27:20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.
27:21. ‘நிச்சயமாக நான் அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வரவேண்டும்’ என்றும் கூறினார்.
27:22. ‘(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார். அதற்குள் (ஹுத்ஹுத் பறவை வந்து) கூறிற்று.’ தாங்கள் அறியாத ஒன்றைத் நான் தெரிந்துள்ளேன். ‘ஸபா’ என்னும் நகரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்.’ என்று கூறியது.
27:23. ‘நிச்சயமாக அ(ந்நாட்ட)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். மேலும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. மகத்தான ஒரு அரியாசனமும் (அர்சும்) இருக்கிறது.’
27:24. ‘அவளும், அவளுடைய சமுதாயத்தினரும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன். அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை’
27:25. ‘வானங்களிலும்,பூமியலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீஙகள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? ‘
27:26. ‘அல்லாஹ்-அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை.(அவன்) மகத்தான அர்சுக்கு உரிய இறைவன்’ (என்று ஹுத்ஹுத் பறவை கூறிற்று.
நன்றி: அல்பாக்கவி.காம்