவாசம் என்று ஈமானுக்கு மூன்று கிளைகள் உண்டு. ஈமானென்றால் நாவினால் மொழிந்து, உள்ளத்தினால் உறுதிகொண்டு, உறுப்புகளினால் செயல்படுத்துவதாகும். நாவினால் மொழிவதென்றால் இஸ்லாத்தின் கலிமாவான ‘லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற வாக்கியத்தை மொழிவதாகும். உள்ளத்தின் செயல்பாடென்றால் அதன் எண்ணம் அதனைத் தூய்மைப்படுத்தல் என்றும், உறுப்புகளைக் கொண்டு செயல்படுத்தல் என்றும் இருவகைப்படும்.

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ஈமானுடைய கிளைகளும், குஃப்ருடைய கிளைகளும்

சிறிய ‘நிபாக்’

இது செயல்மூலம் ஏற்படுகின்றது. பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது இதற்கு ஆதாரமாய் அமைந்துள்ளது.   ‘முனாபிக்குடைய அடையாளம் மூன்று. 1. பேசினால் பொய்யுரைப்பான்; 2. வாக்களித்தால் மாறு செய்வான்; 3. நம்பினால் மோசடி செய்வான்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on சிறிய ‘நிபாக்’

பெரிய ‘நிபாக்’ (நயவஞ்சகத்தனம்)

பெரிய நிபாக் (நயவஞ்சகத்தனம்) என்றால் நாவினால் இஸ்லாமிய நம்பிக்கையை வெளியாக்குவதும், உள்ளத்தினாலும் உறுப்புகளினாலும் ‘குஃப்ரை’ நம்புவதுமாகும். இது பலவகைப்படும். 1. நபி (ஸல்) அவர்களைப் பொய்யாக்குதல் அல்லது அவர்கள் கொண்டுவந்தவற்றில் சிலவற்றைப் பொய்யாக்குதல். 2. நபி (ஸல்) அவர்கள் மீது கோபம் கொள்ளுதல் அல்லது அவர்கள் கொண்டுவந்ததில் சிலவற்றின் மீது வெறுப்படைதல். 3. இஸ்லாம் வீழ்ச்சியடைவதால் … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on பெரிய ‘நிபாக்’ (நயவஞ்சகத்தனம்)

தாகூத்துகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்

‘தாகூத்’ என்றால், அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படக் கூடியவையும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் வழிபடாமல், வணக்கத்தாலும், வழிபாட்டாலும் பின்பற்றுவதாலும் வேறொருவரைக் கொண்டு திருப்தியடைவதும் ஆகும். அல்லாஹ்வுக்கு அடிபணியுமாறும், தாகூத்துகளை விட்டு விலகி விடுமாறும் தத்தமது கூட்டத்தாருக்குக் கட்டளையிடுமாறு ரஸூல்மார்களை அல்லாஹ் அனுப்பினான். இதுபற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தாகூத்துகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்

சிறிய குஃப்ரும் அதன் வகைகளும்

இந்த வகை இதனைச் செய்பவனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடாது. 1. (அல்லாஹ்வுடைய) அருட்கொடைகளை நிராகரித்தல்:- மூஸா (அலை) அவர்களுடைய கூட்டத்தாரை நோக்கி அல்லாஹ் கூறும் சில அம்சங்கள் இதற்கு ஆதாரமாய் அமைந்துள்ளன.

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on சிறிய குஃப்ரும் அதன் வகைகளும்