செயல்படச் செய்யும் திருமறை.
திருக்குர்ஆன் தரும் அறிவின் பிரிதொரு தனித்தன்மை செயல்பட வேண்டும் என்ற உணர்வையும், உந்துதலையும் தருவதாகும். அது செயல்படத் தூண்டும் ஆக்கப்பூர்வமான அறிவாகும். அது மனதில் செயல்பட வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துவது.
திருமறை வசனங்களின் அமைப்பும், அவற்றின் போதனைகளும் எப்படி மனிதர்களை செயல்படும் பேரியக்கங்களாக மாற்றியது என்பதற்கு வரலாறு சான்று பகருகின்றது. அதுபோலவே திருமறையும் பல அத்தாட்சிகளைத் தருகின்றது.
பெருமானார் (ஸல்) அவர்கள் தனது இறைச்செய்தியின்பால் மக்களை அழைத்திடும்போது அவர்களுக்கு இருந்த ஒரே சக்தி திருக்குர்ஆனே ஆகும். அவர்கள் பெற்றிருந்த அறிவெல்லாம் திருமறை தந்த கருத்துக் கருவூலங்களே!
திருக்குர்ஆன் தரும் செயல்திறன் அளப்பரியது. தடுத்து நிறுத்த முடியாதது. Continue reading