1313. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக்கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!” என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
புஹாரி : உமர் பின் அபீஸலமா (ரலி).
1314. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை ‘இக்தினாஸ்’ செய்ய வேண்டாமெனத் தடை விதிப்பதை கேட்டுள்ளேன். (‘இக்தினாஸ்’ என்றால், தோல் பைகளின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து பருகுவதாகும்”)
புஹாரி : 5626 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).