நோன்பு என்பது தொழுகை என்ற கடமையை விட வேறுபட்டதாக இருக்கின்றது, தொழுகை என்பது ஒரு குறிப்பிட்ட செய்முறைகளைக் கொண்டதாகவும், இரவும் பகலும் அதற்கென குறிப்பிடப்பட்டதொரு நேரங்களைக் கொண்டதாகவும் இருக்கின்றது. ஒருவர் நோன்பாளியாக இருக்கும் பொழுது, அந்த நோன்பாளியினுடைய அன்றாடத் தேவைகளான உணவு மற்றும் குடிப்பு ஆகியவற்றை இறைவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அவற்றிலிருந்து அவரை விலக்கி வைத்து, இறைவனுடையநற்கூலியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தத் தவிர வேறெதற்காகவும் அவர் நோன்பு நோற்கவில்லை. இதைப் பற்றி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அனைத்து மனிதர்களும் செய்கின்ற அனைத்து நற்செயல்களும் அவரவர்களுக்குரியது, ஆனால் நோன்பதை தவிர ( இங்கு அல்லாஹ் நோன்பை எனக்குரியது என்று கூறி இருப்பதன் காரணம், இறைவன் கட்டளையிட்டுள்ள அனைத்துச் செயல்களும் தொழுகை, ஜக்காத், ஹஜ் போன்ற செயல்களை பிறர் கண்படும்படி மனிதன் செய்ய வேண்டியதாக இருக்கின்றது, ஆனால் நோன்பு அவ்வாறல்ல, ஒருவர் நோன்பாளியா இல்லையா என்பதை இறைவன் ஒருவன் தான் அறியக் கூடியவனாக இருக்கின்றான் என்பதனால், அது எனக்குரியது என்று இறைவன் இங்கு குறிப்பிடுகின்றான்),மேலும் அதற்கு நானே கூலி வழங்குவேன் (அல்லாஹ் தான் அனைத்து நற்செயல்களுக்கும், அமல்களுக்கும் கூலி வழங்கக் கூடியவன் மற்றும் அந்த அமல்களுக்கு 10 முதல் 700 மடங்கு நற்கூலிகளை வழங்குகின்றான், ஆனால் நோன்பிற்கு அவன் கணக்கின்றி வழங்குகின்றான்). நோன்பு என்பது ஒரு கேடயமாகும், எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் பொழுது, எந்தக் கெட்ட வார்த்தையையும் பேசாமலும், உரக்கச்சத்தமிட்டுப் பேசாமலும் இருக்கட்டும் என்று கூறினார்கள். மேலும் நீங்கள் நோன்பு நோற்றிருக்கின்ற நிலையில் யாராவது உங்களுக்குத் தீங்கிழைக்க வந்தாலோ அல்லது உங்களிடம் சண்டையிட வந்தாலோ அவரிடம், நான் நோன்பாளியாக இருக்கின்றேன் என்று கூறி விடட்டும், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறி விட்டு, என்னுடைய உயிர் எவன் கை வசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, நோன்பாளியின் வாயிலிருந்து வரக் கூடிய தூநாற்றமானது, இறைவனுடைய பார்வையில் கஸ்தூரியின் மணத்தை விட இனிமை நிறைந்ததாக இருக்கின்றது.
நோன்பாளிக்கு மகிழ்ச்சி தரக் கூடிய தருணங்கள் இரண்டு இருக்கின்றன : (மாலை நேரத்தில்) அவன் தன்னுடைய நோன்பைத் திறக்கும் நேரத்திலும், மற்றும் அவன் உயிர் கொடுத்து எழுப்பக் கூடிய மறுமை நாளிலே தான் நோன்பு நோற்றதிற்காக இறைவனுடைய (சங்கையான முகத்தை நோக்கி) சந்திப்பை பெற்றுக் கொள்ளும் பொழுதும். (புகாரி, முஸ்லிம்)
மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அனைத்து மனிதர்களின் நல்லறங்களும் 10 லிருந்து 700 மடங்கு பெருகக் கூடியதாக இருக்கும், நோன்பைத் தவிர, அது எனக்குரியது, அதற்கான நன்மையை நானே வழங்குவேன். நோன்பாளி என்னுடைய உவப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அவன் தன்னுடைய விருப்பங்களை விட்டொதுங்கி இருந்தான், என்று அல்லாஹ் கூறுகின்றான். (திர்மிதி)
மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(யாரொருவர் ரமளான் மாதத்தில்) நோன்பை (நோற்று) இஸ்லாத்தின் ஒரு தூணாக ஏற்றுக் கொண்டாரோ) மற்றும் அதற்கான கூலியை எதிர்பார்த்தாரோ, அவருடைய முந்தைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்து அழித்து விடுகின்றான். (புகாரி, முஸ்லிம் மற்றும் பல.. ..)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :
தினமும் ஐவேளை தொழுவது, ஒரு ஜும்ஆவுக்கும் அடுத்து ஜும்ஆவுக்கும் இடைப்பட்ட காலங்களில், ரமளானுக்கும் அதனை அடுத்து வரக்கூடிய ரமளானுக்கும் இடைப்பட்ட காலங்களில் செய்த பெரிய பாவங்களைத் தவிர்த்து உள்ள ஏனைய அனைத்து பாவங்களையும் (இறைவன்) மன்னித்து விடுகின்றான். (முஸ்லிம்).
மேலும் அல்லாஹ் கூறுவதாக முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
அனைத்து மனிதர்களுடைய நற்செயல்களும் அவரவர்களுக்குரியது, நோன்பைத் தவிர, நோன்பானது எனக்குரியது, அதற்குரிய கூலியை நானே வழங்குவேன். நோன்பு என்பது ஒரு கேடயமாகும் (நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புத் தரக் கூடியதாகவும், தீய செயல்களைச் செய்வதனின்றும் தடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது). உங்களில் யாராவது நோன்பு நோற்றிருப்பாரேயானால் அவர் தங்கள் மனைவிமார்களிடம் உடலுறவு கொள்வதனின்றும் தவிர்ந்து கொள்ளட்டும். மற்றும் வாக்குவாதம் செய்து சண்டையிட்டுக் கொள்வதனின்றும் தவிர்ந்து கொள்ளட்டும். யாராவது உங்களிடம் சண்டையிட அல்லது வாக்குவாதம் செய்ய வருவாரேயானால், அவரிடம் நான் நோன்பாளியாக இருக்கின்றேன் என்று கூறி விடுங்கள். யாருடைய கைவசம் என்னுடைய உயிர் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, நோன்பாளியின் வாயிலிருந்து வரக் கூடிய தூநாற்றமானது, இறைவனுடைய பார்வையில் கஸ்தூரியின் மணத்தைவிட இனிமை நிறைந்ததாக இருக்கின்றது. நோன்பாளிக்கு இரண்டு சந்தோசங்கள் இருக்கின்றன, ஒன்று அவன் மாலை நேரத்தில் அவனது நோன்பைத் திறக்கும் சமயத்திலும், மற்றும் உயிர் கொடுத்து எழுப்பப்படக் கூடிய நாளில், நோன்பு நோற்ற நிலையில் தன்னுடைய இறைவனைச் சந்திக்கும் நாளிலும்.
மறுமை நாளின் பொழுது, யாரொருவர் தினமும் குர்ஆனை ஓதினாரோ அவருக்காகவும், அதனைத் தன் வாழ்விலே செயல்படுத்தினாரே அவருக்காவும், திருமறைக் குர்ஆனானது இறைவனிடம் அந்த மனிதனுக்காக வாதடக் கூடியதாக இருக்கும். அதனைப் போலவே, நோன்பை நோற்ற மனிதனுக்காக அந்த நோன்பானது இறைவனிடம் அந்த மனிதனுக்காக வாதாடக் கூடியதாக இருக்கும். முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
யாரொருவர் நோன்பை (நோற்று), குர்ஆனை (தன் வாழ்வில் கடைபிடித்தாரோ) அவருக்காக மறுமை நாளிலே இவை இரண்டும் அல்லாஹ்வினிடத்தில் வாதாடக் கூடியதாக இருக்கும். நோன்பு தன் இறைவனிடத்திலே கூறும், என்னுடைய ரப்பே! நான் அவன் உண்ணுவதிலிருந்து அவனைத் தடுத்தேன், அவனது இச்சைகளை அடக்கினேன், எனவே இவனுக்காக வாதாடுவதற்கு எனக்கு அனுமதியளிப்பாயாக! என்று இறைவனிடம் நோன்பு வாதாடும். திருமறைக்குர்ஆனானது இறைவனிடம் கூறும், என்னுடைய ரப்பே! அவன் (திருமறையை ஓதுவதன் மூலம்) தூங்குவதிலிருந்தும் அவனைத் தடுத்தேன், எனவே அவனுக்காக வாதாடுவதற்காக எனக்கு அனுமதியளிப்பாயாக! என்று கேட்கும். பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், இந்த மனிதனுக்கு இறைவனிடம் வாதாடுவதற்காக, நோன்பிற்கும், குர்ஆனிற்கும் இறைவன் அனுமதியளித்து விடுவான். (இமாம் அஹ்மது)
நோன்பு என்பது இஸ்லாத்தின் ஒரு தூணாகும். இது இஸ்லாத்தில் அடிப்படைகளில் அமைந்த, பிரித்து விட முடியாததொரு கட்டாயக் கடமையாகும். யாரொருவர் இதனை இஸ்லாத்தின அடிப்படைகளில் அமைந்ததொரு தூண் என்ற ஈமான் கொண்டு – நம்பிக்கை கொள்ள மறுக்கின்றாரோ அவர் இஸ்லாத்தை மறுத்து விட்டவராகின்றார், இந்த நிலையிலேயே அவர் மரணமடைந்து விடுவாராகில், அவரை முஸ்லிம்களின் அடக்கத்தளத்தில் அவரை அடக்கம் செய்வித்தல் கூடாது.
Tamil Islamic Library