Author Archives: Jafar
கஃபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்தல்.
841. என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருக்கவில்லை என்றால் கஅபாவை இடித்துவிட்டு, (முழுக்க முழுக்க) இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷிகள் அதை (அடித்தளத்தை விட)ச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும், அதற்கு ஒரு பின்புற வாசலையும் அமைத்திருப்பேன்” என்று … Continue reading
கஃபாவினுள் தொழுதல்.
838. நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உஸாமா இப்னு ஸைத் (ரலி) உஸ்மான்பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவுக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டு (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்த பிலால் (ரலி) அவர்களிடம் ‘நபி (ஸல்) அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள்?’ என்று கேட்டேன். ‘ஒரு தூண் தம் வலப்பக்கமும் … Continue reading
அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்.
13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது. 13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும்,பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன். 13:10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை … Continue reading
மாதவிடாய்ப் பெண் தவிர தவாஃப் அல் விதா அனைவரும் செய்வது.
835. ”இறையில்லம் கஅபாவை வலம் வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் விதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.) புஹாரி :1755 இப்னு அப்பாஸ் (ரலி). 836. ‘ஹஜ்ஜின்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் … Continue reading
பலிப்பிராணியை வாகனமாக்குதல்.
833. ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்வீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது முறையிலோ, மூன்றாவது முறையிலோ நபி (ஸல்) அவர்கள் … Continue reading
நம்பிக்கைக் கொண்டவர்களுக்கான இறைச்சோதனைகள் யாவை?
கேள்வி எண்: 42. எவை எவைகளைக் கொண்டு ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?
பலிப்பிராணிகளை அலங்கரித்தல்.
831. நபி (ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களின் கழுத்து மாலைகளை நான் என்னுடைய கைகளாலேயே கோர்த்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் தங்களின் பிராணியின் கழுத்தில் போட்டு அதற்கு அடையாளமுமிட்டு அதை பலியிட்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த எந்தப் பொருளும் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள்.) புஹாரி : … Continue reading
ஒட்டகத்தை நிற்க வைத்து அறுத்தல்.
830. ”இப்னு உமர் (ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, ‘அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை!’ என்று கூறியதை பார்த்தேன்.” புஹாரி : 1713 ஜைது பின் ஜூபைர் (ரலி).
பலியிட்ட பிராணியின் இறைச்சி தோல் தர்மம் பற்றி..
829. நபி (ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். புஹாரி : 1717 அலி (ரலி).
அறுப்பு தினத்தில் தவாஃப் அல் இஃபாதா செய்வது.
824. நான் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8-ஆம் நாள் லுஹர், அஸ்ர் தொழுகைகளை எங்கு தொழுதார்கள் என்பதைப் பற்றித் தாங்கள் அறிந்ததை எனக்குத் தெரிவியுங்களேன் எனக் கேட்டேன். அதற்கவர் ‘மினாவில்’ என்றார். பிறகு நான், (ஹஜ் முடித்து மினாவிலிருந்து) திரும்பும்போது எங்கு அஸர் தொழுதார்கள் எனக் கேட்டதும் … Continue reading