தம்மைக் காட்டிலும் பிறரின் தேவைக்கு முன்னுரிமையளித்தல்.

1330. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.”.. அல்லது ‘இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.”.. என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நான் (விருந்தளிக்கிறேன்)” என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து” என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, ‘நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை” என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், ‘உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு” என்று கூறினார். அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச் சரிசெய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்” என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

புஹாரி : 3798 அபூஹூரைரா (ரலி).

1331. நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், ‘உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘(இவை) விற்பதற்காகவா? அன்பளிப்பாகவா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை. விற்பதற்காகத் தான் (கொண்டு வந்துள்ளேன்)” என்று பதிலளித்தார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ‘அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்றி முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி (ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு அதைக் கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள். இரண்டு (அகன்ற) தட்டுகளில் அவற்றை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளும் அப்படியே மீதமாகிவிட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தில் ஏற்றிச் சென்றோம்.

புஹாரி : 2618 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் (ரலி).

1332. திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் ‘இருவருக்குரிய உணவு யாரிடம் உள்ளதோ அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை அழைத்துச் செல்லட்டும்! நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஐந்தாவது, ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும்!’ எனக் கூறினார்கள். அபூ பக்ர் (ரலி) மூன்று நபர்களை அழைத்துச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் பத்து நபர்களை அழைத்துச் சென்றனர். (வீட்டில்) நானும் என் தந்தை (அபூ பக்ரும்) தாயும் என்னுடைய வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ருடைய வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வரும் வேலையாளும் இருந்தோம். என் மனைவியும் என்று அவர் குறிப்பிட்டாரா இல்லையா என்று அடுத்த அறிவிப்பாளர் சந்தேகம் தெரிவிக்கிறார். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தனர். ‘உங்கள் விருந்தினரை விட்டுவிட்டு எங்கே தங்கி விட்டீர்?’ என்று அவர்களின் மனைவி கேட்டனர். அதற்கு அபூபக்ர் (ரலி), ‘அவர்களுக்கு இன்னும் நீ இரவு உணவு அளிக்கவில்லையா?’ என்று திருப்பிக் கேட்டார்கள். ‘உணவை முன் வைத்த பின்பும் நீங்கள் வருவது வரை அவர்கள் உண்ண மறுத்துவிட்டனர்’ என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்பதை அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.

‘அறிவிலியே!’ ‘மூக்கறுபடுவாய்!’ என என்னை ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் ‘சாப்பிடுங்கள்! அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒருபோதும் நான் சாப்பிட மாட்டோம்’ என்று (தம் குடும்பத்தினரை நோக்கிக்) கூறினார்கள். நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும்போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அனைவரும் வயிறு நிரம்ப உண்டார்கள். அதற்கு முன்னிருந்ததை விட உணவு அதிகமாக இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விட அதிகமாக உணவு இருப்பதைக் கண்ட அபூபக்ர் (ரலி) ‘பனூ ஃபிராஸ் சகோதரியே! இது என்ன?’ என்று (தம் மனைவியிடம்) வினவினார்கள். அதற்கவர் ‘என் கண் குளிர்ச்சியின் மேல் ஆணை! இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு இப்போது அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூ பக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது. எங்களுக்கும் ஒரு கூட்டத்தினருக்குமிடையே உடன் படிக்கை ஒன்று இருந்தது. அந்தக் கெடு முடிந்துவிட்டது. (அது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தவர்களை) பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைவரின் கீழ் அமைத்தோம். அவர்களில் ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவர்கள் அனைவரும் அந்த உணவிலிருந்து சாப்பிட்டார்கள்.

புஹாரி : 602 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on தம்மைக் காட்டிலும் பிறரின் தேவைக்கு முன்னுரிமையளித்தல்.

அரக்கு மரத்தின் பழங்கள் பற்றி..

1329. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?’ என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3406 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on அரக்கு மரத்தின் பழங்கள் பற்றி..

கண்ணுக்கு மருந்தாகும் சமையல் காளான்.

1328. சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4478 ஸயீத் இப்னு ஸைத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on கண்ணுக்கு மருந்தாகும் சமையல் காளான்.

அல்லாஹ்வுக்கு உவப்பான செயல்களின் பால் இட்டுச்செல்லும் உறுதியான ஈமான்!

23:1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

23:2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

23:3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

28:55. அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து; ”எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள்.

அல்குர்ஆன்

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , | Comments Off on அல்லாஹ்வுக்கு உவப்பான செயல்களின் பால் இட்டுச்செல்லும் உறுதியான ஈமான்!

மதீனத்துப் பேரீத்தங்கனிகளின் சிறப்பு.

1327. தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5768 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on மதீனத்துப் பேரீத்தங்கனிகளின் சிறப்பு.

தடுக்கப்பட்ட உண்ணும் முறை.

1326. நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர் (ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர் (ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, ‘இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரிடம் அனுமதி பெற்றாலே தவிர” என்று கூறுவார்கள்.

புஹாரி : 2455 ஜபாலா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on தடுக்கப்பட்ட உண்ணும் முறை.

வெள்ளரிக்காயுடன் பேரீச்சச் செங்காய்களை உண்ணுதல்.

1325. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை கண்டேன்.

புஹாரி :5440 அப்துல்லாஹ் பின் ஜாபிர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on வெள்ளரிக்காயுடன் பேரீச்சச் செங்காய்களை உண்ணுதல்.

சுரைக்காயை விரும்பி உண்ணுதல்.

1324. ‘ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்ந்தி போடப்பட்ட குழம்பையும் நபி (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்; நபி (ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகி விட்டேன்!”

புஹாரி : 2092 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on சுரைக்காயை விரும்பி உண்ணுதல்.

மிக நெருக்கமான நட்புடையவர் விருந்துக்கு அவர் அழைக்காதவர்களை விருந்துக்கு அழைத்துச் செல்தல்.

1322. (போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, ‘நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?’ என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு ‘ஸாவு’ அளவு வாற்கோதுமையிலிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும்போது அவளும் (அரைத்து) முடித்துவிட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும்போது என் மனைவி,) ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம். (‘உணவு கொஞ்சம் தானிருக்கிறது’ என்று கூறிவிடுங்கள்)” என்று சொன்னாள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு ‘ஸாவு’ அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்” என்று அழைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், ‘அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்” என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் – ரலி – அவர்களிடம்), ‘நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்கவேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்” என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி – ஸல் – அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், ‘நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் அதில் (தம் திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் – பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் – பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), ‘ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் உன்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே” என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவைவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சம் குறையாமல்) முன்பிருந்தது போன்றே இருந்தது. மேலும், எங்கள் குழைத்தமாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போன்றே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.

புஹாரி :4102 ஜாபிர பின் அப்துல்லாஹ் (ரலி).

1323. அபூ தல்ஹா (ரலி) (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களà
¯à®•்கிருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி), ‘ஆம், இருக்கிறது” என்று கூறிவிட்டு வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு, உம்மு சுலைம் (ரலி), தம் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியில் என் கையைக் கட்டிவிட்டார்கள். பிறகு என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உன்னை அபூ தல்ஹா அனுப்பினரா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்” என்றேன். ‘உணவுடனா அனுப்பியுள்ளார்?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்” என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) தம்முடன் இருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்” என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில், அபூ தல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து (நபி – ஸல் – அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விபரத்தைத் தெரிவித்தேன். உடனே, அபூ தல்ஹா (ரலி) (என் தாயாரிடம்), ‘உம்மு சுலைமே! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே” என்று கூறினார்கள். உம்மு சுலைம் (ரலி), ‘அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்” என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா (தாமே நபி-ஸல்- அவர்களை முன்சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ தல்ஹா தம்முடனிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, ‘உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டு வா!” என்று கூறினார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்திரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம் (ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ்வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) கூறினார்கள். பிறகு, ‘பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு, அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் இருந்தார்கள்.

புஹாரி : 3578 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on மிக நெருக்கமான நட்புடையவர் விருந்துக்கு அவர் அழைக்காதவர்களை விருந்துக்கு அழைத்துச் செல்தல்.

கஅபா – அது என்ன?

ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி இது: இறை இல்லம் ஒன்றை நிர்மாணிக்கும்படி தனது தூதரான இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கும் இறைவன் கட்டளையிட்டான். இறைக்கட்டளையை சிரமேற்கொண்டு அவ்விருவரும் கட்டியெழுப்பியதுதான் இந்த ‘கஅபா’ ஆலயம்! இந்த இறைஇல்லம் கல்லைக் கொண்டு கட்டப்பட்டதாகும்!

இந்த இறைஇல்லம் ஆதம் (அலை) அவர்கள் காலந்தொட்டே இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on கஅபா – அது என்ன?