முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்’ என்று பதிலளித்தார்கள். (புஹாரீ- ஹதீஸ் எண்- 7373)
அடியார்கள் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை, அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை!
இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.
இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது
(விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்) (அல்குர்ஆன்:2:183)
இனி முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு சம்பந்தமான தெளிவை இதன் மூலம் அறிந்து கொள்ள முயற்சிப்போம். Continue reading
ரமளான் நோன்பின் சட்டநிலை.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை! அவனை வழிபடுவது, அமல் புரிவோர்க்குச் சிறந்ததொரு சம்பாத்தியமாகும். அவனுக்கு அஞ்சுவது பயபக்தியாளர்களின் உன்னதப் பாரம்பரியம் ஆகும்.
தன்னுடைய நேசர்களின் உள்ளங்களை-தன் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் தயார்படுத்தியவன் அவனே! அவ்வாறே அவர்களின் விதியிலும் எழுதினான்! இறைவழிபாட்டில் எல்லாக் கஷ்டத்தையும் களைப்பையும் அவர்களுக்கு இலகுவாக்கினான். ஆகையால் அவர்கள், இறைப்பணி செய்யும் வழியில் எவ்விதச் சோர்வையும் உணரவில்லை!
துர்ப்பாக்கியமுடையவர்கள் மீது – அவர்கள் வழிபிறழ்ந்து சென்ற பொழுது – துர்ப்பாகியத்தை விதித்தான். அவர்கள் அல்லாஹ்வைப் புறக்கணித்தார்கள். அவனை நிராகரித்தார்கள்! ஆகையால் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் அவர்களைப் புகுத்தினான்.
அல்லாஹ்வை – அவன் வழங்கிய அருட்கொடைகளுக்காக நான் புகழ்கிறேன். நான் சாட்சி சொல்கிறேன்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாரும் – எதுவும் நிகரில்லை! எதிரிப் படைகளைத் தோல்வியுறச் செய்தான்! அவனே வென்றான்! மேலும் முஹம்மது நபி, அவனுடைய அடியார்- பிரத்தியேகமாகத் தேர்வு செய்யப்பட்ட திருத்தூதர் என்றும் நான் சாட்சி சொல்கிறேன்!
நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! சிறப்புகளிலும் அந்தஸ்துகளிலும் மிகைத்தவரான நபித்தோழர் அபூபக்ர் மீதும் – எவரைக் குறித்து ஷைத்தான் பயந்து விரண்டோடினானோ அப்படிப்பட்ட உமர் மீதும்- பயபக்தியாளரும் தூய்மையாளரும் குலச்சிறப்புக்கு உரியவருமான உஸ்மான் மீதும் – நபியின் மருகனும் பெரிய தந்தையின் மகனுமாகிய அலீ மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! மேலும் இறைமார்க்கத்தில் உன்னதப் பெருமையையும் லாபத்தையும் சம்பாதித்துக் கொண்டவர்களான நபித்தோழர்கள் அனைவர் மீதும் – வாய்மையுடன் அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும் – தாரகைகள் உதித்து மறைந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் ஸலவாத் பொழிந்து கொண்டிருப்பானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக! Continue reading
நோன்பின் தத்துவங்கள்!
எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவனே இரவையும் பகலையும் இயக்கக் கூடியவன். மாதங்களையும் வருடங்களையும் சுழன்று வரச் செய்பவன். அவன் அரசன். தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன். மகத்துவத்திலும் நீடித்திருப்பதிலும் தனித்துவம் உடையவன். குறைபாடுகளை விட்டும் மனிதர்களுக்கு ஒப்பாகுதல் என்பதை விட்டும் தூய்மையானவன்!
நரம்புகள் மற்றும் எலும்புகளினுள் இருப்பதென்ன என்பதையும் அவன் பார்க்கிறான். மெல்லிய குரல்களையும் நுண்ணிய பேச்சையும் கேட்கிறான்! கருணை பொழியும் இறைவன். அதிக அளவு உபகாரம் செய்பவன். ஆற்றல் மிக்கவன். பழி வாங்குவதில் கடுமையானவன். உலகிலுள்ள எல்லாவற்றையும் சரியாக நிர்ணயிப்பவன். அழகிய முறையில் அவற்றை இயக்குபவன். சட்ட நெறிகளை வகுத்தவன்! ஆகா! அந்தச் சட்டங்களைத் தான் எத்தனை சிறந்த முறையில் உறுதிப்படுத்தி இருக்கிறான்!
அவனது ஆற்றல் கொண்டு தான் காற்று சுழல்கிறது! மேகம் செல்கிறது. அவனது நுண்ணறிவு மற்றும் கருணையினால் தான் இரவு – பகல்கள் மாறி மாறிச் சுழன்று வருகின்றன! Continue reading
ரமளானைப் புறக்கணித்தல்.
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இஸ்லாத்தைப் பின்பற்றுவது மற்றும் தீனின்** அடிப்படைகள் என்பது மூன்று விதமான அடிப்படைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இவைகளில் ஏதாவதொன்றையேனும் யாராவது புறக்கணிப்பார்களென்றால் அவர், இஸ்லாத்தைப் புறக்கணித்தவராவார், அவருடைய இரத்தம் பாதுகாப்பற்றதுமாகும். அந்த அடிப்படைகளாவன: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி பகர்வது, தொழுகையை முறையாகப் பேணிவருவது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது ஆகிய மூன்று அடிப்படைகளுமாகும். அபு யஃலா.
**தீன் என்ற அரபிச் சொல்லுக்கு பொதுவாக, மதம் என்ற பொருளைத் தான் மொழி பெயர்ப்பாளர்கள் கொடுத்து வருகின்றார்கள். இங்கு மதம் என்பது பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில், அல்லது வெள்ளி போன்ற குறிப்பிட்ட தினங்களில் சர்ச் மற்றும் கோயில்களில் தங்களது சில மணி நேரங்களைச் செலவிடுவதன் மூலம், தாங்கள் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற கருத்தை உருவாக்கி,அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதை அறியத் தருகின்றனர். இத்தகைய மத அனுஷ்டானங்கள் அதைப் பின்பற்றுகின்றவனின் வாழ்க்கையில் எந்தவித மாறுதலையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை. இங்கு இஸ்லாமிய வழக்கில் தீன் என்பது, அதனைப் பின்பற்றுகின்றவனுடைய முழு வாழ்க்கை முறையையும் குறிக்கக் கூடியதாகும். இதைப் பற்றி நாம் விரிவாகக் கூற வேண்டுமென்றால், தீன் என்பது மத அடிப்படையிலும் அது சார்ந்த கொள்கையிலும், அதன் வணக்க வழிபாடுகளிலும், சமூக பொருளாதார அரசியல் தளங்களிலும், ஒழுக்க மாண்புகளிலும், மற்றும் இவற்றைப் பின்பற்றுவதில் தூய்மையான வாழ்வை மேற்கொள்வது என்பதைக் குறிக்கும். அந்தத் தூய வாழ்வு என்பது, இறைவன் ஏற்றுக் கொண்ட வழிமுறைகளில், அவனுடைய ஏவல்களை ஏற்று மதித்து நடந்தும், அவனது விலக்கல்களை ஏற்று அவற்றிலிருந்து ஒதுங்கி வாழ்வதையும் குறிக்கும். மொத்தத்தில் இறைவனுக்காகவே, இறைவனுடைய திருப்பொருத்தத்திற்காகவே வாழக்கூடிய வாழ்வு, அந்த வாழ்வில் தன்னுடைய மன இச்சையை விட இறைப் பொருத்தமே மேலோங்கியதான வாழ்க்கையே தீன் என்றழைக்கப்படும்.
Tamil Islamic Library
நோன்பை முறித்ததற்காக மீண்டும் நோன்பு நோற்றலும், அதற்கான பரிகாரமும்.
நோன்பை முறிக்கக் கூடிய காரணிகளாக, திருமறைக் குர்ஆனில் மூன்று காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன : உண்ணுதல், பருகுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் ஆகியவைகளாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (2:187).
உணவையோ அல்லது பானங்களையோ உட்கொள்ளுதல், அது ஆகுமாக்கப்பட்டதாகவோ அல்லது ஆகுமாக்கப்படாததாகவோ இருப்பினும் சரியே. மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது தீங்கு விளைவிக்காததாகவோ இருப்பினும்சரியே. மற்றும் உண்ணக் கூடிய பொருள் மிகக் குறைந்த அளவு அல்லது அதிகமான அளவுள்ளதாக இருப்பினும் சரியே, இவை யாவும், நோன்பை முறிக்கக் கூடியவைகளாகி விடும். இதனடிப்படையில், புகை பிடித்தலும் – இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது மற்றும் இஸ்லாமியச் சட்டங்கள் அனுமதிக்காததும், இதுவும் நோன்பை முறிக்கக் கூடியதுதான்.
நோன்பாளி மிகச் சிறிய அளவிலான ரொட்டித் துண்டை விழுங்கினாலும் சரி, அந்த ரொட்டித் துண்டானது இவனது உடலுக்கு எந்தவித பிரயோஜனத்தையும் தர இயலாத அளவில் இருப்பினும், அதுவும் ஒரு நோன்பாளியின் நோன்பை முறிக்கக் கூடியது தான் என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
உடலுறவு கொள்ளுதல் :
நோன்பு காலங்களில் உடலுறவு கொள்வது என்பது மிகக் கடுமையானதொரு பாவகரமான செயலாகும். ஏனென்றால், ஒருவர் நோன்பு காலங்களில் உடலுறவில் ஈடுபட்டு விட்டாரென்றால், அவர் ஒரு அடிமையை விடுதலை செய்தாக வேண்டும், அல்லது அதற்கு வழியேதும் இல்லை என்றால், இரண்டு மாதங்கள் இடைவிடாது தொடர்ந்து நோன்பு நோற்றாக வேண்டியது கட்டாயமாகும். இதற்கும் ஒருவர் தகுதி படைத்தவராக இல்லை எனில் அவர், இதற்குப் பகரமாக 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
உணர்ச்சியின் மேலீட்டால் விந்தை வெளியேற்றுதல் – நோன்பை முறித்து விடக் கூடியது. இதற்கு எந்தப் பரிகாரமும் இல்லை. புரிகாரம் என்பது பெண்ணுடன் உடலுறவு ஏற்பட்டால் மட்டுமே செலுத்தக் கூடியதாகும்.
நரம்புகளின் மூலம் ஊசியேற்றிக் கொள்ளுதல் – செலுத்தக் கூடிய ஊசி மருந்தின் தன்மை மருந்து என்ற அடிப்படையில் அல்லாத, உணவுக்கான மாற்றுப் பொருளாக இருக்குமென்றால், நோன்பை முறித்து விடக்கூடியது.
சுயமாக வாந்தி எடுத்தல் – ஆனால் தானாக வாந்தி எடுத்து விட்டால் அது எந்தவிதத்திலும் நோன்பை முறித்து விடாது.
மாதவிடாய் அல்லது குழந்தைப் பேற்றுக்குப் பின் உள்ள இரத்தப் போக்கு – சூரிய உதயத்திற்கு முன்பாக இரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டதென்றால், அது நோன்பு வைப்பது ஆகமானதல்ல, அது நோன்பை முறித்து விடும். ஆனால், நோன்பு வைத்த பின்பு சூரிய உதயத்திற்குப் பின்பாக இரத்த ஒழுக்கு ஏற்படுமென்றால், அது நோன்பை முறித்து விடாது.
இரத்தத்தை வெளியேற்றுதல். முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரத்தம் குத்தி எடுப்பவனுடைய மற்றும், இரத்தம் குத்தி இரத்தத்தை வெளியேற்றுபவனுடைய நோன்பும் முறிந்து விடும். இது இன்றுள்ள முறையில் பாட்டில்களில் இரத்தத்தை வெளியேற்றி சேமிப்பதையும் குறிக்கும். இதைத் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் காற்றில்லாத பாத்திரத்தின் மூலம் உடலிலிருந்து இரத்தம் குத்தி உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. இரத்தத்தை இன்றுள்ள முறையின் பிரகாரம் ஊசியின் மூலம் குத்தி அல்லது சிரிஞ் மூலம்வெளியேற்றுவதும், நோன்பை முறிக்கக் கூடிய செயல்களாகும்.
மேலே குறிப்பிடப்பட்டவர்களில் – அதில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களை நோன்புக் காலங்களில் அவர்கள் செய்துவிடுவார்களென்றால், அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு குற்றங்களை இழைத்தவர்களாவார்கள் :
1. அவர்கள் பாவமான காரியத்தைச் செய்து விட்டார்கள்
2. நோன்பை முறித்து விட்டார்கள்
3. அவர்கள் நோற்றிருக்கின்ற நோன்பை அதன் இறுதி வரைக்கும் அந்த நாளின் முடிவு வரைக்கும் தொடர வேண்டும்.
விட்ட நோன்புகளை ரமளானுக்குப் பின் உள்ள மாதங்களில் நோற்றாக வேண்டம்.
கீழ்க்கண்ட 3 காரணங்களால் நோன்பானது முறிந்து விடும் என்பதை நாம் எப்பொழுதும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும் :
1. அறிவு
2. கவனமின்மை
3. விருப்பமின்மை
அறிவு :
நோன்பு நோற்றிருக்கும் நோன்பாளியானவர் மேலே நாம் கூறியுள்ள நோன்பை முறிக்கக் கூடிய காரியங்களை, தன்னுடைய சுயநினைவின்றி மறதியின் காரணமாக அல்லது அறியாமையின் காரணமாக பாழ்படுத்தி விட்டாரென்றால், அந்த நோன்பு முறிந்து விடாது, அதை அவர் தொடர வேண்டும், இதில் அவர் நோன்பின் கால வரையறைகளையோ அல்லது சட்டங்களையோ மீறியிருந்தாலும் சரியே! உதாரணமாக, நோன்பு நோற்கக் கூடிய ஒருவர், இரவின் இறுதி நேரத்தில், அதாவது ஸஹர் நேரத்தில் எழுந்திருந்து ஸஹருக்கான உணவை உட்கொண்டிருக்கின்றார், அப்பொழுது அவர் இன்னும் விடியவில்லை சுபுஹினுடைய நேரம் வரவில்லை என நினைத்துக் கொண்டு, தன்னுடைய உணவு உட்கொள்வதைத் தொடர்கின்றார், ஆனால் பின்பு தான் தெரிய வருகின்றது விடிந்து விட்டது அல்லது ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பதை அறிய வருகின்றார் எனில், அவரது நோன்பு செல்லுபடியானது – முறிந்து விடாது, அவர் தன்னுடைய நோன்பைத் தொடரலாம், ஏனெனில் அவர் அறியாமையின் காரணமாக நேரத்தை அவர் தவறு விட்டு விட்டார் என்பதேயாகும்.
நோன்பை முறிக்கக் கூடிய சட்டத்தை அறிந்திருக்கவில்லை, இதற்கு உதாரணம், ஒருவர் தன்னுடைய இரத்தத்தைத் தானே குத்தி எடுத்துக் கொண்டிருக்கின்றார், இவ்வாறு இரத்தம் எடுப்பது நோன்பை முறிக்கக் கூடிய செயல் அல்லது நோன்பை முறிக்கக் கூடியவைகள் எவை எவை என்றறியக் கூடிய சட்டங்களில் உள்ள ஒரு சட்டம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. ஏனவே, இவருடைய நோன்பை முறிந்து விடாது, இவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படத்தக்கது தான்.
இறைவன் ஒரு நல்லடியாரின் பிரார்த்தனைகள் இவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றான் : என்னுடைய இறைவனே! நாங்கள் மறதியாகவோ அல்லது தவறுதலாகவோ செய்த தவற்றுக்காக எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!
ஆபுபக்கர் (ரலி) அவர்களின் மகளார் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு நாள் (ரமளான் மாதத்தில்) முஹம்மது (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், அந்த நாளானது மிகவும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது, எனவே நாங்கள் அன்றைய தினம் முடிந்து சூரியன் மறைந்து விட்டது என நினைத்து, எங்களது நோன்பைத் திறந்து விட்டோம். நாங்கள் நோன்பைத் திறந்த பின்பு சூரியன் மீண்டும் உதித்தது, இருப்பினும் முஹம்மது (ஸல்) அவர்கள், மீண்டும் அந்த நாளைய நோன்பை (பரிகாரமாக ரமளானுக்குப் பின்பு) நோற்கச் சொல்லவில்லை. அவ்வாறு (பரிகாரமாக) நோற்க வேண்டும் என்பது கட்டாயம் என்றிருந்தால், அந்த விட்டுப் போன அந்த நோன்பை நோற்கச் சொல்லியிருப்பார்கள்.
கவனமின்மை :
அதாவது ஒவ்வொரு நோன்பாளியும் தான் நோன்பிருக்கின்றோம், நோன்பிருந்து கொண்டிருக்கின்றோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் ஒருவர் நோன்பு நோற்றிருக்க அந்த நிலையில், தான் நோன்பு நோற்றிருக்கின்றோம் என்பதை மறந்த நிலையில் உணவையோ அல்லது குடி பானங்களையோ அருந்தி விடுகின்றார் எனில் அவருடைய நோன்பு முறிந்து விடாது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யாரொருவர் தான் நோன்பிருந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்த நிலையில் உணவையோ அல்லது குடிப்பையோ உட்கொண்டு விடுகின்றாரோ அவர் தன்னுடைய நோன்பைத் தொடரட்டும். அல்லாஹ் தான் அவருக்கு உணவையும் மற்றும் குடிப்பையும் வழங்கினான். (அஹ்மது)
விருப்பமின்மை :
ஒரு மனிதன், நோன்பிருந்து கொண்டிருக்கின்ற தன்னுடைய மனைவியை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு அழைத்து, அதனைத் தடுக்க இயலாத நிலையில் இவள் இருந்து அவனுடன் உடலுறவில் ஈடுபட்டு விடுவாளெனில், அதற்குப் பகரமாக இவள் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவள் மீண்டும் அந்த நோன்பை நோற்கவோ அல்லது அதற்குப் பரிகாரமாக இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்க வேண்டியது இவள் மீது கடமை இல்லை. (ஃபத்வா முஹம்மது பின் உதைமீன், ரமளான் பற்றி கேள்வி பதில் – பக்கம் 13-18).
Tamil Islamic Library
ரமளான் மாதத்தில் நன்மைகளை அதிகம் பெற்றுத் தரத் கூடிய செயல்கள்!
ரமளானில் செய்யப்படும் அமல்களுக்கான கூலிகள் அபரிதமாகக் கணக்கிடப்பட்டு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகின்றன : அத்தகைய நற்செயல்களாவன :
1. திருமறையை ஓதுதல் :
மகத்துவமிக்கவனான அல்லாஹ் கூறுகின்றான் :
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ – தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ – நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன். (35:29-30)
2. கியாம் என்றழைக்கக் கூடிய இரவுத் தொழுகை :
இது இன்று தராவீஹ் தொழுகை என்றழைக்கப்படுகின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவனொருவன் ரமளான் மாதத்தின் இரவுத் தொழுகையைக் கடைபிடித்துத் தொழுது வருகின்றானோ, அவன் தன்னுடைய வெகுமதியை எதிர்பார்க்கட்டும், அல்லாஹ் அவனது முந்தைய பாவங்களை மன்னித்து விடுகின்றான். (புகாரி, முஸ்லிம், மற்றும் பல.. ..)
3. ஸலாத்துத் தராவீஹ் :
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மக்களே உங்களுக்கிடையில் வாழ்த்துக்களை (ஸலாத்தை)ப் பரிமாறிக் கொள்ளுங்கள், உணவுகளை அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கிடையே சொந்தங்கள் நட்புகளை இறுக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள், மக்கள் தூங்குகின்ற இரவு நேரங்களில் நீங்கள் எழுந்திருந்து தொழுங்கள், (அவ்வாறு நீங்கள் செய்தால்) பாதுகாப்பாகச் சொர்க்கத்தில் நீங்கள் நுழைந்து விடலாம். (அத்திர்மிதி)
ஸலாத்துத் தராவீஹ் என்ற தொழுகையானது, ரமளான் நாட்களில் இஷாத் தொழுகைக்குப் பின்பு தொழப்படுகின்றது. இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது என்பது மிகச் சிறந்ததொரு செயலாகும். ஓருவேளை அருகில் பள்ளிவாசல் எதுமில்லை என்றால், அதனைத் தனித்துச் தொழுதும் கொள்ளலாம். இது 8 ரக்அத்துக்களைக் கொண்டதாகவும் (4 தடவையாக, ஒவ்வொரு தடவைக்கும் 2 ரக்அத் என்ற அடிப்டையில் தொழ வேண்டும்.), அதனை அடுத்து 3 ரக்அத் கொண்ட வித்ருத் தொழுகையைத் தொழ வேண்டும்.
இரவுத்தொழுகையின் பொழுது வழக்கமாக ரசூல் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்துக்களைத் தொழுது வந்தார்கள் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:
முஹம்மது (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்திலும் அது அல்லாத மாதங்களிலும், 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுததில்லை. (புகாரி, முஸ்லிம் மற்றும் பல)
ஆஸிப் பின் யஸீது (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள் :
உபை பின் கஃப் அவர்களையும், தமீம் அத்தாரி (ரலி) அவர்களையும் முன்னின்று தராவீஹ் தொழுகையை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (முவத்தா இமாம் மாலிக்).
ஷேய்க் நஸீரத்தீன் அல்-பானி (ரஹ்) இந்த மேலே உள்ள ஹதீஸ் பற்றி விளக்கமளிக்கும் பொழுது கூறியதாவது: முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு நாளின் இரவில் 11 ரக்அத்துக்களுக்கு மேலாக இரவுத் தொழுகையைத் தொழுகாதிருந்திருக்கும் பொழுது, அந்தப் 11 ரக்அத்துக்களை விடத் தொழ நினைப்பது அனுமதியளிக்கப்பட்டதல்ல. இவ்வாறு அதற்கு அதிகமாகத் தொழ நினைப்பது முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளையை மறுத்து, அவருடைய அந்தச் செயலில் குறைகாண்பதாக ஆகிவிடக் கூடியதாக இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள் என்று கூறியிருக்கும் பொழுது, எவ்வாறு பஜர் தொழுகையினுடைய சுன்னத்தான 2 ரக்அத்துக்களை அதைவிட அதிகமாகத் தொழ முயற்சி செய்ய மாட்டோமோ அதைப் போலவே, இந்தத் தராவீஹ் தொழுகையிலும் 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழ முயற்சி செய்தல் கூடாது. இவ்வாறு அல்லாமல், 11 ரக்அத்துக்களுக்கு மேலாக நாம்தொழுதோமென்றால் இஸ்லாத்தில் ஒரு புதிய நூதனத்தைக் (பித்அத்தைக்) கடைபிடித்தவர்களாவோம், அவ்வாறு 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுது வருபவர்கள் சட்டம் தெரியாதவர்களாக இருப்பின், அவர்களை அழைத்து சட்டத்தைக் கூறுங்கள், அல்லது அவர்களது மன இச்சையைப் பின்பற்றாதிருங்கள். இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது, ஜமாத்துடன் பர்ளுத் தொழுகையை நிறைவேற்றியதற்கு ஒப்பாகும். இந்த இரவு தராவீஹ் தொழுகையை ஆரம்பித்து வைத்து, அதை மூன்று நாட்கள் தொடர்ந்து ஜமாத்தாக முஹம்மது (ஸல்) அவர்கள் தொழுது வந்தார்கள். மேலும், இந்தத் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்தும் தொழாமல் இடையிலேயே விட்டு விட்டதன் காரணமென்னவெனில், இது என்னுடைய சமுதாயத்தினர் மீது பர்ளான தொழுகையைப் போல கடமையாகி விடுமோ எனப் பயந்தே தான் அதைக் கைவிட்டேன் என முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பின்பு வந்த உமர் (ரலி) அவர்கள் இந்த தராவீஹ் தொழுகையை கூட்டுத் தொழுகையாக நடத்தும்படி உபை பின் கஃப் (ரலி) அவர்களையும், தமீம் அத்தாரி (ரலி) அவர்களையும் ஏவினார்கள். மேலே உள்ள ஹதீஸின் அடிப்படையில் 11 ரக்அத்துத் தொழுகையாகவே தொழும்படி அவர்கள் கட்டளையிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (நஸீரத்தீன் அல்பானி, ஸலாத்துத் தராவீஹ் பக்.25).
4. உம்ராச் செய்தல் :
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வது, ஹஜ்ஜுச் செய்ததன் கூலிக்குச் சமமானது. (முஸ்லிம்)
ரமளான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன மற்றும் நரகத்தின் வாசல்கள் பூட்டப்படுகின்றன. மற்றும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. மேலும், இந்த மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையாக உள்ள நாட்களில் லைலத்துல் கத்ர் என்ற இரவு ஒன்று வருகின்றது, அ (ந்த இரவான)தில் செய்கின்ற அமல்கள், தொழுகைகள், ஆயிரம் மாதங்கள் அமல்கள் செய்த நன்மையைப் பெற்றுத்தரக் கூடியதாக இருக்கின்றது. அந்த இரவில் யாரொருவர் இறைவனுடைய நற்கூலியை எதிர்பார்த்து இறைவனை வணங்குகின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இந்த இரவு ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் வருகின்றது, அப்பொழுது கீழ்க்கண்ட துஅவை அதிகமதிகம் ஓதிக் கொள்வது சிறப்பானது :
அல்லாஹும்ம இன்னக்க அஃபுஉன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ!
யா அல்லாஹ் நீ மன்னிப்பவனாக இருக்கின்றாய்! மன்னிப்பை விரும்பக் கூடியவனாக இருக்கின்றாய்! எனவே, என்னை மன்னித்தருள்வாயாக! (திர்மிதி மற்றும் இப்னு மாஜா).
Tamil Islamic Library
ரமலானின் சிறப்புக்கள்!
நோன்பு என்பது தொழுகை என்ற கடமையை விட வேறுபட்டதாக இருக்கின்றது, தொழுகை என்பது ஒரு குறிப்பிட்ட செய்முறைகளைக் கொண்டதாகவும், இரவும் பகலும் அதற்கென குறிப்பிடப்பட்டதொரு நேரங்களைக் கொண்டதாகவும் இருக்கின்றது. ஒருவர் நோன்பாளியாக இருக்கும் பொழுது, அந்த நோன்பாளியினுடைய அன்றாடத் தேவைகளான உணவு மற்றும் குடிப்பு ஆகியவற்றை இறைவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அவற்றிலிருந்து அவரை விலக்கி வைத்து, இறைவனுடையநற்கூலியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தத் தவிர வேறெதற்காகவும் அவர் நோன்பு நோற்கவில்லை. இதைப் பற்றி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அனைத்து மனிதர்களும் செய்கின்ற அனைத்து நற்செயல்களும் அவரவர்களுக்குரியது, ஆனால் நோன்பதை தவிர ( இங்கு அல்லாஹ் நோன்பை எனக்குரியது என்று கூறி இருப்பதன் காரணம், இறைவன் கட்டளையிட்டுள்ள அனைத்துச் செயல்களும் தொழுகை, ஜக்காத், ஹஜ் போன்ற செயல்களை பிறர் கண்படும்படி மனிதன் செய்ய வேண்டியதாக இருக்கின்றது, ஆனால் நோன்பு அவ்வாறல்ல, ஒருவர் நோன்பாளியா இல்லையா என்பதை இறைவன் ஒருவன் தான் அறியக் கூடியவனாக இருக்கின்றான் என்பதனால், அது எனக்குரியது என்று இறைவன் இங்கு குறிப்பிடுகின்றான்),மேலும் அதற்கு நானே கூலி வழங்குவேன் (அல்லாஹ் தான் அனைத்து நற்செயல்களுக்கும், அமல்களுக்கும் கூலி வழங்கக் கூடியவன் மற்றும் அந்த அமல்களுக்கு 10 முதல் 700 மடங்கு நற்கூலிகளை வழங்குகின்றான், ஆனால் நோன்பிற்கு அவன் கணக்கின்றி வழங்குகின்றான்). நோன்பு என்பது ஒரு கேடயமாகும், எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் பொழுது, எந்தக் கெட்ட வார்த்தையையும் பேசாமலும், உரக்கச்சத்தமிட்டுப் பேசாமலும் இருக்கட்டும் என்று கூறினார்கள். மேலும் நீங்கள் நோன்பு நோற்றிருக்கின்ற நிலையில் யாராவது உங்களுக்குத் தீங்கிழைக்க வந்தாலோ அல்லது உங்களிடம் சண்டையிட வந்தாலோ அவரிடம், நான் நோன்பாளியாக இருக்கின்றேன் என்று கூறி விடட்டும், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறி விட்டு, என்னுடைய உயிர் எவன் கை வசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, நோன்பாளியின் வாயிலிருந்து வரக் கூடிய தூநாற்றமானது, இறைவனுடைய பார்வையில் கஸ்தூரியின் மணத்தை விட இனிமை நிறைந்ததாக இருக்கின்றது.
நோன்பாளிக்கு மகிழ்ச்சி தரக் கூடிய தருணங்கள் இரண்டு இருக்கின்றன : (மாலை நேரத்தில்) அவன் தன்னுடைய நோன்பைத் திறக்கும் நேரத்திலும், மற்றும் அவன் உயிர் கொடுத்து எழுப்பக் கூடிய மறுமை நாளிலே தான் நோன்பு நோற்றதிற்காக இறைவனுடைய (சங்கையான முகத்தை நோக்கி) சந்திப்பை பெற்றுக் கொள்ளும் பொழுதும். (புகாரி, முஸ்லிம்)
மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அனைத்து மனிதர்களின் நல்லறங்களும் 10 லிருந்து 700 மடங்கு பெருகக் கூடியதாக இருக்கும், நோன்பைத் தவிர, அது எனக்குரியது, அதற்கான நன்மையை நானே வழங்குவேன். நோன்பாளி என்னுடைய உவப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அவன் தன்னுடைய விருப்பங்களை விட்டொதுங்கி இருந்தான், என்று அல்லாஹ் கூறுகின்றான். (திர்மிதி)
மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(யாரொருவர் ரமளான் மாதத்தில்) நோன்பை (நோற்று) இஸ்லாத்தின் ஒரு தூணாக ஏற்றுக் கொண்டாரோ) மற்றும் அதற்கான கூலியை எதிர்பார்த்தாரோ, அவருடைய முந்தைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்து அழித்து விடுகின்றான். (புகாரி, முஸ்லிம் மற்றும் பல.. ..)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :
தினமும் ஐவேளை தொழுவது, ஒரு ஜும்ஆவுக்கும் அடுத்து ஜும்ஆவுக்கும் இடைப்பட்ட காலங்களில், ரமளானுக்கும் அதனை அடுத்து வரக்கூடிய ரமளானுக்கும் இடைப்பட்ட காலங்களில் செய்த பெரிய பாவங்களைத் தவிர்த்து உள்ள ஏனைய அனைத்து பாவங்களையும் (இறைவன்) மன்னித்து விடுகின்றான். (முஸ்லிம்).
மேலும் அல்லாஹ் கூறுவதாக முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
அனைத்து மனிதர்களுடைய நற்செயல்களும் அவரவர்களுக்குரியது, நோன்பைத் தவிர, நோன்பானது எனக்குரியது, அதற்குரிய கூலியை நானே வழங்குவேன். நோன்பு என்பது ஒரு கேடயமாகும் (நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புத் தரக் கூடியதாகவும், தீய செயல்களைச் செய்வதனின்றும் தடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது). உங்களில் யாராவது நோன்பு நோற்றிருப்பாரேயானால் அவர் தங்கள் மனைவிமார்களிடம் உடலுறவு கொள்வதனின்றும் தவிர்ந்து கொள்ளட்டும். மற்றும் வாக்குவாதம் செய்து சண்டையிட்டுக் கொள்வதனின்றும் தவிர்ந்து கொள்ளட்டும். யாராவது உங்களிடம் சண்டையிட அல்லது வாக்குவாதம் செய்ய வருவாரேயானால், அவரிடம் நான் நோன்பாளியாக இருக்கின்றேன் என்று கூறி விடுங்கள். யாருடைய கைவசம் என்னுடைய உயிர் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, நோன்பாளியின் வாயிலிருந்து வரக் கூடிய தூநாற்றமானது, இறைவனுடைய பார்வையில் கஸ்தூரியின் மணத்தைவிட இனிமை நிறைந்ததாக இருக்கின்றது. நோன்பாளிக்கு இரண்டு சந்தோசங்கள் இருக்கின்றன, ஒன்று அவன் மாலை நேரத்தில் அவனது நோன்பைத் திறக்கும் சமயத்திலும், மற்றும் உயிர் கொடுத்து எழுப்பப்படக் கூடிய நாளில், நோன்பு நோற்ற நிலையில் தன்னுடைய இறைவனைச் சந்திக்கும் நாளிலும்.
மறுமை நாளின் பொழுது, யாரொருவர் தினமும் குர்ஆனை ஓதினாரோ அவருக்காகவும், அதனைத் தன் வாழ்விலே செயல்படுத்தினாரே அவருக்காவும், திருமறைக் குர்ஆனானது இறைவனிடம் அந்த மனிதனுக்காக வாதடக் கூடியதாக இருக்கும். அதனைப் போலவே, நோன்பை நோற்ற மனிதனுக்காக அந்த நோன்பானது இறைவனிடம் அந்த மனிதனுக்காக வாதாடக் கூடியதாக இருக்கும். முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
யாரொருவர் நோன்பை (நோற்று), குர்ஆனை (தன் வாழ்வில் கடைபிடித்தாரோ) அவருக்காக மறுமை நாளிலே இவை இரண்டும் அல்லாஹ்வினிடத்தில் வாதாடக் கூடியதாக இருக்கும். நோன்பு தன் இறைவனிடத்திலே கூறும், என்னுடைய ரப்பே! நான் அவன் உண்ணுவதிலிருந்து அவனைத் தடுத்தேன், அவனது இச்சைகளை அடக்கினேன், எனவே இவனுக்காக வாதாடுவதற்கு எனக்கு அனுமதியளிப்பாயாக! என்று இறைவனிடம் நோன்பு வாதாடும். திருமறைக்குர்ஆனானது இறைவனிடம் கூறும், என்னுடைய ரப்பே! அவன் (திருமறையை ஓதுவதன் மூலம்) தூங்குவதிலிருந்தும் அவனைத் தடுத்தேன், எனவே அவனுக்காக வாதாடுவதற்காக எனக்கு அனுமதியளிப்பாயாக! என்று கேட்கும். பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இந்த மனிதனுக்கு இறைவனிடம் வாதாடுவதற்காக, நோன்பிற்கும், குர்ஆனிற்கும் இறைவன் அனுமதியளித்து விடுவான். (இமாம் அஹ்மது)
நோன்பு என்பது இஸ்லாத்தின் ஒரு தூணாகும். இது இஸ்லாத்தில் அடிப்படைகளில் அமைந்த, பிரித்து விட முடியாததொரு கட்டாயக் கடமையாகும். யாரொருவர் இதனை இஸ்லாத்தின அடிப்படைகளில் அமைந்ததொரு தூண் என்ற ஈமான் கொண்டு – நம்பிக்கை கொள்ள மறுக்கின்றாரோ அவர் இஸ்லாத்தை மறுத்து விட்டவராகின்றார், இந்த நிலையிலேயே அவர் மரணமடைந்து விடுவாராகில், அவரை முஸ்லிம்களின் அடக்கத்தளத்தில் அவரை அடக்கம் செய்வித்தல் கூடாது.
Tamil Islamic Library
ரமலான் ஆசிர்வதிக்கப்பட்ட மாதம்!!
ரமளான் என்ற நம்முடைய மரியாதைக்குரிய விருந்தாளி வருடம் ஒரு முறை நம்மை நோக்கி வருகின்றது. இந்த மாதம் தான் இறைவனிடமிருந்து நமக்கு கருணையையும் மற்றும் மன்னிப்பையும் பெற்றுத் தரக் கூடிய மாதமாக இருக்கின்றது. நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த மாதத்தின் வருகையைப் பற்றிய செய்தியை மக்களுக்கு இவ்வாறு அறிவிப்பவர்களாக இருந்தார்கள் :
அறிந்து கொள்ளுங்கள்! உங்களை நோக்கி ஒரு மிகப்பெரிய ஆசிர்வதிக்கப்பட்ட மாதம் ஒன்று வந்து இருக்கின்றது. அல்லாஹ் அந்த மாதத்தில் நோன்பு நோற்பதை உங்களுக்கு கடமையானதொன்றாக ஆக்கி வைத்திருக்கின்றான், மற்றும் அதன் இரவுத் தொழுகையை விரும்பத்தக்கதாக ஆக்கி இருக்கின்றான். வந்திருக்கக்கூடிய கூடிய அந்த மாதத்தில் ஒரு இரவு இருக்கின்றது, அந்த ஒரு இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது (அதாவது, அந்த ஒரு இரவில் செய்யக் கூடிய வணக்கமானது, அதே வணக்கத்தை இடைவிடாது ஆயிரம் மாதங்கள் செய்வதற்குச் சமமாக இருக்கின்றது.) அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஒருவர் அந்த மாதத்தில் ஒரு நல்லதைச் செய்து கொள்ளட்டும், அந்த நன்மையான அந்த நல்லகாரியத்தைச் செய்பவர் ஒரு கடமையாக்கப்பட்டதொரு அமலைச் செய்தவராகக் கருதப்படுவார், மேலும் அந்த மாதத்தில் யாரொருவர் கடமையானதொரு அமலைச் செய்கின்றாரோ அவர் பிற மாதத்தில் அதே அமலைச் செய்ததைப் போல 70 மடங்கு கூலியைப் பெற்றுக் கொள்வார். இது ஒரு சகிப்புத் தன்மை மிக்கதொரு மாதம், அந்த சகிப்புத் தன்மைக்குரிய கூலி, இறைவன் வழங்கவிருக்கும் சொர்க்கமேயாகும். மேலும் இது ஒரு சமத்துவமிக்கதொரு மாதமாகும், இந்த மாதத்தில் இறைநம்பிக்கையாளர்கள் செய்யக் கூடிய அமல்களின் காரணமாக அவர்களது (மறுமைப் பயணத்திற்கான தேவைகள்) நன்மைகள் பன்மடங்காகப் பெருகுகின்றன. யாரொருவர் நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கு உணவளிக்கின்றாரோ அல்லது குடிப்பதற்குப் பானங்கள் வழங்குகின்றாரோ, அவருக்கு அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, அவரது தோள்கள் நரக நெருப்பில் கருகுவதனின்றும் காக்கப்படுகின்றன, மேலும், அந்த நோன்பு திறப்பதற்காக ஒருவர் நோன்பாளிக்கு உணவளிப்பதனால், நோன்பு நோற்றவருக்கு வழங்கப்பட இருக்கின்ற நன்மைகளில் எதுவொன்றும் குறைத்து விடவும் மாட்டாது, அவருக்குரிய கூலியே அவருக்கு எந்தவித குறையும் இன்றி வழங்கப்படும். நம் அனைவராலும் நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கு உணவளிக்க முடியாதே என்று மக்கள் தங்களது இயலாமையின் காரணமாக மன வேதனையுடன் கூறுவதைக் காண்கின்றோம்.
ஆனால் இறைவன் கூறுகின்றான், நோன்பாளி நோன்பு திறப்பதற்காக நீங்கள் கொடுக்கும் ஒரு தம்ளர் பானம் – அதாவது பால், தண்ணீர், அல்லது ஒரு பேரீச்சம் பழத்திற்குக் கூட அதற்கான கூலியை இறைவன் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றான். உங்களில் யாரொருவர் ஒரு நோன்பாளி நோன்பு திறப்பதற்காக முழு உணவு வழங்குகின்றாரோ அல்லது பானம் வழங்குகின்றாரோ, அத்தகைய நபர்களுக்கு மறுமை நாளிலே யாருடைய உதவியும் கிடைக்காத அந்த நாளிலே இறைவன் தன்னுடைய கவ்தர் தடாகத்திலே நீரருந்தச் செய்வான், அந்த கவ்தர் தாடகத்திலே நீரந்திய ஒருவருக்கு அவர் சொர்க்கச் சோலையிலே புகும் வரைக்கும் தாகமென்பதே எடுக்காது. இந்த ரமளான் மாதத்தில், நீங்கள் அநேகமான நான்கு கட்டளைகளைக் கட்டாயமாகப் பின்பற்றி வேண்டியதிருக்கும். அதில் இரண்டு கட்டளைகள் உங்களது இறைவனுடைய நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள அவனுக்கு உகந்தவாறு செயல்படுதல், அடுத்த இரண்டு மிகவும் இன்றியமையாத அமல்களாகும். முதல் இரண்டும் நீங்கள் எடுத்துக் கொண்ட ஈமானின் பிரகாரம் – அந்தக் கலிமாவின் பிரகாரம் உங்களை இறைவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் பட்டவர்களாக நடத்தல் மற்றது, இறைவனிடம் பாவ மன்னிப்பு வேண்டுதல். அடுத்து உள்ள இன்றியமையாத கடமைகளாவன : சொர்க்கச் சோலைகளில் நம்மை சேர்த்து விடுவதற்கு இறைவனிடம் மன்றாடுதல் மற்றும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் ஆகியவைகளாகும். (பின் குஸைமா)
இந்த ரமளான் மாதத்து நோன்பு என்பது மற்ற கடமைகளைப் போல பிறரது கண்ணுக்குத் தெளிவாக அறிந்து கொள்ளக் கூடியதொரு அமலல்ல. இதனால் தான் இறைவன் கூறுகின்றான் : இந்த நோன்பானது எனக்குரியது, என்று கூறுகின்றான். ஏனென்றால் இந்தக் கடமையாக்கப்பட்ட நோன்பானது, நோன்பை நோற்கின்றவருக்கு மட்டுமே அறிந்திருக்கக் கூடிய தனிப்பட்டதொரு அமலாகும். நோன்பு வைத்திருக்கின்றவர் நோன்பாளியா அல்லது நோன்பாளி இல்லையா என்பதை அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்தவனாக இருக்கின்றான். முற்றும் தொழுகை, ஹஜ், ஜக்காத் போன்றவற்றை மற்ற அனைவராலும் அறிந்து கொள்ள இயலுவது போல, நோன்பை மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது.
நோன்பானது ஒரு மனிதனுடைய சகிப்புத் தன்மைக்கு வைக்கப்படும் தேர்வாக இருந்து கொண்டிருக்கின்ற அதே வேளை, சுய ஒழுக்கத்தின் அடிப்படையில் நோன்பானது முஸ்லிம்களிடையே சமத்துவத்தைப் போதிக்கின்றது, அதன் மூலம் அவர்கள் ஒரே நேரத்தில் நோன்பை வைக்கின்றார்கள், மற்றும் ஒரே நேரத்தில் நோன்பைத் திறக்கின்றார்கள், நோன்பு வைக்கக் கூடிய அவர்கள் ஏழையாக இருந்தாலும் அல்லது பணக்காரர்களாக இருந்தாலும் சரியே, அல்லது அவர்கள் வெள்ளை நிறமுடையவராகவோ அல்லது கறுப்பு நிறமுடையவராவோ இருந்தாலும் சரியே. இது இஸ்லாத்தில் மட்டுமே இருக்கின்ற குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும். ஓருவர் நோன்பு நோற்றிருக்கும் பொழுது அவர் பசியை உணர்கின்றார், அவர் உணர்கின்ற அந்தப் பசி மற்றும் தாகமானது, அல்லாஹ்வினுடைய அந்த அன்பைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லாமல், வேறு எதற்காகவும் அந்த நோன்பை அது தரும் பலவீனத்தை, தாகத்தை, பசியைப் பொறுத்துக் கொள்பவராக அவர் இல்லை.
Tamil Islamic Library
அத்தியாயம்-11.முஹம்மத் (ஸல்) இறுதி இறைத்தூதர்
முஸ்லிம்கள், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என நம்புகின்றார்கள். இதைப்பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அது குறித்து சில விளக்கங்களைத் தந்தாக வேண்டும்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என நம்புவது, இறைவன் தனது கருணக் கதவுகளை அடைந்து விட்டான் என்றோ, தனது கருணையை குறைத்துக் கொண்டான் என்றோ பொருளாகாது. அதுபோலவே அது மார்க்கத்தில் அறிஞர்களும், சிந்தனையாளர்களும் தோன்றுவதைக் கட்டுப்படுத்துவதுமில்லை. அல்லது ஆன்மீகத் தலைவர்கள் தோன்றுவதைத் தடை செய்திடுவதுமில்லை. அல்லது இறையுணர்வும், இறையச்சமும் நிறைந்த சான்றோர்கள் உருவாகிடுவதை மட்டுப்படுத்துவதுமில்லை. பெருமானார் (ஸல்) அவர்களை இறுதி தூதர் என்றாக்கியதின் மூலம் அரபு மக்களின் மீது மட்டும் தனது கருணையைப் பொழிந்து ஏனையவர்களின் மீது கருணை காட்டுவதை இறைவன் நிறுத்திக்கொண்டான் என்றோ பொருளாகாது. இறைவன் எந்த இனத்தின் மீதும், எந்த நிறத்தார் மீதும் தனியான அன்பும் ஏனையவர்கள் மீதுபாரபட்சமும் பாராட்டுபவனல்ல. அதேபோல் இறைவன் ஒரு தலைமுறையினரிடம் தனியான அன்பும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடம் சிறப்பான கருணையையும் காட்டிவிட்டு ஏனையவரைப் புறக்கணிப்பவனுமல்ல. Continue reading