அந்நிய மார்க்கமா இஸ்லாம்?

ன்றைய நவீன உலக கண்ணோட்டத்தின்படி இஸ்லாம் பழமைவாதத்தை வலியுறுத்தும் தீவிரவாத மார்க்கமாகக் கணிக்கப்படுகின்றது. இத்தகைய தவறான கண்ணோட்டம் உருவானது ஏன்? அதற்குரிய பதில் இதுதான்:-

பொதுவாக, இன்றைய மேற்குலக நாகரிகத்தில் மதம் என்பது அவர்தம் அன்றாட வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவோ அல்லது பின்பற்றத்தக்க கூடியதாகவோ இருப்பதில்லை.  

மாறாக, முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமே உயிர் மூச்சாக அவர்களின் சிந்தனையில் தவழ்கின்றது. மேலும், சார்பற்றதாகவோ, அல்லது அதிதீவிரத்தன்மை கொண்டதாகவோ அல்லாத நடுநிலையான ஒரு கொள்கையை அது முன்வைக்கின்றது.

அதுமட்டுமல்ல, இறைக் கட்டளையை முன்னிறுத்தும் ஷரீஅத் எனும் மார்க்க சட்ட திட்டங்களின்படியே மனித வாழ்வு நடைபோட வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் திடமான நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர்.

 ஆகவே, பிரச்சனைகளுக்குரிய தீர்வை இறைவழியிலேயே காணவேண்டும் எனும் கொள்கையிலிருந்து அவர்கள் பின்வாங்குவதில்லை!

எனவே, அன்றாட வாழ்வில் மதத்தைப் புறந்தள்ளி விட்டு ஒரு சடங்காக மட்டுமே அதனைக் காணும் மக்களுக்கு குறிப்பாக மேற்குலக சமூகத்துக்கு, இறைமார்க்கத்தை தம் உயிர் மூச்சாக கொண்டு அதனடிப்படையில் தமது வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம்கள் பின்பற்றும் இஸ்லாம் ஓர் அந்நிய மார்க்கமாகத் தென்படுவதில் வியப்பொன்றுமில்லையே!

ஆனாலும், இஸ்லாமே உண்மையானது என்பது கண்கூடு!

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத். 

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.