தொழும் திசை குறித்த இறை கட்டளைகள்.

2:142. மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை (தொழும் திசையை) விட்டுத் திருப்பி விட்டது எது?” (நபியே!) நீர் கூறும்: “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று.



2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியதும்) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின் திரும்பிச் செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.

2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பாராமுகமாக இல்லை.

2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டு வந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவை பின்பற்ற மாட்டார்கள்; நீரும் அவர்கள் கிப்லாவை பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்கு கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.

2:146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.

2:148. ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கமே திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கின்றான்.

2:149. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்வீராக; நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை – அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பாராமுகமாக இல்லை.

2:150. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனித பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்துகளை (அருள் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).

2:151. இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்தே ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.

2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

அல் குர்ஆன்:- அல் பகரா (பசு மாடு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தொழும் திசை குறித்த இறை கட்டளைகள்.

கேள்வி கணக்கு கேட்பவன்.

13:38. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தி இருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை; ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.

13:39. (எனினும்) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் – அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.

13:40. (நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ்நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும் படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப்பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்) உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.

13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

13:42. (நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன; ஒவ்வொரு ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.

13:43. (நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேத ஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்” என்று கூறி விடுவீராக!

அல் குர்ஆன்:- அர் ரஃது (இடியோசை)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on கேள்வி கணக்கு கேட்பவன்.

முன் பின் இரகசியங்களை அறிந்தவன்.

2:255. அல்லாஹ் – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன் மகிமை மிக்கவன்.

அல் குர்ஆன்: அல் பகரா (பசு மாடு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on முன் பின் இரகசியங்களை அறிந்தவன்.

இஸ்லாத்தில் மறைத்தல், திறத்தல் சட்டங்களின் விளக்கம்.

பிஸ்மில்லாஹ்
அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களின் (மகளிர் முகம் மேனி) மறைத்தல் திறத்தல் பற்றிய சட்டங்கள் என்ற நூலில் இருந்து:- நம்பிக்கை கொண்டவர்களுக்காக!

அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ் அவர்களில் நின்றும், முஸ்லிம்களில் இதனைக் கண்ணுறுவோர்பால் அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பாக்கியமும் உண்டாவதாக! அல்லாஹ் என்னையும் அவர்களையும் துக்கமும், அவமானமுண்டாக்கும் காரணங்களிலிருந்து காப்பாற்றுவானாக! ஆமின்.

முஸ்லிம்களே! ‘பெண்கள் அன்னிய ஆடவருக்கு அழகையும், அலங்காரத்தையும் வெளிப்படுத்துவது ஹறாம்’ என்ற அல்லாஹ்வின் கட்டளையை அலட்சியஞ் செய்துவிட்டுப் பெரும்பாலான பெண்கள் ஆண்களிலிருந்து மறைந்து கொள்ளாமலும், வதன எழிலை வெளிப்படுத்தியும் கூச்சமின்றி நடமாடித் திரியும் கேவலநிலை அநேக ஊர்களில் பரவி வருவது உங்கள் பார்வையிலிருந்து மறைந்த விஷயமல்ல.

இவை மிகமோசமான வெறுப்பூட்டும் நிகழ்ச்சி என்பதிலும், அப்பட்டமான குற்ற செயல் என்பதிலும் சிறிதும் சந்தேகமில்லை. வெளியில் நடமாடுவதும், அழகை வெளிப்படுத்துவதுமான இத்தீய செயல், குற்றங்களைத் தோற்றுவித்து, நாணத்தைப் போக்கிப் பிரச்சனைகள் பரவ ஏதுவாயிருப்பதோடு இறை தண்டனையும் சாபக்கேடும் இறங்குவதற்குப் பெருங்காரணமாயமைந்திருக்கிறது.

எனவே முஸ்லிம்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்களிடையேயுள்ள அறிவீனரின் கரங்களைப் பற்றிப் பாவங்களில் தோய்த்து விடாது, தடுத்து நிறுத்துங்கள். உங்கள் பெண்களை அல்லாஹ் விரோதித்தவைகளிலிருந்து தடுத்து வையுங்கள். பர்தாவும், திரையும் போட்டுக் கொள்ளுமாறு அன்னாரை வலியுறுத்துங்கள். பரிசுத்த இறைவனின் கோபத்திற்கும், தண்டனைக்கும் அஞ்சுங்கள். ‘நிச்சயமாக மனிதர்கள் வெறுப்புக்குறியவற்றைக் கண்ணுற்றும் அதனை அவர்கள் வெறுத்துத் தடுக்க வில்லையானால், அல்லாஹ் அவனது தண்டனையைக் கொண்டு அவர்களை அழித்து விடுவான்’ என நபி (ஸல்) நவின்றார்கள்.

அல்லாஹ் அவனது சங்கை வாய்ந்த வேத நூலிலே “இஸ்ராயிலின் சந்ததிகளில் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் (நபி) தாவூது (அலை), (நபி) ஈஸா இப்னு மர்யம் (அலை) அவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டேயிருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தும், பாவம் செய்தும் வந்தனர். (அன்றி) அவர்கள் செய்து வந்த எந்த விலக்கப்பட்ட காரியத்தையும் ஒருவருக்கொருவர் தடை செய்யவுமில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் நிச்சயமாக மிகத் தீயவை” (5:78-79) என்று கூறியுள்ளான்.

முஸ்னத்திலும் மற்றும் வேறு கிரந்தங்களிலும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் வாயிலாக கூறப்பட்டுள்ளதாவது: நபி (ஸல்) இந்த ஆயத்தை ஓதிக் காட்டி விட்டு சொன்னார்கள்: “எனது ஆன்மா யார் வசமிருக்கிறதோ, அவன் மீது ஆணையாக, நன்மையான காரியங்களை நீங்கள் மற்றவர்களுக்கு ஏவ வேண்டும், தீயனவற்றைத் தடுக்க வேண்டும். குறைமதியாளர் கரங்களைப் பிடித்து நேர்வழியின் பால் அவர்களைத் திருப்பி விட வேண்டும். சத்திய வழியைச் சிறப்பாக கடைப்பிடித் தொழுக வேண்டும். இல்லையேல் உங்களில் சிலரின் உள்ளங்களைக் கொண்டு சிலருக்கு அடி கொடுக்க வேண்டிய நிலை வரும். பின்னர் (இஸ்ராயிலின் சந்ததிகளான) அவர்களைச் சபித்தது போன்று அல்லாஹ் உங்களையும் சபிப்பான்”. மற்றொரு ஹதீஸில், “உங்களில் எவராவது வெறுப்பூட்டும் செயலைக் கண்ணுற்றால், தனது கரத்தினால் அதனைத் தடுத்து விடட்டும். அங்ஙனம் செய்ய இயலாது போனால் நாவினால் தடுக்கட்டும். இல்லாவிட்டால் உள்ளத்தால் அதனை வெறுத்து விட வேண்டும். இதுவே மிகப் பலவீனமான ஈமான்” என்று நபி (ஸல்) விளக்கிக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் ஸூப்ஹானஹூவதஆலா சங்கை வாய்ந்த அவனது வேத நூலில் பெண்கள் திரையிட்டுக் கொள்ள வேண்டுமென்றும், இல்லங்களில் தரித்திருக்க வேண்டுமென்றும், வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், விரும்பத்தகாதன நிகழாது காத்துக் கொள்ளவும், பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் காரணங்களைத் தவிர்க்கவும், ஆடவரின் சொல்லுக்குப் பணிந்து நடக்க வேண்டுமென்றும் ஆக்ஞாபித்துள்ளான். அல்லாஹ் கூறுவதாவது:- நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்றச் சாதாரண பெண்களைப் போன்றவர்களல்லர். நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசுஞ் சமயத்தில்) நலினமாகப் பேசாதீர்கள். மோக நோய் பீடித்த இதயமுள்ளவன் தவறான விருப்பம் கொள்ளக் கூடும். எனவே நீங்கள் (எதைப் பேசிய போதிலும்) நேர்மையாகப் பேசி விடுங்கள்”. (33:32)

“(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் இல்லங்களில் தரித்திருங்கள். மௌட்டீகக் கால மாதர் (தங்களை அலங்கரித்துக் கொண்டு) வெளியில் நடமாடியது போல் நீங்களும் வெளியில் நடமாடாதீர்கள். தொழுகையை (க்கிரமமாக செவ்வனே) நிறைவேற்றுங்கள். ஏழைவரியை ஈயுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் வழிபட்டொழுகுங்கள்.” (33:33)

பரிசுத்த இறைவன் இவ்வேத வாக்கியங்கள் மூலம் விசுவாசிகளின் அன்னையர்களான, சங்கைக்குறிய நபியின் மனைவியருக்கு விலக்கல் கட்டளை பிறப்பித்துள்ளான். அவர்களோ மாதர் குலத்தில் மகா சிரேட்டமானவர்கள். ஆண்களின் பசப்பு வார்த்தைகளுக்குப் பணிந்து விடாத பரிசுத்த பத்தினிகள். மோக நோய் பிடித்த இதயத்தவர் இச்சை கொள்ளா வண்ணம் நேர்மையாகவும், தீர்க்கமாகவும் உரையாடுபவர்கள். அவர்களையே, வீடே இராச்சியமெனப் பற்றி வாழுமாறு கட்டளை பிறப்பித்துள்ளான். மௌட்டீகக் கால நடமாட்டத்தைத் தடை செய்துள்ளான். அதாவது:- முகம், கழுத்து, மார்பு, முன்கை,கெண்டைக்கால் ஆதியாம் கவர்ச்சியான உருப்புகளின் அழகையும், எழிலையும் வெளிப்படுத்துவதால் சச்சரவுகளும், மகாமோசமான பிரச்சனைகளும், விபச்சார உணர்ச்சியைத் தூண்டும் வண்ணம் ஆடவர் அகங்களை ஆகர்ஷித்தலும் விளையுமென்பதினாலேயே இங்ஙனம் தடை செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ் ஸூப்ஹானஹூவதஆலா விசுவாசிகளின் அன்னையருக்கு – அவர்களுமோ சீர்திருந்தியவர்களாக, சுத்த விசுவாசிகளாக, பரிசுத்த கற்புக்கரசிகளாக இருக்கும் போதே, இத்தகைய வெறுக்கத்தக்க காரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இறைவன் கட்டளையிடுவதனால், மற்றச் சாதாரண பெண்மணிகள் தவிர்த்துக் கொள்வதும் வெறுப்பதும் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் காரணங்களுக்கு அஞ்சுவதும் அவசியத்திலும் அவசியம் என்பதைக் கூறவும் வேண்டுமா?

மானஈனப் பிரச்சனைகளிலிருந்து எங்களையும் உங்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!

இந்த வேதவாக்கிலே கூறப்படும், “தொழுகையை நிலைநாட்டுங்கள், ஏழைவரியை ஈயுங்கள், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடவுங்கள்” என்ற சட்டம் நபியின் மனைவியருக்கு மட்டுமன்றி மற்றும் ஏனைய பெண்டியருக்கும் பொதுவான விதி என்பது அறியப்படுகிறது.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:- “(நபியின் மனைவிகளாகிய) அவர்களிடம் ஏதாவது பொருளைக் கேட்க விரும்பினால் திரைக்குப் பின்னாலிருந்து அவர்களிடம் கேளுங்கள், இங்ஙனம் செய்வது அவர்கள் உள்ளங்களையும், உங்கள் உள்ளங்களையும் தூய்மையாக்கும்.” இச்சங்கைக்குறிய வேதவாக்கானது, ஆண்களை விட்டு பெண்கள் மறைந்து கொள்வதும், திரையிட்டுக் கொள்வதும் அவசியம் என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளது. அன்றியும் இவ்வாயத்தில் பெண்கள் பர்தா அணிவது ஆண் பெண் இருபாலாரதும் இதயங்களைத் தூய்மைப்படுத்தும் என்றும், விரும்பத்தகாத தீயக்காரியங்களையும், அவற்றின் காரணங்களையும் அகற்றி விடுமென்றும் இறைவன் விளக்கிக் காட்டியுள்ளான். அன்றியும் வதன எழிலை வெளிக்காட்டுவதும் திரைமறைவின்றி இருத்தலும், அருவருப்பானதும் அசிங்கமானதும் என்றும், நிச்சயமாகத் திரைமறைவு சாந்தியும், தூய்மையுந்தரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளான்.

முஸ்லிம் பெருங்குடி மக்களே! அல்லாஹ் போதிக்கும் ஒழுக்க சீலங்களை ஒழுங்காகக் கடைபிடித்தொழுகி வாருங்கள். அல்லாஹ்வின் ஆக்ஞைபடி ஒழுகி உதாரணப் புருஷர்களாக விளங்குங்கள்; சாந்திக்கும், விமோசனத்திற்கும், கற்புடமைக்கும் காரணமாக விளங்கும் (பர்தா) திறையிடுதலை ஒழுங்காகக் கடைபிடிக்குமாறு உங்கள் பெண்மணிகளை வலியுறுத்துங்கள்.

சிறப்பும் மேன்மையும் தாங்கிய அல்லாஹ் கூறியுள்ளான்:- “நபியே! உம்முடைய மனைவிகளுக்கும், உம்முடைய பெண்மக்களுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை(த் தங்கள் முகங்களிலிருந்து) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது மிக சுலபமா(ன வழியா)கும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபை செய்வோனுமாக இருக்கின்றான்.” (33:59). முந்தானை (ஜில்பாப்) என்பது, ஒரு பெண் தனது அழகையும், அலங்காரத்தையும் மறைத்துக் கொள்வதற்காகத் தலைமீது போட்டுக் கொள்ளும் துணி. விசுவாசிகளின் பெண்கள் அனைவரும், அன்னார் கற்பை காத்துக் கொள்ளும் வண்ணம்கேசம், வதனம், மற்றும் கவர்ச்சியான பாகங்களின் எழிலை மறப்பான் வேண்டி அவர்கள் முந்தானையை முகத்தில் தொங்கவிட்டுக் கொள்ளும் படி அல்லாஹ் ஏவியுள்ளான். இவ்வாறு அவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளின், அவர்கள் பரிசுத்தமானவர்கள் என் அறியப்படுவார்கள். அம்மாதரின் தூய்மையும் பாதுகாக்கப்படும்.இதனை அனுசரிக்காவிட்டால், அவர்கள் சொல்லொணாத் துன்பத்துக்காளாவார்.

ஆசிரியர்.

அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ்

உப வேந்தர்,

அல்ஜாமியத்துல் இஸ்லாமியா,

அல்-மதீனத்துல் முனவ்வறா.

இன்னும் வரும்.

Posted in ஹிஜாப் சட்டங்கள் | Comments Off on இஸ்லாத்தில் மறைத்தல், திறத்தல் சட்டங்களின் விளக்கம்.

அல்லாஹ்வே கூறும் அவனுடைய தன்மைகள்!

அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255)

அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடியவையே! (28:88)

எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்! (6:103)

அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42: 11)

அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (5:17)

ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; முழு பிரபஞ்சமும் அவனுடைய படைப்பே! (6:101)

அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. (112:3)

பிரபஞ்சம் முழுவதின் ஆட்சியதிகாரம் நேரடியாக அவனிடத்தே இருக்கிறது. (36:83)

வானம், பூமி மற்றும் பிரபஞ்சம் முழுவதையும் அவனே நிர்வகிக்கின்றான். (32:5)

அனைத்துக்கும் உணவளிப்பவன். (37:5)

வாழ்வையும், மரணத்தையும் படைத்தவன் (67:2)

அவனே வாழ்வையும் வழங்குகிறான்; மரணத்தையும் அளிக்கின்றான். (53:44)

அனைத்துக்கும் அமைதியும், புகலிடமும் அளிப்பவன். (59:23)

மறைந்திருப்பவை, நிகழ்ந்தவை, நிகழக் கூடியவை அனைத்தையும் அறிந்தவன். (2:29,59:22)

அனைத்தையும் செவிமடுப்பவன். (6:13)

அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். (2:20)

அனைத்தையும் மிகைத்தவன்; அவனது தீர்ப்பை யாரும் எதிர்த்திட முடியாது. (59:23)

அவன் நுண்ணறிவாளன்; அவனது எந்த படைப்பும் வீணானவை, இலக்கற்றவை அல்ல! (34:1)

அளவிலாக் கருணையுடையவன்; இணையிலாக் கிருபை உடையவன். (1:2)

மிகவும் அன்புடையவன். (2:207)

அவனுடைய கருணையும், கிருபையும் ஒவ்வொரு அணுவையும் சூழ்ந்திருக்கின்றது. (7:156)

நீதி செலுத்துபவன்; மக்களிடம் முழு நீதியுடன் நடந்து கொள்பவன். (10:4)

யார் மீதும் அணுவளவும் கொடுமை புரியாதவன். (50:29)

அவனுடைய கட்டளைகள் அனைத்தும் நீதியின் அடிப்படையிலானவை. (6:115)

அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவரைப் பழிவாங்குபவன். (3:4)

மன்னிப்புக் கோருபவருக்கு மன்னிப்பு அளிப்பவன். (85:14)

பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்பவன். (110:3)

நன்மைகளைப் பெரிதும் மதிப்பவன். (64:17)

தான் நாடியதைச் செய்யக் கூடியவன். (55:16)

பேசுகிறவன். (2:253)

தான் விரும்பும் வகையில் செயல்படுபவன். (3:40)

அவன் நாடுவது உண்டாகும்; அவன் நாட்டமின்றி எதுவும் தாமாகவே நடப்பதில்லை. (76:30)

தன்னிறைவுடையவன்; யாருடைய தேவையுமற்றவன்;

அவனுக்கு தேவையானது எதுவுமில்லை. (35:15)

தனக்குத்தானே பெருமைக்குறியவன்; மிகவும் சிறப்புடையவன்; கண்ணியமானவன். (11:73)

எந்த ஒரு குறையையும் விட்டுத் தூய்மையானவன். எல்லா சிறப்பு அம்சங்களும் கொண்டவன். அந்த உன்னத அந்தஸ்தை விட்டுத் தாழ்மையான அல்லது அதற்கு முரணான எந்தத் தன்மையும் அவனிடம் இல்லை. (59:23)

ஒவ்வொரு தகுதியிலும் இணையற்றவன். அவனுடன் எதையும் ஒப்பிட முடியாது. (42:11)

வானம், பூமியில் நிகழும் எதுவொன்றையும் வைத்து அவனது எதார்த்த நிலையை யூகிக்க முடியாது. (30:26)

வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே! (2:163)

பிரபஞ்சம் முழுவதும் அவனுடைய மகிமையே படிந்திருக்கிறது. (45:37)

அவனைத் தவிர வேறு எவரிடமும் இம்மியளவும் மேன்மையோ வணங்கப்படுவதற்குரிய தன்மையோ இல்லை. அவன் எதிரில் எல்லோரும் இயலாதர்கள்; மேலும் அவனது கட்டளைக்கு கட்டுப் பட்டவர்கள்; அவனது அடிமைகள்!

அவனுடைய ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. (18:26)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வே கூறும் அவனுடைய தன்மைகள்!

யார் நஷ்டவாளிகள்?

21:51. இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாகக் கொடுத்தோம் – அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.

21:52. அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் “நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது:

21:53. அவர்கள், “எங்கள் மூதாதையர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.

21:54. (அதற்கு) அவர், “நீங்களும், உங்களுடைய மூதாதையரும் – பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்” என்று கூறினார்.

21:55. (அதற்கு) அவர்கள், “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.

21:56. “அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சி கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

21:57. “இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் கூறினார்).

21:58. அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன் பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).

21:59. “எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்” என்று கூறினார்கள்.

21:60. அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.

21:61. “அப்படியானால் அவரை மக்கள் கண்முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு” என்று கூறினார்கள்.

21:62. “இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.

21:63. அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.

21:64. (இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) “நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள்.

21:65. பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).

21:66. “(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்குத் தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.

21:67. “சீச்சீ! உங்களுக்கும் நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).

21;68. (இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எரியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகி விடு!” என்று நாம் கூறினோம்.

21:70. மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்.

அல் குர்ஆன்: அல் அன்பியா.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on யார் நஷ்டவாளிகள்?

செல்வமும், பிள்ளைகளும்?

18:45. இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்துஇறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன: ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்க கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.

18:47. (நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்டவெளியாக காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.

18:48. அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணி கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்)

18:49. இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டு வைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்ய மாட்டான்.

அல் குர்ஆன்: அல் கஹ்ஃபு (குகை)

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on செல்வமும், பிள்ளைகளும்?

வெறும் வார்த்தைகள்.

33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், (நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும்) முனாஃபிக்களுக்கும் (நயவஞ்சகர்களுக்கும்) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.

33:2. இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

33:3. (நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.

33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை – உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் ளிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவிகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

33:6. இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய(பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இதுதான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.

33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹூ, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.

33:8. எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையைப் பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.

அல் குர்ஆன்: அல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வெறும் வார்த்தைகள்.

அல்லாஹ்வின் மீது பொய் கற்பனை செய்பவன்.

6:91. இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா (மோஸே) கொண்டு வந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கி வைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான(தர்க்கத்)தில் விளையாடிக் கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.

6:92. இந்த வேதத்தை (குர்ஆனை) அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்கு முன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனை சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்) எவர்கள் மறுமையை (இறுதி தீர்ப்பு நாளை) நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.

6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களைவிடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் (வானவர்கள்) தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ” உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்).

6:94. அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி) “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறி விட்டன” (என்று கூறுவான்).

அல் குர்ஆன்: அல் அன்ஆம் (கால்நடைகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் மீது பொய் கற்பனை செய்பவன்.

நமக்கு உதவியாளன் யார்?

(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள்; (ஆகவே, அவர்களை நோக்கி) ” நிச்சயமாக அல்லாஹ்வின் வழி – (இஸ்லாம்) அதுவே நேர்வழி’ என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (2:120)

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இருமடங்கு (வேதனையும்,) மரணத்தில் இருமடங்கு வேதனையு)ம், நுகருமாறு நாம் செய்திருப்போம், பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர். (17:75)

நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன். (8:40)

நிச்சயமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படி செய்கிறான். அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை; உதவியாளரும் இல்லை. (9:116)

(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். (33:3)

அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை கிருபையை நாடினால் (அதை உங்களுக்கு தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காண மாட்டார்கள்.” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (33:17)

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on நமக்கு உதவியாளன் யார்?