குவைத் ஓர் இஸ்லாமிய நாடு! அதன் கலாச்சாரம், பண்பாடு, மரபுகள் அனைத்தும் இஸ்லாத்தை சார்ந்தே அமைந்துள்ளன. ஆயினும், குவைத்தில் இலட்சகணக்கான வெளிநாட்டவர் தொழில் புரிகின்றனர்! அவர்கள் குவைத்தையும் அதன் மக்களையும் அவர்களின் மொழி, கலாச்சாரம், மார்க்கம் ஆகியவற்றையும் புரிந்து கொள்வது அவசியமாகும்! அப்போதுதான் இந்நாட்டிலும் அவர்களும் அமைதியுடனும் எத்தகைய சிக்கல்களுமின்றியும் வாழவது இலகுவாகும்!
திருக்குர்ஆன் கூறுகின்றது:
மக்களே! உங்களை நான் ஒரு ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களை பல கோத்திரஙகளாகவும், இனங்களாகவும் அமைத்தோம்! (அல்குர்ஆன்: 49:13)
இது பல்வேறு கலாச்சாரங்கள் நாகரீகங்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும். மோதல்களைத் தவிர்க்கும். ஒருவரை ஒருவர் மதிக்கும் நிலை ஏற்படுத்தும். மத கலாச்சார சகிப்புத் தன்மையையும் தரும். இன. மத மோதல்கள் அதிகரித்து விட்ட நவீன உலகின் மிக முக்கிய தேவையாகும் இது!
இந்த வகையில் இந்நிலையம் இந்நாட்டு மக்களின் மார்க்கம், கலை, கலாச்சாரம், நாட்டின் சட்ட திட்ட ஒழுங்குகள் என்பவற்றை அறிமுகம் செய்யும் பணியை சிறு கையடக்க நூல்கள், மடக்கோலைகள், நூல்கள், ஒலி-ஒளிப்பதிவு நாடாக்கள் ஆகியவற்றை தயாரித்து வினியோகிப்பதன் ஊடாக மேற்கொள்கிறது. வகுப்புகள், பரஸ்பர சந்திப்புகள் ஆகியவற்றையும் இதற்காக ஏற்பாடு செய்கிறது. அது மட்டுமின்றி இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நிலையம் இயங்குகின்றது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்நாட்டில் வாழ்வதினால் மேற்சொன்ன பணிகளின் ஊடாக ஒரு கலாச்சார பரிமாற்றத்தை உலகளாவிய ரீதியில் இந்த நிலையம் செய்ய முயல்கிறது. எனவே, இந்த நாட்டையும், அதன் மத, கலை, பண்பாட்டு கலாச்சாரங்களையும், நாட்டின் சட்ட திட்டங்களையும், ஒழுங்குகளையும் புரிந்து கொள்ள விரும்புவோர் இந்நிலையத்தோடு தொடர்பு கொண்டு பலனடைந்து கொள்ள முடியும்!
அறிவுகடலில் மூழ்கி சத்திய முத்தை கண்டெடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்!