உஹதுப்போர்.

1169. உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாகி, அவர்களின் நடுப் பல் உடைக்கப்பட்டுவிட்டபோது, அலீ (ரலி) (காயத்தைக் கழுவுவதற்காக) கேடயத்தில் அவ்வப்போது தண்ணீர் கொண்டு வர, ஃபாத்திமா (ரலி) காயத்தைக் கழுவி வந்தார்கள். இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி), ஒரு பாயை எடுத்து அதை எரித்து, (அதன் சாம்பலை) நபி (ஸல்) அவர்களின் காயத்தின் மேல் வைத்து அழுத்தி விட, இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.

புஹாரி : 2903 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

1170. (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. ‘அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, ‘இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3477 இப்னு மஸ்ஊத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on உஹதுப்போர்.

உங்கள் உருவங்களை தன் விருப்பப்படி அமைத்த இறைவன் யார்?

கேள்வி எண்: 71. “அ(ல்லாஹ்)வனே (உங்கள் அன்னையரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான்” என்ற வசனம் எங்குள்ளது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on உங்கள் உருவங்களை தன் விருப்பப்படி அமைத்த இறைவன் யார்?

ஹூதைபிய்யா உடன்படிக்கை பற்றி….

1167. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப் (ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று எழுதாதீர்கள்” (என்று சொல்லிவிட்டு) முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி), ‘நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்” என்று கூறினர். எனவே, நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், ‘அதை அழித்து விடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி), ‘நான் அதை (ஒருபோதும்) அழிக்கப் போவதில்லை” என்று கூறிவிட்டார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தால் அதை அழித்தார்கள். நானும் என் தோழர்களுடன் (மக்கா நகரில்) மூன்று நாள்கள் தங்குவோம். அதில் நாங்கள், ‘ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்’ உடன் தான் நுழைவோம் என்றும் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மக்கள், ‘ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்’ என்றால் என்ன?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அவர்கள், ‘உள்ளிருக்கும் ஆயுதங்களுடன் கூடிய உறை” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :2698 பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1168. நாங்கள் ஸிஃப்பீன் (போரில்) இருந்தோம். அப்போது ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) எழுந்து நின்று சொன்னார்கள்: மக்களே! (யாரையும் போரில் கலந்து கொள்ளாததற்காகக் குற்றம் சாட்டாதீர்கள்.) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாங்கள் ஹுதைபிய்யா உடன் படிக்கையின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். போரிடுதல் பொறுத்தமானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம்.) அப்போது உமர் அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றனர்)” என்று பதிலளித்தார்கள். உமர் அவர்கள், ‘போரில் கொலையுண்டு விடும்போது நம்முடைய வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களின் வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள். இல்லையா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி), ‘அப்படியிருக்க, நாம் ஏன் நம்முடைய மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் திரும்பி விடுவதா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களிடம் தாம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது அபூபக்ர் அவர்கள், ‘அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்” என்று கூறினார்கள். அப்போது ‘அல் ஃபத்ஹ்’ (‘உமக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்து விட்டோம்’ என்று தொடங்கும்) அத்தியாயம் 48 அருளப்பட்டது. அதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமருக்கு இறுதிவரை ஓதிக் காட்டினார்கள். அப்போது உமர் அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! வெற்றியா அது?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம் (வெற்றி தான்)” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :3182 அபூவாயில் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on ஹூதைபிய்யா உடன்படிக்கை பற்றி….

ஒரு பறவைக்கு தெரிந்த உண்மை மனிதனுக்குத் தெரியாத மர்மம்

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ

27:20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.

لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُّبِينٍ

27:21. ‘நிச்சயமாக நான் அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வரவேண்டும்’ என்றும் கூறினார்.

فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِن سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ

27:22. ‘(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார். அதற்குள் (ஹுத்ஹுத் பறவை வந்து) கூறிற்று.’ தாங்கள் அறியாத ஒன்றைத் நான் தெரிந்துள்ளேன். ‘ஸபா’ என்னும் நகரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்.’ என்று கூறியது.

إِنِّي وَجَدتُّ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ

27:23. ‘நிச்சயமாக அ(ந்நாட்ட)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். மேலும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. மகத்தான ஒரு அரியாசனமும் (அர்சும்) இருக்கிறது.’

وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ

27:24. ‘அவளும், அவளுடைய சமுதாயத்தினரும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன். அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை’

أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ

27:25. ‘வானங்களிலும்,பூமியலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீஙகள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? ‘

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

27:26. ‘அல்லாஹ்-அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை.(அவன்) மகத்தான அர்சுக்கு உரிய இறைவன்’ (என்று ஹுத்ஹுத் பறவை கூறிற்று.

நன்றி: அல்பாக்கவி.காம்

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on ஒரு பறவைக்கு தெரிந்த உண்மை மனிதனுக்குத் தெரியாத மர்மம்

கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுதல்.

1166. நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். ‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது” (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.

புஹாரி :2478 இப்னு மஸ்ஊத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுதல்.

அறிவும் சுதந்திரமும்!

அல்லாஹ்வின் ஓர் உயர் படைப்பான மனிதன் நல்வாழ்வு பெறுவதற்கு, இஸ்லாம் எனும் வாழ்க்கை முறையைக் கொடுத்தான் என்பதை நாம் முன்னர் விளக்கமாகப் பார்த்தோம். எனினும், மனிதன் இஸ்லாத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று அல்லாஹ் பலவந்தப்படுத்தவில்லை.

மாறாக மனிதனுக்கு

சிந்திக்கக் கூடிய ஆற்றலைக் கொடுத்தான்
நல்லது கெட்டதைப் புரிந்துக் கொள்ளக்கூடிய திறமையைக் கொடுத்தான். அத்துடன்,
இவற்றைத் தான் விரும்பியவாறு பயன்படுத்தும் சுதந்திரத்தையும் கொடுத்தான்.

அல்லாஹ்வின் இவ்வேற்பாடு காரணமாக ஒருவன் இஸ்லாத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ உரிமையும் சுதந்திரமும் பெறுகின்றான். இது எத்தகைய உயர்ந்த ஏற்பாடு என்பதைக் கீழுள்ள விவரங்களைப் படித்த பின் நீங்கள் உணருவீர்கள்.

ஓர் உதாரணத்தைக் கூறுகின்றேன்: Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on அறிவும் சுதந்திரமும்!

தாயிஃப் யுத்தம்.

1165. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, ‘இறைவன் நாடினால் நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள், ‘இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா?’ என்று பேசிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) ஒரு முறை, ‘நாம் திரும்பிச் செல்வோம்” என்று கூறினார்கள். பிறகு (தோழர்களின் தயக்கத்தைக் கண்டு) முற்பகலிலேயே போர் புரியுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் முற்பகலில் போர் புரிய, (அதனால்) (பலத்த) காயங்களுக்கு ஆளானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இறைவன் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சியை அளித்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

புஹாரி : 4325 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on தாயிஃப் யுத்தம்.

ஹூனைன் போர் பற்றி….

1163. பராஉ (ரலி) அவர்களிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது பின்வாங்கி ஓடினீர்களா?’ என்று கேட்க, அதற்கு அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் வாலிபர்களும் ஆயுதபலமில்லாதவர்களும் களைத்துப் போய் நிராயுதபாணிகளாக வெளியேறினர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் வில் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர்களின் எந்த அம்பும் இலக்கு தவறி விழுவதில்லை. அவர்கள் குறி தவறாமல் அம்புகளை எய்தார்கள். எனவே, முஸ்லிம்கள் மீண்டும் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகன் அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ் இப்னி அப்தில் முத்தலிப் (ரலி) ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (செய்தியறிந்ததும் அதைவிட்டு) இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘நான் இறைத்தூதர் தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.

புஹாரி 2930 அபூ இஸ்ஹாக் (ரலி).

1164. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் ஹுனைன் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் தோற்றுப் பின்வாங்கிச் சென்றீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘(எங்களில் சிலர் பின் வாங்கிச் சென்றது உண்மையே. ஆயினும்,) நபி (ஸல்) அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. (எதிரிகளான) ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘நான் இறைத்தூதர் தாம்; இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனுடைய) மகன் ஆவேன்’ என்று (பாடிய படிக்) கூறிக் கொண்டிருந்தார்கள்.

புஹாரி :4316 அபூ இஸ்ஹாக் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஹூனைன் போர் பற்றி….

உலக மக்கள் அனைவருக்குமான வேதநூல் எது?

கேள்வி எண்: 70. “இது (குர்ஆன்) உலக மக்கள் அனைவருக்கும் நல்லுரையேயன்றி வேறில்லை” என அல்லாஹ் நமக்கு அறிவுறுத்தும் வசனம் எது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on உலக மக்கள் அனைவருக்குமான வேதநூல் எது?

ஹெர்குலிஸூக்கு இஸ்லாத்தைத் தழுவ நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.

1162. அபூ சுஃப்யான்(ரலி) தம் வாய்ப்பட எனக்கு அறிவித்தாவது: (குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்துகொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) ஹெராக்ளியஸிற்கு நிருபமொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ‘திஹ்யா அல் கல்பீ’ அவர்கள் கொண்டு வந்து, ‘புஸ்ரா’வின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அப்போது ஹெராக்ளியஸ் (தம்மைச்சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்) ‘தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக்கொண்டிருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கிறார்களா?’ என்று கேட்டதற்கவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத்திற்காகத் தங்கயிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன். எனவே, நாங்கள் ஹெராக்ளியஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரசவையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹெராக்ளியஸ், ‘தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?’ என்று கேட்டதற்கு நான், ‘நான் (தான் நெருங்கிய உறவினன்)” என்று சொன்னேன். எனவே, அவரின் முன்னிலையில் என்னை அமர்த்தினார். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமர்த்தினார். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), ‘தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப் போகிறேன்; இவர் என்னிடம் பொய் சொன்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்” என்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்து விடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன்.

பிறகு, ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், ‘உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப்பட்டது? என்று இவரிடம் கேள்” என்று கூறினார். நான், ‘அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடையவராவார்” என்று பதிலளித்தேன். ஹெராக்ளியஸ் ‘அவரின் முன்னோர்களில் அரசர் எவராவது இருந்திருக்கிறாரா?’ என்று கேட்டார். நான் ‘இல்லை” என்று சொன்னேன். ஹெராக்ளியஸ் ‘அவர் தம்மை ‘நபி’ என வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் கூறினார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை” என்று சொன்னேன். ‘அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை; பலவீனமானவர்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர்” என்றேன். அவர், ‘அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்துகொண்டே போகின்றனரா?’ என்று கேட்டார். நான் ‘இல்லை அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்” என்று சொன்னேன். அவர், ‘அவரின் மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தம் பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை” என்று சொன்னேன்.அவர், ‘அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?’ என்று கேட்டார். நான், ‘உண்டு” என்று சொன்னேன். அவர், ‘அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன?’ à
®Žà®©à¯à®±à¯ கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (கிணற்று) வாளிகள்தாம். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒரு முறை) அவர் எங்களை வெற்றிகொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம்” என்று சொன்னேன்.அவர், ‘அந்த மனிதர் வாக்கு மீறுகிறாரா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை. (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. (பிறகு) அவர், ‘இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை ‘நபி’ என) வாதித்ததுண்டா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை” என்று சொன்னேன்.

பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: ‘அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்களிடையே அவரின் குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம் பரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் சிறந்த பாரம் பரியத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார். நான் உம்மிடம் அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு நீர் ‘இல்லை’ என்றீர். அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், ‘தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒருவர் இவர்’ என்று கூறியிருப்பேன். ”மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமானவர்களா?’ என்று அவரைப் பின்பற்றுபவர்களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள் தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர். நான் உம்மிடம் ‘அவர் தம்மை ‘நபி’ என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீர் ‘இல்லை” என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேசா(த் துணிய)த அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன். உம்மிடம் நான் ‘அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு ‘இல்லை’ என்றீர். இறை நம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்துவிடும்போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படையமாட்டார்.) உம்மிடம் நான் ‘அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து வருகின்றனரா?’ என்று கேட்டேன், நீர் ‘அதிகரித்தே வருகின்றனர்’ என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை அத்தகையது தான். அது முழுமையடையும் வரை (அதிகரித்துக்கொண்டே செல்லும்).

மேலும், உம்மிடம் நான் ‘அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்குமிடையே போர் கிணற்று வாளிகள் தாம்; (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன என்றும், (ஒரு முறை) அவர் உங்களை வெற்றி கொண்டால் (மறு முறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். ‘அவர் வாக்கு மீறுகிறாரா?’ என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், ‘அவர் வாக்கு மீறுவதில்லை’ என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை. நான் ‘இவருக்கு முன் உங
்களில் எவராவது இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?’ என்று உம்மிடம் கேட்டபோது நீர் ‘இல்லை’ என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், ‘தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் செல்கிற ஒருவர் இவர்’ என நான் சொல்லியிருப்பேன்” என்று கூறினார்.

பிறகு ஹெராக்ளியஸ், ‘என்ன செய்யும் படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகிறார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும் படியும், உறவைக் காத்துவரும்படியும், ஒழுக்கமாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்” என்று சொன்னேன். ஹெராக்ளியஸ், ‘அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மையானால், அவர் இறைத்தூதர் தாம். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷிகளாகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரின் ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரண்டு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும்” என்று கூறினார். பிறகு ஹெராக்ளியஸ் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார்.

அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

அளவிலா அருளும் நிகரிலா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்… இது இறைத்தூதர் முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்பட்ட நிருபம்:)
நேர்வழியைப் பின்பற்றியவர் மீது (இறைவனின்) சாந்தி நிலவட்டும். இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஏற்றால், ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நன்மையை இரண்டு மடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (குடிமக்களான) விவசாயிகளின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதின் குற்றமும்) உங்களையே சாரும். ‘வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது. அவனுக்கு எதனையும் நான் இணை வைக்கலாகாது. அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால், ‘நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகிறவர்கள்) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்’ என்று கூறிவிடுங்கள்.

ஹெராக்ளியஸ் அந்த நிருபத்தைப் படித்து முடித்தபோது, அவருக்கு அருகிலேயே (அவரைச் சுற்றிலுமிருந்த ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. எங்களை வெளியே கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. உடனே, நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். நாங்கள் வெளியே வந்தபோது, நான் என் சகாக்களிடம் ‘இப்னு அபீ கப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (-ரோமரின்-) மன்னரே அவருக்கு அஞ்சுகிறாரே!” என்று சொன்னேன். (அன்று முதல்) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதிகொண்டவனாகவே இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.

புஹாரி 4553 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on ஹெர்குலிஸூக்கு இஸ்லாத்தைத் தழுவ நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.