இஸ்லாம் – கிறிஸ்துவம் ஆகிய மதங்களின் தோற்றுவாய் வெவ்வேறானதா?

திண்ணமாக இல்லை! யூத மதத்தைப் போன்றே, இப்ராஹீம் (அலை) அவர்களை இவ்விரு மதங்களும் சிறப்புக்குரிய தமது மூதாதையராகவும், இறைத்தூதராகவும் போற்றுகின்றன. அதுமட்டுமல்ல! அவருடைய இரண்டு புதல்வர்களின் மூலமாக நேரடி வாரிசுகளாக வந்த மூன்று இறைத்தூதர்களையும் இம்மூன்று மதங்களும் நம்புகின்றன.

அதாவது, இப்ராஹீம் (அலை) அவர்களின் மூத்த புதல்வர்களான இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியில் வந்தவர்தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்!  

இளைய மகனார் இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியில் வந்தவர்கள் தாம் மூஸா (அலை) அவர்களும், ஈஸா (அலை) அவர்களும்!

இப்ராஹீம் (அலை) அவர்கள் நிர்மாணித்த குடியிருப்பே இன்றைய மக்கா மாநகரம்! அப்புனித நகரில் அவர்கள் கட்டியெழுப்பிய புனித ‘கஅபா’ இறைஇல்லம்தான் உலக முஸ்லிம்கள் அனைவருடைய (கிப்லா) தொழும் திசையாக இருக்கின்றது.

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.