Author Archives: Jafar
ஹஜ் நேரத்தில் தொழுகையை (மினாவில்) சுருக்குதல்.
402– நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோருடனும் உஸ்மான் (ரலி) உடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் உஸ்மான் (ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். பின்னர் உஸ்மான் (ரலி) நான்கு ரக்அத்களாகத் தொழலானார்கள். புகாரி-1082 :அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) 403– நபி (ஸல்) அவர்கள் மினாவில் … Continue reading
ஈமானுடைய கிளைகளும், குஃப்ருடைய கிளைகளும்
1. சொல், செயல், விசுவாசம் என்று ஈமானுக்கு மூன்று கிளைகள் உண்டு. ஈமானென்றால் நாவினால் மொழிந்து, உள்ளத்தினால் உறுதிகொண்டு, உறுப்புகளினால் செயல்படுத்துவதாகும். நாவினால் மொழிவதென்றால் இஸ்லாத்தின் கலிமாவான ‘லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற வாக்கியத்தை மொழிவதாகும். உள்ளத்தின் செயல்பாடென்றால் அதன் எண்ணம் அதனைத் தூய்மைப்படுத்தல் என்றும், உறுப்புகளைக் கொண்டு செயல்படுத்தல் என்றும் இருவகைப்படும்.
பிரயாணிகள் தொழுகை..
398– அல்லாஹ் தொழுகையினை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும், பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாக கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது. புகாரி-350: ஆயிஷா (ரலி) 399– நான் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில் உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம் … Continue reading
ஒட்டுக் கேட்டல்
அல்லாஹ் கூறுகிறான்: “துருவித் துருவி ஆராயாதீர்கள்” (அல்குர்ஆன்; 49:12). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘யாரேனும் மக்களின் செய்தியை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்டால் மறுமையில் அவனுடைய காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்’ நபிமொழி (தப்ரானி) அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய செய்தியை ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதற்காக பிறரிடம் எடுத்துச் சொன்னால் … Continue reading
தொழுகை நேரம் தவறி விட்டால்..
396-நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிலிருந்து திரும்பிக் கொண்டு) இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்த பொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும் வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்து விட்டோம். உறக்கத்திலிருந்து கண்விழித்தவர்களில் அபூபக்ரே முதலாமவராக … Continue reading
தொழுகையில் குனூத் ஓதுதல்..
392– நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்து என்று கூறிய பின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக துஆச் செய்வார்கள். இறைவா! வலீத் பின் அல்வலீத், ஸலாமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ மற்றும் மூமின்களில் பலவீனர்களை நீ காப்பற்றுவாயாக! இறைவா! முள்ர் … Continue reading
இவ்வுலக வேதனைகள் எதனால்?
“எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றிவிடுவதில்லை” (8:53) “எந்த தீங்கும் உங்களை வந்தடைந்ததெல்லாம் உங்கள் கைகள் தேடிக்கொண்ட (தீ)வினையின் காரணமாகவே தான். ஆயினும் (அவற்றில்) அநேகமானவற்றை அவன் மன்னித்து விடுகிறான்” (42:30)
சிறிய ‘நிபாக்’
இது செயல்மூலம் ஏற்படுகின்றது. பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது இதற்கு ஆதாரமாய் அமைந்துள்ளது. ‘முனாபிக்குடைய அடையாளம் மூன்று. 1. பேசினால் பொய்யுரைப்பான்; 2. வாக்களித்தால் மாறு செய்வான்; 3. நம்பினால் மோசடி செய்வான்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
பெரியவர் இமாமாக இருத்தல்..
391– நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்கக் குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும், இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுங்கள். தொழுங்கள் தொழுகை … Continue reading
ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமமான ஒரு நாள்!
70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப்போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான். 70:2. காஃபிர்களுக்கு (நிராகரிப்பவர்களுக்கு அது ஏற்படும் போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை. 70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்). 70:4. ஒருநாள் மலக்குகளும் (ஜிப்ரயீலாகிய – வான தூதர்) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் … Continue reading