1606. உஹதுப் போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன். எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்தனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாவை தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (ஜனாஸா) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘யார் அந்தப் பெண்?’ என வினவினார்கள். அம்ர்டைய மகள் என்றோ அல்லது அம்ர்டைய சகோதரி என்றோ (கூடியிருந்தோர்) கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘நீ ஏன் அழுகிறாய்? நீ அழுதாலும் அழாவிட்டாலும் ஜனாஸா உயர்த்தப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்” என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களின் சிறப்பு
ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் சிறப்பு (2)
1604. (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்” என்று கூறினார்கள்.
1605. நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்” என்று கூறினார்கள்.
குவைத் இஸ்லாமிய நிலையம் – IPC (Islam Presentation Committee) ஓர் அறிமுகம்
குவைத் ஓர் இஸ்லாமிய நாடு! அதன் கலாச்சாரம், பண்பாடு, மரபுகள் அனைத்தும் இஸ்லாத்தை சார்ந்தே அமைந்துள்ளன. ஆயினும், குவைத்தில் இலட்சகணக்கான வெளிநாட்டவர் தொழில் புரிகின்றனர்! அவர்கள் குவைத்தையும் அதன் மக்களையும் அவர்களின் மொழி, கலாச்சாரம், மார்க்கம் ஆகியவற்றையும் புரிந்து கொள்வது அவசியமாகும்! அப்போதுதான் இந்நாட்டிலும் அவர்களும் அமைதியுடனும் எத்தகைய சிக்கல்களுமின்றியும் வாழவது இலகுவாகும்!
திருக்குர்ஆன் கூறுகின்றது:
மக்களே! உங்களை நான் ஒரு ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களை பல கோத்திரஙகளாகவும், இனங்களாகவும் அமைத்தோம்! (அல்குர்ஆன்: 49:13)
இது பல்வேறு கலாச்சாரங்கள் நாகரீகங்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும். மோதல்களைத் தவிர்க்கும். ஒருவரை ஒருவர் மதிக்கும் நிலை ஏற்படுத்தும். மத கலாச்சார சகிப்புத் தன்மையையும் தரும். இன. மத மோதல்கள் அதிகரித்து விட்ட நவீன உலகின் மிக முக்கிய தேவையாகும் இது!
இந்த வகையில் இந்நிலையம் இந்நாட்டு மக்களின் மார்க்கம், கலை, கலாச்சாரம், நாட்டின் சட்ட திட்ட ஒழுங்குகள் என்பவற்றை அறிமுகம் செய்யும் பணியை சிறு கையடக்க நூல்கள், மடக்கோலைகள், நூல்கள், ஒலி-ஒளிப்பதிவு நாடாக்கள் ஆகியவற்றை தயாரித்து வினியோகிப்பதன் ஊடாக மேற்கொள்கிறது. வகுப்புகள், பரஸ்பர சந்திப்புகள் ஆகியவற்றையும் இதற்காக ஏற்பாடு செய்கிறது. அது மட்டுமின்றி இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நிலையம் இயங்குகின்றது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்நாட்டில் வாழ்வதினால் மேற்சொன்ன பணிகளின் ஊடாக ஒரு கலாச்சார பரிமாற்றத்தை உலகளாவிய ரீதியில் இந்த நிலையம் செய்ய முயல்கிறது. எனவே, இந்த நாட்டையும், அதன் மத, கலை, பண்பாட்டு கலாச்சாரங்களையும், நாட்டின் சட்ட திட்டங்களையும், ஒழுங்குகளையும் புரிந்து கொள்ள விரும்புவோர் இந்நிலையத்தோடு தொடர்பு கொண்டு பலனடைந்து கொள்ள முடியும்!
அறிவுகடலில் மூழ்கி சத்திய முத்தை கண்டெடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்!
ஸஆது பின் முஆது (ரலி) அவர்களின் சிறப்பு.
1603. ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உபை இப்னு கஃப் மற்றும் அன்ஸார்கள் சிறப்பு.
1601. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் தாம் அவர்கள்” என்று அனஸ் (ரலி) கூறினார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘அபூ ஸைத் என்பவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள்.
1602. நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, ‘வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..” என்னும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்” என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), ‘என் பெயரைக் குறிப்பிட்டா. (அப்படிச்) சொன்னான்?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.
நன்மையை நாடி பிரயாணம் செய்ய வேண்டிய இடங்கள் யாவை?
கேள்வி எண்: 99. எந்த மூன்று இடங்களைத் தவிர நன்மையை நாடி பிரயாணம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? Continue reading
அப்துல்லாஹ் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு.
1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.
1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை) நன்கறிந்தவன் நான் என பிற நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்” என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத் (ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.
1599. எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
1600. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), ‘அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்” என்று கூறினார்கள்.
உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு.
1596. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, ‘நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்” என்றார்கள்.
ஜைனப் (ரலி) அவர்களின் சிறப்பு.
1595. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்களுள் கை நீளமானவரே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஜைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஜைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்தால் தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.
உம்மு ஸலமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
1594. நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா (ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், ‘இவர் யார்?’ என்று கேட்க, அவர்கள், ‘இது திஹ்யா (என்ற நபித்தோழர்)” என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம்” என்று உம்மு ஸலமா – ரலி – அவர்களுக்கு தெரியாது.) (பின்னர்) உம்மு ஸலமா (ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தாம் என்றே நான் நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்று எனக்குத் தெரிய வந்தது)” என்று கூறினார்கள்.
நான் அறிவிப்பாளர் அபூ உஸ்மான் (ரஹ்) அவர்களிடம், ‘யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள்.