Author Archives: Jafar
அவனை துதி செய்யாத பொருள் பூமியில் உண்டா
ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அ(ல்லாஹ்)வனை துதி செய்து கொண்டு இருக்கின்றனர்; இன்னும் அ(ல்லாஹ்)வன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக அ(ல்லாஹ்)வன் பொறுமையுடையோனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 17:44)
அனைத்துக்கும் மூல ஆதாரம் குர்ஆன் மற்றும் சுன்னா மட்டுமே!
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் குர்ஆனைக் கொண்டும், சரியான ஸுன்னாவைக் கொண்டும் தீர்ப்பு வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அவ்விரண்டின் பக்கமே தீர்ப்புக் கேட்டுச் செல்லவும் வேண்டும். பின்வரும் மறைவசனத்தைக் கொண்டே அவ்வாறு செயல்பட வேண்டும்.“அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக!” (5:49) ‘அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டே தீர்ப்பளித்து, அல்லாஹ் அருளியவற்றையே தேர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய தலைவர்களுக்கும், அவர்களுடைய … Continue reading
பால் Vs மது
106- என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூஸா (அலை) அவர்களைப் பார்த்தேன். அவர்கள் ஷனூஆ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணைத் தடவிப்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈஸா அவர்களைப் பார்த்தேன். அவர் நடுத்தர வயதுடைய சிகப்பான மனதராகவும் (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்றும் இருந்தர்கள். … Continue reading
வறுமையும் பிணியும் ஏன்?
நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. (அல்குர்ஆன்: 7:94)
தஜ்ஜாலின் தோற்றம் குறித்து….
105- நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அங்கிருந்தவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறும் போது அவனுடைய இருகண்களுக்கு மத்தியில் காஃபிர் என எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றதும் இப்னு அப்பாஸ் (ரலி) நான் இதை நபி (ஸல்) கூறக் கேட்கவில்லை. எனினும் மூஸா (அலை) தல்பியா கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை … Continue reading
இவர்கள் தெய்வங்களா?
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் (இயேசுவையும்) தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் (அல்லாஹ்) அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன்: 9:31)
விலகாமல் செல்லும் கோள்கள்
கேள்வி எண்: 6. எந்நேரமும் சதா சுழன்று, சுற்றிக் கொண்டிருக்கும் பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் இதர கோள்களும் அதனதன் பாதைகளிலிருந்து விலகி சென்றிடாமல் தாம் தடுத்துக் கொண்டிருப்பதாக இறைவன் கூறும் திருமறை வசனம் எது?பதில்: “நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் … Continue reading
நபி (ஸல்) அவர்கள் கண்ட அல்லாஹ்வின் சான்றுகள்
104- நான் (மிஃராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவர்களை ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான சுருள் முடிகொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா அவர்களை நடுத்தர உயரமும், சிகப்பும், வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் (சுருள்,சுருளாக இல்லாமல்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். … Continue reading
அவனே உங்கள் அல்லாஹ்!
நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் – எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்? (அல்குர்ஆன்: 6:95)
ஹராமானவற்றை உண்ணுதல்
இறையச்சம் இல்லாதவன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதிக்கிறோம் அதை எவ்வழியில் செலவு செய்கிறோம் என்பதைப் பொருட்படுத்த மாட்டான். மாறாக, அவனுடைய அக்கரை தன் செல்வத்தை அதிகப்படுத்துவதிலேயே இருக்கும். அது திருடுதல், லஞ்சம் வாங்குதல், பிறருடைய பொருளை அபகரித்தல், மோசடி செய்தல், ஹராமான வியாபாரம், வட்டி கொடுக்கல் வாங்கல், அநாதையின் சொத்தை அபகரித்தல் ஆகியவற்றின் மூலமாகவோ அல்லது ஜோதிடம், … Continue reading