விருந்தினருடன் வந்த அழைக்காத நபர் பற்றி..

1321. அபூ ஷுஐப் என்ற அன்ஸாரி, (பிராணியை) அறுத்துத் துண்டு போடும் தம் ஊழியரிடம், ‘ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களையும் நான் அழைக்கப் போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்!” என்று கூறிவிட்டு. ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் வேறு ஒரு மனிதரும் சேர்ந்து வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இந்த மனிதர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு அனுமதியளிக்க நீர் விரும்பினால் (அவ்வாறே) அனுமதி அளிப்பீராக! இவர் திரும்பி விட வேண்டும் என நீர் விரும்பினால் திரும்பி விடுவார்!” என்று கூறினார்கள். அதற்கு அபூ ஷுஐப் (ரலி) ‘இல்லை! அவருக்கு நான் அனுமதியளித்து விட்டேன்!” என்றார்கள்.

புஹாரி : 2081 அபூமஸ்ஊது (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on விருந்தினருடன் வந்த அழைக்காத நபர் பற்றி..

உணவு உண்டு முடித்ததும் சாப்பிட்ட விரல்களைச் சூப்புதல்.

1320. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5456 இப்னு அப்பாஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on உணவு உண்டு முடித்ததும் சாப்பிட்ட விரல்களைச் சூப்புதல்.

பூமியில் இறைவேதனையைக் கண்டும் நல்லுணர்ச்சி பெறுவதில்லையே

‘ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து மீள்வதுமில்லை (அதுபற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (அல்குர்ஆன் 9:126)

(பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக் கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது. (அல்குர்ஆன் 7:4)

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை – நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 8:25) Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பூமியில் இறைவேதனையைக் கண்டும் நல்லுணர்ச்சி பெறுவதில்லையே

சபையில் வலப்புறம் பேணுதல்.

1318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காகக் கறந்தோம். பிறகு நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். நபி (ஸல்)அவர்கள் பாலைக் குடித்து முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் இதோ அபூபக்ர் என்று கூறினார்கள். எனினும் நபி (ஸல்) அவர்கள் தமது (பாலின்) மீதத்தை கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்திலிருப்பவர்களே முன்னுரிமையுடையவர்கள். ஆகவே வலப்ப்பத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள் அது நபிவழியாகும் அது நபிவழியாகும் என்று மும்முறை கூறினார்கள்

புஹாரி : 2571 அனஸ் (ரலி).


1319. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), ‘சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.

புஹாரி : 2351 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on சபையில் வலப்புறம் பேணுதல்.

குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடாதே.

1316. (குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி:154 அபூகதாதா (ரலி).


1317. (என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள்.

புஹாரி :5631 துமாமா பின் அப்துல்லாஹ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடாதே.

ஷைத்தானின் சகோதரர்கள் யார்?

கேள்வி எண்: 80. “வீண் விரயம் செய்யாதீர்கள், வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் தோழர்களாவார்கள்” என்ற பொருளுடைய திருமறை வசனம் எது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on ஷைத்தானின் சகோதரர்கள் யார்?

நின்று கொண்டு குடித்தல்.

1315. நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள்.

புஹாரி : 1637 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on நின்று கொண்டு குடித்தல்.

உண்ணும் பருகும் முறையில் பேணுதல்.

1313. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக்கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!” என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

புஹாரி : உமர் பின் அபீஸலமா (ரலி).

1314. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை ‘இக்தினாஸ்’ செய்ய வேண்டாமெனத் தடை விதிப்பதை கேட்டுள்ளேன். (‘இக்தினாஸ்’ என்றால், தோல் பைகளின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து பருகுவதாகும்”)

புஹாரி : 5626 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on உண்ணும் பருகும் முறையில் பேணுதல்.

மாலை நேரம் பிள்ளைகளை வெளியில் விடாதே.

1310. இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.

புஹாரி :3307 ஜாபிர் (ரலி).
1311. நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6293 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1312. மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது ‘நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்” என்றார்கள்.

புஹாரி : 6294 அபூமூஸா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on மாலை நேரம் பிள்ளைகளை வெளியில் விடாதே.

பானமுள்ள பாத்திரத்தை மூடுதல்.

1309. அபூ ஹுமைத் அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ(ரலி) ‘அந்நகீஉ’ (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டுவந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள்.
புஹாரி : 5605 ஜாபிர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on பானமுள்ள பாத்திரத்தை மூடுதல்.