இஸ்லாம் – கிறிஸ்துவம் ஆகிய மதங்களின் தோற்றுவாய் வெவ்வேறானதா?

திண்ணமாக இல்லை! யூத மதத்தைப் போன்றே, இப்ராஹீம் (அலை) அவர்களை இவ்விரு மதங்களும் சிறப்புக்குரிய தமது மூதாதையராகவும், இறைத்தூதராகவும் போற்றுகின்றன. அதுமட்டுமல்ல! அவருடைய இரண்டு புதல்வர்களின் மூலமாக நேரடி வாரிசுகளாக வந்த மூன்று இறைத்தூதர்களையும் இம்மூன்று மதங்களும் நம்புகின்றன.

அதாவது, இப்ராஹீம் (அலை) அவர்களின் மூத்த புதல்வர்களான இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியில் வந்தவர்தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்! Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on இஸ்லாம் – கிறிஸ்துவம் ஆகிய மதங்களின் தோற்றுவாய் வெவ்வேறானதா?

பால் குடித்தல் பற்றி….

1307. நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரின் குதிரை அவருடனேயே பூமியில் அழுந்திவிட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), ‘எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடனிருக்க, ஓர் ஆட்டிடையன் அவ்வழியே சென்றான். உடனே, அபூபக்ர் (ரலி) ஒரு கிண்ணத்தை எடுத்து (ஆடு ஒன்றிலிருந்து) சிறிது பாலை அதில் கறந்து அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அபூ பக்ர் அவர்கள் திருப்தியடையும் வரை நபி (ஸல்) அவர்கள் (அதிலிருந்து) அருந்தினார்கள்.

புஹாரி :3908 அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1308. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஈலியா’ (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாரிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும்” என்று கூறினார்கள்.

புஹாரி : 4709 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on பால் குடித்தல் பற்றி….

முஃமினான நல்லடியார்கள் மீது எந்த அதிகாரமுமற்ற ஷைத்தான்!

17 : 62 ‘எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்’ என்று (இப்லீஸ்) கூறினான்.

17 : 63 ‘நீ போய் விடு; அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் – நிச்சயமாக நரகம்தான் உங்கள் கூலியில் நிறப்பமான கூலியாக இருக்கும்.

17 : 64 ‘இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ, அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட்படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!’ (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை. Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on முஃமினான நல்லடியார்கள் மீது எந்த அதிகாரமுமற்ற ஷைத்தான்!

போதை தராதவற்றை பருக அனுமதி.

1304. அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி), தம் திருமணத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்தார்கள்.) மணப்பெண்ணாயிருந்த அபூ உசைதுடைய துணைவியார் (உம்மு உசைத்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்(குப் பருகக் கொடுப்பதற்)காக மணப்பெண் (உம்மு உசைத்) என்ன ஊறவைத்தார் தெரியுமா? இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குகென்றே (தண்ணீரில்) பேரீச்சம் பழங்களை (முந்தைய) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் ஊறப்போட்டு வைத்திருந்தார். (நபி (ஸல்) அவர்கள் மணவிருந்தைச் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.

புஹாரி :5183 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).

1305. அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி) (தம்) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூ உசைத் (ரலி) அவர்களின் துணைவியார் (மணப்பெண்) உம்மு உசைத் (ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத் (ரலி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரலி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக ஊட்டினார்கள்.

புஹாரி : 5182 ஸஹ்ல் (ரலி).

1306. நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து ‘பனூ சாஇதா’ குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), ‘இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்க, அவள் ‘தெரியாது” என்று பதிலளித்தாள். மக்கள், ‘இவர்கள் தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்” என்று கூறினார்கள். அந்தப் பெண் ‘அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவதியாகி விட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினாள். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் முன்னே சென்று ‘பனூ சாஇதா’ குலத்தாரின் சமுதாயக் கூடத்தில் அமர்ந்தார்கள். பிறகு ‘எங்களுக்குப் பருக (ஏதேனும்) கொடுங்கள். சஹ்லே!” என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குப் புகட்டினேன்.(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹாஸிம் (ரஹ்) கூறினார்: ஸஹ்ல் (ரலி) அந்தக் கிண்ணத்தை எங்களுக்காக வெளியே எடுக்க அதில் நாங்கள் பருகினோம். பிறகு உமர் இப்னு அப்தில் அஜீஸ் (ரஹ்) அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.

புஹாரி :5637 ஸஹ்ல் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on போதை தராதவற்றை பருக அனுமதி.

பிற கலாச்சாரங்களைப் பின்பற்றும் முஸ்லிம்கள் யாரைச் சார்ந்தவர்கள்?

கேள்வி எண்: 79. ‘பிற கலாச்சாரங்களைப் பின்பற்றும் எவரும் அவர்களைச் சார்ந்தவர்களே’ என்ற நபிமொழியை அறிவித்தவரின் பெயர் என்ன? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on பிற கலாச்சாரங்களைப் பின்பற்றும் முஸ்லிம்கள் யாரைச் சார்ந்தவர்கள்?

போதை தரும் மதுவை அருந்தியவன் திருந்தி தவ்பா செய்க.

1303. எவனொருவன் போதை தரும் மதுவை அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5575 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on போதை தரும் மதுவை அருந்தியவன் திருந்தி தவ்பா செய்க.

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.

1301. ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 242 ஆயிஷா (ரலி).

1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, ‘(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)” என்று (அறிவுரை) கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான ‘பித்உ’வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4344 அபூபுர்தா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.

மது ஊற வைக்கப்படும் குடுவைகள் பற்றி…

1296. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்” என்று சொன்னதாக அனஸ் (ரலி) எனக்கு அறிவித்தார்கள்.

புஹாரி : 5587 அனஸ் (ரலி).

1297. நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும், தார் பூசப்பட்ட பாத்திரத்தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

புஹாரி : 5594 அலீ (ரலி).

1298. நான் அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அவர்களிடம் ‘எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பது விரும்பத்தகாதது என இறை
நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீங்கள் வினவியதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (வினவினேன்). இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரான எங்களை சுரைக்காய் குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) கூறினார்:) ‘சுட்ட களிமண் பாத்திரத்தையும் மண்சாடியையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லையா?’ என கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) ‘நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காத ஒன்றை உங்களுக்கு அறிவிக்க வேண்டுமா?’ என்று கூறினார்கள்.

புஹாரி : 5595 இப்ராஹீம் (ரலி).

1299. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு நான் தடை செய்கிறேன்’ என்று கூறினார்கள். (பின்னர் இத்தடை நீக்கப்பட்டது)

புஹாரி : 1398 இப்னு அப்பாஸ் (ரலி).

1300. நபி (ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப்பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, ‘மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே” என்று சொல்லப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்தார்கள்.

புஹாரி : 5593 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on மது ஊற வைக்கப்படும் குடுவைகள் பற்றி…

கனிகளை போதை பெற ஊறவைக்கத் தடை.

1294. நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம் பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சக் செங்காய்களையும் கலந்து ஊற வைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.

புஹாரி : 5601 ஜாபிர் (ரலி).

1295. நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும், பேரீச்சம் பழத்தையும் உலர்ந்த திரட்சையையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும் தடை செய்தார்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித் தனியாக ஊற வைக்கலாம் (என அனுமதியளித்தார்கள்).

புஹாரி : 5602 அபூகதாதா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on கனிகளை போதை பெற ஊறவைக்கத் தடை.

அந்நிய மார்க்கமா இஸ்லாம்?

ன்றைய நவீன உலக கண்ணோட்டத்தின்படி இஸ்லாம் பழமைவாதத்தை வலியுறுத்தும் தீவிரவாத மார்க்கமாகக் கணிக்கப்படுகின்றது. இத்தகைய தவறான கண்ணோட்டம் உருவானது ஏன்? அதற்குரிய பதில் இதுதான்:-

பொதுவாக, இன்றைய மேற்குலக நாகரிகத்தில் மதம் என்பது அவர்தம் அன்றாட வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவோ அல்லது பின்பற்றத்தக்க கூடியதாகவோ இருப்பதில்லை.  Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on அந்நிய மார்க்கமா இஸ்லாம்?