தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள்

 தற்காலத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்களை விற்பனை செய்யும் கடைகளில் எந்தக் கடையிலும் தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் இல்லாமலில்லை. அவ்வாறே செல்வந்தர்களுடைய வீடுகளும், பல ஹோட்டல்களும், இன்னும் சொல்வதானால் இந்த தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிலர், சிலருக்கு வழங்கும் உயர்ந்த அன்பளிப்புப் பொருள்களாகவும் ஆகி விட்டன.

இன்னும் சிலர் தங்களுடைய வீடுகளில் அவற்றை வைத்துக் கொள்வதில்லை. ஆயினும் மற்றவர்களுடைய வீடுகளிலும் அவர்களின் வலிமா-விருந்துகளிலும் கலந்து கொள்ளும்போது அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவையனைத்தும் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட காரியங்களாகும். இப்பாத்திரங்களைப் பயன்படுத்துவது பற்றி நபி (ஸல்) அவர்கள் மூலம் கடுமையான எச்சரிக்கையும் வந்துள்ளது. அவர்கள் கூறியதாவது:

‘நிச்சயமாக தங்கம்,வெள்ளிப் பாத்திரங்களில் உண்பவன் அல்லது பானம் அருந்துபவன் தன் வயிற்றினுள் நரக நெருப்பையே நிரப்புகிறான்’ அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: முஸ்லிம்.

இந்தச் சட்டம் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் எல்லா வகைப் பண்ட – பாத்திரங்களையும் எடுத்துக் கொள்ளும். உதாரணமாக தட்டு, கரண்டி வகைகள், கத்திகள், விருந்தினருக்காகப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இனிப்புப் பணடங்களை வைக்கப் பயன்படுத்தப்படுகின்ற டப்பாக்கள் போன்றவை.

இன்னும் சிலரோ நாங்கள் இப்பாத்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் கண்ணாடிப் பெட்டிகளில் அழகுக்காக மட்டுமே வைத்துக் கொள்கிறோம் என்கின்றனர். இதுவும் கூடாது. ஏனெனில் இது உபயோகப்படுத்துவதற்கான வழியைத் திறந்து விடும் என்பதற்காக.

 

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Posted in எச்சரிக்கை | Comments Off on தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள்

என்னுடைய கூலியெல்லாம்…………

(நபி நூஹ் (அலை) தம் சமுதாயத்தை நோக்கி:) “நீங்கள் என்னைப் புறக்கணித்தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான் முஸ்லிம்களில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 10:72)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on என்னுடைய கூலியெல்லாம்…………

நேர்வழியை விட்டும் கண்ணை மூடிக் கொண்டவனின் நண்பன்

43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் (அருளாளன் அல்லாஹ்வின்) நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.

43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

43:38. எதுவரை என்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும் போது (ஷைத்தானிடம்): “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும் மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்த நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.

43:39. (அப்போது) “நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).

43:40. ஆகவே (நபியே!) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நேர்வழியை விட்டும் கண்ணை மூடிக் கொண்டவனின் நண்பன்

மறுமையில் அல்லாஹ்வை காண்பது பற்றி..

113- மேலும் இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும், தங்கத்தினால் ஆனவை. அத்ன் எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள பெருமை எனும் மேலாடை தவிர வேறெந்த தடையும் இராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி- 4880: அப்துல்லாஹ் பின் கைஸ் (அபூ மூசா அல் அஷ்அரீ) (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மறுமையில் அல்லாஹ்வை காண்பது பற்றி..

அலட்சியமா? எதிரே துக்கம் காத்திருக்கிறது

…….நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலைக்கு மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் – ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம். (அல்குர்ஆன்: 7:95)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அலட்சியமா? எதிரே துக்கம் காத்திருக்கிறது

அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குதல்

இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு

அனைத்துப்புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அவனது சாந்தியும், சமாதானமும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், மற்ரும் அனைத்து முஸ்லிம்கள் மீதும் உண்டாவதாக! ஆமீன்!!

பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார்களையும், ஷெய்குமார்களையும், பீர்களையும், அவ்லியாக்களையும், இறை நேசர்களையும் பிரார்த்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர்.

1. நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் அல்லாஹ்விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம்.

2. நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம்.

3. நாங்கள் பாவம் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் எங்களுக்காக அவனிடம் எங்களின் தேவைகளைக் கேட்டு பெற்றுத் தருவார்கள்.

4. மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும் சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை; மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர்.

5. நாங்கள் ஒன்றும் புதிதாக இதைச் செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறையிட்டுத்தானே தேவைகளைப் பெற்று வந்தார்கள்.அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?

6. எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத்மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?

அல்லாஹ் தன் திருமறையில் அவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும், அவனிடமே உதவி தேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்று வணக்க முறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.

ஆய்வு தொடரும்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குதல்

(தௌஹீதுக்) கொள்கை முதலாவதா? அல்லது ஆட்சி முதலாவதா?

அஷ்ஷெய்க் முஹம்மத் குதுப் அவர்கள் மக்கா தாருல் ஹதீஸில் ஆற்றிய ஓர் உரையின் போது, இந்த அடிப்படையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்தார். கேள்வியும், அதற்கான பதிலும் பின்வருமாறு:-

கேள்வி: ‘ஆட்சியின் முன்னேதான் இஸ்லாம் மீட்சி பெறும்’ என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, அகீதாவை (அடிப்படைக் கொள்கையை)ச் சரிசெய்வதிலும் அவ்வழியில் மக்களைப் பயிற்றுவிப்பதிலும் தான் இஸ்லாம் மீட்சிபெறும் என்று கூறுகின்றனர். இவ்விரண்டில் எது சரியானது?

பதில்: ‘அகீதாவை’ச் சரியான முறையில் பிரசாரம் செய்யக்கூடிய ‘தாஇகள்’ (பிரசாரகர்கள்) இல்லாமல், பூமியில் இந்த மார்க்கத்தின் ஆட்சி எங்கிருந்து வரும்? அந்த ‘தாஇகள்’ சரியான ஈமானைப் போதிக்கின்றனர்; தங்களுடைய மார்க்கத்தில் சோதிக்கப்பட்டு பொறுமையாக இருக்கின்றனர்; அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்கின்றனர். அப்பொழுது பூமியிலே அல்லாஹ்வுடைய மார்க்கம் நல்லமுறையில் சட்டமாக்கப்படுகின்றது. ஆட்சி என்பது வானத்திலிருந்து பூமிக்கு வருகின்ற ஒன்றன்று. தானாக அது வானத்திலிருந்து இறங்கி விடவும் மாட்டாது. ஒவ்வொரு வஸ்துவும் வானத்திலிருந்து இறங்குகின்றன என்பது உண்மைதான். ஆனால் மனிதனுடைய முயற்சியின் பயனாகத்தான் இச்சந்தர்ப்பத்தை மனிதனுக்கு, அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். இதுபற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. “அல்லாஹ் நாடியிருந்தால் (அவர்கள் உங்களுடன் யுத்தம் புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும் (யுத்தத்தின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கிறான். (47:04)

அகீதாவைக் சரிசெய்வது கொண்டும் அதனமைப்பில் காலத்தைப் பயிற்றுவிப்பது கொண்டுமே நாம் (பிரசாரத்தை) ஆரம்பிக்க வேண்டும். (இஸ்லாத்தின்) ஆரம்பகாலம் சோதனைக்குள்ளானவாறு சோதிக்கப்பட்டு, சோதனைக்காக பொறுமை சாதிக்க வேண்டியேற்படும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on (தௌஹீதுக்) கொள்கை முதலாவதா? அல்லது ஆட்சி முதலாவதா?

இறைவனை நேரில் பார்த்தார்களா?

112- முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்துவிட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை, அவர்களுடைய (அசல்) உருவிலும் (அசல் படைப்பின்) அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைந்தபடி (தோற்றமளிக்கக்) கண்டார்கள்.

புகாரி-3234: ஆயிஷா(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இறைவனை நேரில் பார்த்தார்களா?

மன்னிக்கும் மாண்புடையோன்!

எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 4:17)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மன்னிக்கும் மாண்புடையோன்!

நம்பிக்கை கொண்டோருக்கான பாதுகாப்பு கவசம்

அல்லாஹ் – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன் மகிமை மிக்கவன். (அல்குர்ஆன்: 2:255)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நம்பிக்கை கொண்டோருக்கான பாதுகாப்பு கவசம்