பெரிய ஷிர்க்கும் அதன் வகைகளும்

பெரிய ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு நிகர் உண்டாக்குதல். உதாரணத்துக்கு அல்லாஹ்வை அழைப்பது போன்று அதனை அழைப்பதாகும். அல்லது இரட்சிக்கத்தேடுதல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்களில் ஏதாவது ஒன்றை அதற்கு ஏற்படுத்துவதாகும்.

‘இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘பாவங்களில் மிக மகத்தானது எது?’ என்று கேட்டார்கள். உன்னை அல்லாஹ் படைத்திருக்கும்போது, ஏதேனுமொன்றை அவனுக்கு நிகராக்குவதாகும்’ என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

துஆவில் ஷிர்க் ஏற்படுத்தல்:- பிரார்த்தனையில் ஷிர்க் வைத்தல் என்றால், உணவு கேட்பதற்கு, அல்லது நோயைக் குணப்படுத்தக் கோருவதற்கு அல்லாஹ் அல்லாத நபிமார்கள் அவுலியாக்கள் போன்றவர்களிடம் கேட்பதாகும். பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“உமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை (உதவி வேண்டி) நீர் அழைக்காதீர். அவ்வாறு செய்தால் அச்சமயமே அக்கிரமக்காரர் (இணைவைப்பவர்)களில் நீரும் ஒருவராகி விடுவீர்” (10:106)

‘எவனொருவன் அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு நிகராக ஏற்படுத்தியவனாக இருக்கும் நிலையில் மரணிக்கின்றானோ, அவன் நரகம் பிரவேசிப்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.

இறந்தவர்களிடமோ, (உயிருள்ளவர்களில்) மறைவாக இருப்பவர்களிடமோ துஆக் கேட்பது ஷிர்க்காகும். பின்வரும் அல்குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரமாய் அமைகின்றது.

“அவனை (அல்லாஹ்வை)யன்றி எவற்றை நீங்கள் (ஆண்டவனென) அழைக்கின்றீர்களோ அவற்றுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை. அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்களுடைய அழைப்பை அவை செவியுறா; அவை செவியுற்ற போதிலும் உங்களுக்குப் பதிலளிக்கா; மறுமை நாளிலோ (இம்மையில் அவற்றை) நீங்கள் இணை வைத்ததையும் அவை நிராகரித்து விடும். யாவையும் அறிந்த (இறை)வனைப் போல் (அத்தெய்வங்கள்) எதனையுமே உங்களுக்கு அறிவிக்கா” (35:13,14)

அல்லாஹ்வுடைய ஸிபத்துகளில் இணைவைத்தல்:- இதில், நபிமார்கள், அவுலியாக்கள் முதலானோர் மறைவானவற்றை அறிவார்கள் என்று நம்பிக்கை கொள்வதாகும். “மறைவானவற்றின் சாவிகள் அவனிட (அல்லாஹ்விட)ந்தான் இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியார்” (6:39)

நேசங்கொள்வதில் ‘ஷிர்க்’ வைத்தல்:- இது அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவுலியாக்களில் ஒருவரையோ, பலரையோ நேசிப்பதாகும். இதுபற்றிக் குர்ஆன் கூறுவதாவது.

“அல்லாஹ் அல்லாதவற்றை, அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்போர் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும் மூமின்களோ, அல்லாஹ்வையே அதிகமாக நேசிப்பார்கள்” (2:165)

வழிபடுவதில் ‘ஷிர்க்’ வைத்தல்:- அனுமதி உண்டு என்ற நம்பிக்கையுடன் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் உலமாக்களுக்கும், மஷாயிகு (தலைவர்)களுக்கும் வழிபடுதல். குர்ஆன் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.

“இவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர்” (9:31)

அல்லாஹ் ஹறாமாக்கியதை ஹலாலாக்குதல், அவன் ஹலாலாக்கியதை ஹறாமாக்குதல் ஆகியவற்றைக் கொண்டு மாறுசெய்வதில் மேலேயுள்ள வசனத்தில் கூறப்பட்டவர்களுக்கு வழிபடுவதையே ‘இபாதத்’ (வணக்கம்) என்று மேற்காட்டிய வசனம் கூறுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

‘அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் அடியானுக்கு வழிபடக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

ஷிர்க்குல் ‘ஹுலூல்’ (இரண்டறக் கலப்பின் மூலம் இணை வைத்தல்):- இது, நிச்சயமாக அல்லாஹ் தனது படைப்புகளில் குடிகொண்டுள்ளான் என்று நம்பிக்கை கொள்வதாகும். (ஸிரியாவின் தலைநகர்) டமஸ்கஸில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இப்னு அரபியுடைய கொள்கையாக இது இருக்கின்றது. ‘அடியான் தான் இறைவன்; இறைவந்தான் அடியான்’ என்று அவர் கூறியுள்ளார்.

‘ஹுலூல்’ என்ற கொள்கைக் கொண்ட சூபிக் கவிஞன் ஒருவன் பின்வருமாறு பாடுகிறான்.

நாயும் பன்றியும் எங்களது இறைவனாகவே இருக்கின்றன. கிறிஸ்தவக் கோயிலிலுள்ள குருவும் அல்லாஹ்வாகவே இருக்கின்றனர்.

ஷிர்க்குத் தஸர்ருப்:- (தஸர்ருப் என்றால் அல்லாஹ்வுடைய பண்புகளை அவனுடைய சில அடியார்களுக்கு மாற்றுதல்)

அல்லாஹ்வுடைய சில கருமங்களை நிர்வாகம் செய்யக்கூடிய அதிகாரம் அவுலியாக்களுக்கு இருப்பதாக நம்பிக்கை கொள்வதாக இது இருக்கின்றது உதாரணத்துக்கு அப்துக் காதிர் ஜீலானிய்யி (ரஹ்) அவர்கள் சொல்வதாக முஹ்யித்தீன் மௌலிதின் ஏழாவது ஹிகாயத்தில் பின்வருமாறு வந்துள்ளது. (மொழிபெயர்ப்பாளர்)

ஷைக் (அப்துல் காதிர் ஜீலானிய்யி) அவர்கள் ஒரு சபையிலுள்ளோரை நோக்கி ‘சூரியன் ஒவ்வொரு நாளும் என்னிடம் வந்து எனக்கு ஸலாம் சொல்லி, அன்றைய நாளில் உலகில் நடைபெறப் போவது என்ன என்பதை அறிவிக்காமல் உதிக்கமாட்டாது’ என்று கூறினார்.

அவுலியாக்கள் மீது வரம்பு மீறிய நம்பிக்கை கொள்வோர், அவர்களைக் ‘குதுபு’ (தலைவர்)கள் என்று கூறுவார்கள். பண்டயக்கால முஷ்ரிக்குகளிடத்தில் கேட்கப்பட்ட கேள்வியைப்பற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“(உலகின்) சகல காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அதற்கு அவர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள்” (10:31)

(அவுலிய்யா பக்திகொண்ட இக்கால மக்கள் முற்கால முஷ்ரிக்குகளை விட மட்டரகமான நம்பிக்கையுடன் இருக்கின்றனர்)

பயப்படுவதில் ஷிர்க் வைத்தல்:- இந்த நம்பிக்கை, மரணித்த அவுலியாக்களில் சிலருக்கு அல்லது (தூரமான இடத்தில் உயிருடனுள்ள) மறைவிலுள்ள சிலருக்கு, சில ஆற்றல்கள் உண்டு என்றும், அவர்கள் தண்டனை வழங்குவார்கள் என்றும் நம்பி பயப்படுவதாகும். இது முற்கால முஷ்ரிக்குகளின் நம்பிக்கையாகும். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

“தன் அடியானுக்கு (வேண்டிய உதவிகளைச் செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனல்லவா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவைகளைப் பற்றி (ப் பலவற்றைக் கூறி) உம்மைப் பயமுறுத்துகின்றனர். (அதை நீர் பொருட்படுத்த வேண்டாம்)” (39:36)

கொடிய விலங்கினங்களுக்கும், விஷஜந்துக்களுக்கும், உயிருடனிருக்கும் கொடுமைக்கார மனிதனுக்கும், இதுபோன்ற வேறு ஏதாவது ஒன்றுக்கும் பயப்படுவது ஷிர்க்காக மாட்டாது.

ஆட்சியில் ஷிர்க் வைத்தல்:- இதுதான் இஸ்லாத்திற்கு எதிரான சட்டங்களை வெளியாக்கி, அவற்றை ஆகுமாக்குதல் என்பதாகும். அல்லது இஸ்லாத்தின் சட்டத்தைப் பொருத்தமற்றது என்று(ம் காலத்துக்கு ஒவ்வாதது என்றும்) கருதுவதாகும்.

ஷிர்க்குல் ‘அக்பர்’ (பெரிய இணைவைத்தல்):- இது நன்மைகளை அழித்து விடக் கூடியது. அல்லாஹ் இதுபற்றி பின்வருமாறு கூறுகின்றான்.

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதல்லாத (குற்றத்)தைத் தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே எவ்ரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் அவன் வெகு தூரமான வழிகேட்டில் தான் இருக்கின்றான்” (4:116)

ஷிர்க்கில் பல வகைகள் உண்டு. பெரிய ஷிர்க்கு, சிரிய ஷிர்க்கு ஆகியன அவற்றில் உள்ளதாகும். அவற்றைத் தவிர்ப்பது நம்மில் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். நாம் எப்பொழுதும் மொழிந்துவரப் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

‘அல்லாஹ்வே! நாங்கள் அறிந்தவர்களாக உனக்கு எதனையும் இணையாக்குவதிலிருந்து உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறோம். நாங்கள் அறியாதவற்றுக்கும் உன்னிடம் பிழைபொறுக்கத் தேடுகிறோம். ஆதாரம்: அஹ்மத் (ஹஸன்)

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on பெரிய ஷிர்க்கும் அதன் வகைகளும்

நிரந்தர நரகம் விதிக்கப்பட்டவர்களைத் தவிர…

118- அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் (அதிபயங்கரமான)இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாராவது) நாம் கேட்டுக் கொண்டால் நன்றாயிருக்குமே! என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான)ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன் (தன்னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும் தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட ,அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தனர். ஆகவே (இந்த துன்ப நிலையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி) எங்களுக்காக நம் இறைவனிடத்தில் பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை, என்று கூறியவாறு (உலகில்) தாம் புரிந்த தவற்றை அவர்கள் நினைவு கூறுவார்கள் உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை என்று கூறி (உலகில்) தாம் புரிந்த தவற்றை நினைவு கூர்ந்து அல்லாஹ் தன்னுடைய உற்ற நன்பராக்கிக் கொண்ட (நபி) இப்ராஹீமிடம் நீங்கள் சொல்லுங்கள் என்றுகூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை நினைவு கூறுவார்கள். பிறகு அல்லாஹ் உரையாடிய (நபி) மூசாவிடம் செல்லுங்கள் என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை அவர்கள் நினைவு கூர்ந்தபடி (நபி) ஈசாவிடம் செல்லுங்கள் என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்வார்கள். அப்போது அவர்கள் (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை. நீங்கள் இறுதி நபியான முஹம்மத் (ஸல்)அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், அவர் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர் என்று கூறுவார்கள்.

உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடத்தில் அனுமதி கேட்பேன். அவனை நான் கண்டதும் சிரம்பணிந்தவனாக சஜ்தாவில் விழுந்து விடுவேன். அவன் நாடிய நேரம் வரை (நான் விரும்பியதைக் கோர) என்னை விட்டு விடுவான். பிறகு (இறைவன் தரப்பிலிருந்து) உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் சொல்லுங்கள். செவியேற்கப்படும் பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று என்னிடம் கூறப்படும். உடன் நான் என் தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத் தந்த புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்கு பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் சென்று சிரம் பணிந்தவனாக சஜ்தாவில் விழுவேன். அதைப் போன்றே மூன்றாம்முறை அல்லது நான்காம்முறை செய்வேன். இறுதியாகக் குர்ஆன் தடுத்துவிட்டவர்(களான நிரந்தர நரகம் விதிக்கப்பட்ட இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்க மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-6565: அனஸ்(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நிரந்தர நரகம் விதிக்கப்பட்டவர்களைத் தவிர…

மழை பற்றிய விஞ்ஞான உண்மை!

அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியப்படி, வானத்தில் பரத்தி, பல துண்டுகளாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள். (அல்குர்ஆன்: 30:48)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மழை பற்றிய விஞ்ஞான உண்மை!

குறைந்த அந்தஸ்து உடைய சொர்க்கவாசி

117- நபி (ஸல்) அவர்கள் (சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின் வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் அது நிரம்பியதைப் போன்று அவருக்குத் தோன்றும் உடனே அவர் திரும்பி வந்து என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன், என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள் என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்கும் தோன்றும். ஆகவே அவர் திரும்பி வந்து என் இறைவா! அது நிரம்பி இருக்கக் கண்டேன் என்று கூறுவார். அதற்கு அவன் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள் ஏனெனில் உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு அல்லது உலகத்தைப் போன்று பத்து மடங்கு (இடம் சொர்க்கத்தில்)உனக்கு உண்டு, என்று சொல்வான். அதற்கு அவர் அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா? அல்லது என்னை நகைக்கின்றாயா? என்று கேட்பார். இதைக் கூறிய போது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன். அறிவிப்பாளர் ஒருவர் கூறுகிறார்: இவரே சொர்க்கவாசிகளில் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார் என்று கூறப்பட்டுள்ளது.

புகாரி-6571: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குறைந்த அந்தஸ்து உடைய சொர்க்கவாசி

நிராகரிப்பு என்பது நன்றி மறத்தலே!

….ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரனத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராக இருந்து விடுகின்றனர். (அல்குர்ஆன்: 30:51)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நிராகரிப்பு என்பது நன்றி மறத்தலே!

சந்திரன் சூரியனுடன் இணைந்து விடுமா?

கேள்வி எண்: 8. சந்திரன் மற்றும் பூமியின் ஆயுட்காலம் பற்றி ஆராய்ச்சி நடத்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், ஒரு காலகட்டத்தில் சந்திரன், சூரியனுடன் ஒன்றிணைந்து விடும் என்ற வியக்கத்தகு உண்மையை கண்டறிந்துள்ளார்கள். இது பற்றிக் குர்ஆன் கூறும் கருத்து என்ன?

பதில்: கேள்விக்கான விடைகாணும் முன் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்றைய அறிவியலாளர்கள் கூறுபவற்றைச் சற்று பார்ப்போம்.

சூரியனின் தன்மைகள்:- ஹைட்ரஜன் பெருமளவும் ஹீலியம் ஓரளவும் அடங்கிய ஒரு மிகப்பெரிய நெருப்பு பந்து தான் சூரியன். சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றின் மொத்த எடையில் 98 சதவிகிதம் சூரியனின் எடையாகும். பூமியின் எடையை விட, சூரியனின் எடை 3,30,000 மடங்கு அதிகமாகும். பூமியின் அளவை (Size)விட 109 மடங்கு பெரிதாகும்.

சூரியனின் வெளிப்புறத்தில் எரிந்து கொண்டிருக்கும் தீயின் சுவாலைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரையிலும் இருக்கிறது. இவ்வாறு எரிந்து கொண்டிருப்பதற்கு காரணம், சூரியனின் உட்புறத்தில் (Core) நிகழ்ந்து கொண்டிருக்கும் ‘நியூக்ளியர் ரியாக்ஸன்’ (Neuclear Reaction) என்ற செயலின் மூலம் ‘ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் அணுக்களாக’ மாறுகிறது. இதன் காரணமாக ஏராளமான வெப்பம் உருவாகிறது.

சூரியனின் உட்புறம் ஓர் அணு உலையைப்போல் இருக்கிறது. இதனின் வெப்பம் 15 மில்லியன் (1-1/2 கோடி) டிகிரி சென்டிகிரேட் ஆகும். ஒரு வினாடிக்கு 500 டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் ‘நியூக்ளியர் ரியாக்ஸன்’ என்ற செயலின் மூலம் எரிந்து ‘ஹீலியம்’ அணுக்களாக மாறுவதாகவும் கணக்கிட்டுள்ளனர். ஹைட்ரஜன் என்ற சூரியனின் எரிபொருள் இன்னும் 5 பில்லியன் (5 Billion) ஆண்டுகளுக்கு தேவையான அளவு அதில் இருப்பதாகக் கணித்துக் கூறுகின்றனர்.

இவ்வாறு ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக மாறும்போது ஏராளமான ‘மின் காந்த வெப்பக் கதிர்களை’ (Electromagnetic Radiation) உறுவாக்குகிறது. இந்த வெப்பக் கதிர்கள் சூரியனின் வெளிப்புறத்தை நோக்கிச் செல்கிறது. அதனால் சூரியனின் வெளிப்புறம் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுடைய தீச்சுவாலைகளுடன் எரிந்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு சூரியனின் மத்தியில் உற்பத்தியான இந்த வெப்பக் கதிர்களே சூரியன் மிக மிகப் பிரகாசமாக இருப்பதற்கு காரணமாக இருக்கின்றன. மேலும், சூரியக்குடும்பத்தில், சூரியனின் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அதனதன் பாதைகளில் சுற்றி வரும் கோள்களையும், சந்திரன்களையும் ஆஸ்டெராயிட்ஸ் (Asteroids) எனப்படும் விண்கற்களையும் வெப்பமடையச் செய்வதற்கு இந்த வெப்பக் கதிர்களே காரணமாக இருக்கின்றன. இந்தக் கதிர்களின் மூலமே சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பிரகாசமாக இருக்கின்றன.

சந்திரனின் தன்மைகள்:- சூரியனிலிருந்து ஒளியைப் பெற்று பிரகாசிக்கும் சந்திரன், பூமியைச் சுற்றிவரும் துணைக்கோளாகும். பூமியின் எடையில் 1.2 சதவிகிதம் எடையே இருக்கும் சந்திரன் பூமியை விட மிகச் சிறியதாகும். இதன் பகல்நேர வெப்பநிலை 127 டிகிரி சென்டிகிரேட் ஆகும். ஆதாவது பூமியின் பாலைவனப் பகுதியின் சராசரி பகல் நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு அதிகமாகும். சந்திரனின் இரவு நேர வெப்பநிலை -173 டிகிரி சென்டிகிரேட் ஆகும். அதாவது பூமியின் துருவப் பகுதியின் இரவு நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு குறைவாகும்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி இவைகளின் முடிவு:- இந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும் முடிவு உண்டா என்று இவற்றின் தோற்றம் குறித்து ஆராய்ந்து அறிந்த நவீன அறிவியலாளர்களைக் கேட்போமேயானால், அவர்கல் ‘ஆம் அவற்றுக்கும் அழிவு உண்டு’ என்றே கூறுகிறார்கள். நமது சூரியக்குடும்பம் இருக்கும் பால்வெளி நட்சத்திர மண்டலத்தை (Milkyway Galaxy) ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அவற்றில் ஆயிரக்கணக்கான சக்தியிழந்த நட்சத்திரங்கள் (Dead Stars) இருப்பதைக் கண்டனர். இதுபோல் மற்ற விண்ணடுக்குகளிலும் (Galaxies) ஆயிரக்கணக்கில் சக்தியிழந்த நட்சத்திரங்கள் (Dead Stars) இருப்பதைக் கண்டனர். இந்த டெட் ஸ்டார்கள் எப்படி இறந்திருக்கக் கூடும் என்பதை ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ‘ஒவ்வொரு நட்சத்திரமும் எப்படி இறக்கின்றன’ என்ற கோட்பாட்டை (Theory) வரையறுத்தனர். ராயல் கிரீன்வீச் அப்ஸர்வேட்டரியைச் சேர்ந்த சர் மார்டின் ரீஸ் என்பவர் கூறுகிறார்:- ‘பொதுவாக நட்சத்திரங்கள் இறக்கும்போது பெரும்பாலானவைகள் வெடித்துச் சிதறி அதன் மூலம் மிகப்பெரிய வாயுக்கள் அடங்கிய நெபுலாக்களைத் தோற்றுவிக்கின்றது. இந்த நெபுலாக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இப்பேரண்டத்தில் நிலைத்திருக்கும். இந்த நெபுலாக்களிலிருந்தே புதிய புதிய நட்சத்திரங்கள் தோன்றுகிறது. அளவில் மிகப்பெரிய நட்சத்திரங்களே (Big Stars) ‘சூப்பர் நோவா’ என்பதைத் தோற்றுவிக்கிறது. ஆனால் சூரியனின் அளவில் மிகச் சிறியது. இதன் இறப்பு என்பது ஈர்ப்பாற்றலினால் ஏற்படக்கூடியது’ என்று கூறினார். (ஆதாரம்: டிஸ்கவரி சேனல் புரோகிராம் “The sun’)

அவர்களுடைய இக்கோட்பாட்டின்படி, 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய இந்த சூரியன் தற்போதுதான் நடுத்தர வயதை அடைந்துள்ளது. தற்போது சூரியன், 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததைவிட மிகத் தீவிரமாக (More Violent Than Before) இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும் என்கின்றனர். இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் அதிதீவிர வெப்பக்கதிர்களால் இந்த பூமியில் உள்ள கடல்நீர் அனைத்தும் ஆவியாகி விடும் என்கின்றனர். சூரியனின் மத்தியிலுள்ள அதன் எரிபொருளான ஹைட்ரஜன் வாயுக்கள் தீர்ந்ததும், சூரியனின் முடிவு ஆரம்பமாகின்றது. அப்போது சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துக் கொண்டே செல்லும். இதன் காரணமாக சூரியனின் ஈர்ப்பு விசையில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு, சூரியனைச் சுற்றி வருகின்ற கோள்களும், சந்திரன்களும், எண்ணற்ற விண்கற்களும் சூரியனுடன் இணைந்து விடும். அதன் பின் ஒரு கட்டத்தில் சூரியன் வெடித்துச் சிதறி பற்பல துண்டுகளாகி விடும். எஞ்சிய அடர்த்தியான பகுதி ஒளியிழந்து வெண்மை நிறமாகக் காட்சியளிக்கும். இதனை ஒயிட் டுவார்ஃப் (White Dwarf) என்கின்றனர்.

இந்த விஞ்ஞானிகள் கூறக்கூடிய காலக்கணக்குகள் எல்லாம் அவர்கள் கணிப்புகளே. இவைகளின் மீது நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனென்றால் இன்று ஒரு கோட்பாட்டைக் கூறும் அறிவியலாளர்கள் நாளை இன்று கூறியதற்கு நேர்மாற்றமான மற்றொரு கருத்தைக் கூறுவர். இதனால் நாம் அவர்களைக் குறை கூறுவதற்கில்லை. ஏனென்றால் அவர்கள் அறிந்ததைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான். சூரியனின் முடிவு எப்போது ஏற்படும் என்பதில் நமது சிந்தனையை செலுத்தாமல் (ஏனென்றால் உலக முடிவு நாள் எப்போது ஏற்படும் என்பது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது என்று இறைவன் திருமறையில் கூறுகிறான்.) அவர்கள் கூறும் கருத்துக்களை நாம் சிந்திப்போமேயேனால் நமக்கு ஆச்சரியமளிக்கக்கூடிய வகையில் இறைவனின் வசனங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கூறியிருக்கிறது என்பதை அறிகிறோம். இனி இறைவனின் திருவசனம் இவைப்பற்றி என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம்.

“‘கியாம (முடிவு) நாள் எப்போது வரும்?’ என்று (ஏளனமாகக்) கேட்கிறான். ஆகவே, பார்வையும் மழுங்கி, சந்திரன் ஒளியும் மங்கி, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும். அந்நாளில் ‘(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?’ என்று மனிதன் கேட்பான். ‘இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!’ (என்று கூறப்படும்). (அல்குர்ஆன்: 75:6-11)

1400 ஆண்டுகளுக்கு முன்னால் குர்ஆன் கூறிய கருத்தான ‘சூரியனும், சந்திரனும் ஒன்றிணைந்து விடும்’ என்பதை 21-ம் நூற்றாண்டின் இன்றைய நவீன விஞ்ஞானம் கூறி மெய்ப்பித்திருப்பதை அறிகிறோம். இறுதியான – உண்மையான ஞானம் – (விளக்கம்) அல்லாஹ்விடமே இருக்கிறது.

Posted in கேள்வி பதில் | Comments Off on சந்திரன் சூரியனுடன் இணைந்து விடுமா?

நரகவாசிகளின் மீது அல்லாஹ்வின் கருணை

116- (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹயாத் என்ற ஆற்றில் போடப்படுவார்கள். -இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் ஹயா என்று சந்தேகப்படுகிறார்- அவ்வாறு அவர்கள் இந்த ஆற்றில் போடப்பட்டதும் பெறும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போலப் பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-22: அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நரகவாசிகளின் மீது அல்லாஹ்வின் கருணை

அல்லாஹ் நாடினாலே தவிர……..

ஆகவே (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது. (அல்குர்ஆன்: 30:52)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ் நாடினாலே தவிர……..

அறியக் கூடிய மக்களுக்கு……

அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் வழியறிந்து செல்கிறீர்கள் – அறியக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவவாறு விவரிக்கிறோம். (அல்குர்ஆன்: 6:97)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அறியக் கூடிய மக்களுக்கு……

மாஉல் ஹயாத்! (ஜீவ நீர்)

115- நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் (மேக மூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியடித்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள் என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள். (மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின் தொடர்ந்து செல்லட்டும் என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அதற்க்கு அவர்கள், நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலளிப்பார்கள். அப்போதுஅவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ, மக்களோ இருக்கவில்லை என்று சொல்லப்படும் பிறகு அவர்களிடம் இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்றுகேட்கப்படும். அதற்கவர்கள், எங்களுக்கு (குடிப்பதற்குநீர்) புகட்டுவாயாக என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு) குடியுங்கள், என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்து விடுவார்கள். பின்னர் கிருஸ்தவர்களிடம்,நீங்கள் எதை வணங்கிக்கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈஸாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலளிப்பார்கள்.

அப்போது அவர்களிடம் நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை என்று கூறப்பட்டபின், நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) குடியுங்கள்! என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்து விடுவார்கள். இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்று விட்டார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்? என்றுகேட்கப்படும். அதற்கு அவர்கள், (உலகத்தில்) நாங்கள் (வாழ்க்ககையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர் ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகவாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்துக் கொள்ளட்டும் என்று அழைக்ககà
¯ கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுவார்கள். அப்போது சர்வவல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து, நானே உங்கள் இறைவன், என்று கூறுவான். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், நீயே எங்கள் இறைவன் என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள். அப்போது, அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா? என்று (ஒருவர்) கேட்பார்.அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், (இறைவனின்) கால் (பாதம்) தான் என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தனது காலை வெளிப்படுத்துவான். இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், பாராட்டுக்காகவும்,அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள். அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால் அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிர வணக்கம் செய்ய முடியாது). பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின் மேலே வைக்கப்படும். (இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது,) நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அது என்ன பாலம்? என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், அது (கால்கள்) வழுக்குமிடம், சறுக்குமிடம், அதன் மீது இரும்புக் கொக்கிகளும், அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். நஜ்த், பகுதியில் முளைக்கும் அவை கருவேல மரமுற்கள் எனப்படும் என்று சொன்னார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) இறை நம்பிக்கையாளர் அந்த பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்டுவார். பின்னர் தாம் தப்பித்து விட்டோம் என்பதை இறை நம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்குத் தெளிவாகி விட்ட உரிமைக்காகக்கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்க மாட்டீர்கள். அப்போது அவர்கள், எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள். எங்களுடன் நோன்பு நோற்றார்கள். எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக) என்று வேண்டுவார்கள்.

அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், நீங்கள் சென்று எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள், என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்து விடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தமது பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதிகால்கள் மறையும் அளவிற்கு, நரகினுள் கிடப்பார்கள். உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள். பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். எவரது உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறைநம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள் என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெர
ிந்தவர்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக்கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள் என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள். இதன் அறிவிப்பாளரான அபூசயீத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இதை) நீங்கள் நம்பாவிட்டால், திண்ணமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைக்கமாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை இரட்டிப்பாக்குவான் எனும் (4:40,ஆவது) இறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தமது தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வஅதிகாரம் படைத்த (இறை)வன் (இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள் கரிந்து போயிருப்பார்கள். ஆகவே சொர்க்கவாசலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள். அதற்கு ஜீவ நீர் (மாஉல் ஹயாத்) என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இரு மருங்கிலும் முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள். பாறையின் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும். ஆக, அவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும் போது முத்தைப்போன்று (புதுப்பொழிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் (நரகத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரைப் பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து) இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள். இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச் செய்தான் என்று கூறுவர். பிறகு (அவர்களிடம்) நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு. இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு என்று (நற்செய்தி) சொல்லப்படும்.

புகாரி-7439: அபூசயீத் அல்குத்ரீ(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாஉல் ஹயாத்! (ஜீவ நீர்)