அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்கும் போது….

1403. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி :5232 உக்பா பின் ஆமிர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்கும் போது….

தங்களின் தேவையை நிறைவேற்ற பெண்கள் வெளியே செல்தல்.

1402. பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி(ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் இப்னு கத்தாப் (ரலி) பார்த்துவிட்டு ‘சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!” என்று கூறினார்கள். சவ்தா (ரலி) உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா (ரலி) வீட்டினுள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) என்னிடம் இவ்வாறெல்லாம் கூறினார்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ (வேத வெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

புஹாரி : 4795 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on தங்களின் தேவையை நிறைவேற்ற பெண்கள் வெளியே செல்தல்.

சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.

1401. (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 6247 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.

‘அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள்’ என சிறப்பித்துக் கூறப்பட்ட நபித்தோழர் யார்?

கேள்வி எண்: 86. ‘அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள்’ என நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட நபித்தோழர் யார்? Continue reading

Posted in கேள்வி பதில் | 1 Comment

வேதக்காரர்களின் ஸலாமுக்கு எப்படி பதிலுரைப்பது?

1398. வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6258 அனஸ் இப்னு மாலிக் (ரலி).


1399. யூதர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் அவர்களில் சிலர் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதிலாக) ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6257 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).


1400. யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர். ‘வ அலைக்கு முஸ்ஸாமு வல்லஅனா” (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்” என்றார்கள். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?’ என்று கேட்டேன் அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் (‘அஸ்ஸாமு’ எனும் சொல்லைத் தவிர்த்து) ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என பதிலளித்து விட்டேன்” என்று கூறினார்கள்.

புஹாரி :6256 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on வேதக்காரர்களின் ஸலாமுக்கு எப்படி பதிலுரைப்பது?

ஒரு முஸ்லீமுக்கு பிற முஸ்லீமின் மீதுள்ள கடமை.

1397. ”ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1240 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஒரு முஸ்லீமுக்கு பிற முஸ்லீமின் மீதுள்ள கடமை.

வாகனத்தில் செல்பவர் நடப்பவருக்கு ஸலாம் கூறுதல்.

முகமன் கூறுதல். (ஸலாம்)

1396. சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) ஸலாம் சொல்லட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6234 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on வாகனத்தில் செல்பவர் நடப்பவருக்கு ஸலாம் கூறுதல்.

பிறர் வீட்டில் துவாரம் வழியாகப் பார்க்காதே.

1393. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது ‘என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது” என்று கூறினார்கள்.

புஹாரி : 6901 ஸஹ்ல் பின் ஸஆது(ரலி).

1394. ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையுடன்’ அல்லது ‘கூர்முனைகளுடன்’ அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரின் கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.

புஹாரி : 6242 அனஸ்(ரலி).

1395. உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6888 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on பிறர் வீட்டில் துவாரம் வழியாகப் பார்க்காதே.

பிறர் வீட்டில் நுழைய அனுமதி முறையாகக் கேட்டல்.

1392. என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், ‘யார் அது?’ என்று கேட்டார்கள்.அதற்கு நான், ‘நான்தான்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நான் நான் என்றால்…?’ என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.

புஹாரி : 6250 ஜாபிர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on பிறர் வீட்டில் நுழைய அனுமதி முறையாகக் கேட்டல்.

குர்ஆன் – அது என்ன?

வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறைச்செய்தியின் பதிவே திருக்குர்ஆன்!

முஹம்மத் (ஸல்) அவர்கள், தான் மனனம் செய்த இந்த இறைவசனங்களை தம்முடைய தோழர்களிடம் கூறினார்கள். பின்னர் அவர்களில் எழுதத் தெரிந்தவர்களைக் கொண்டு இறைவசனங்கள் எழுதி வைக்கப்பட்டன. பின்னர், அதனை முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளிலேயே சரிபார்த்து அங்கீகரித்தார்கள்!

திருக்குர்ஆன் 114 அத்தியாயங்களைக் கொண்டது. பல நூற்றாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் அதன் வசனங்களின் ஒரு சொல்கூட மாற்றம் கண்டதும் இல்லை. இனியும் காண முடியாத வகையில் இறைவனால் பரிபூரணமாக்கித் தரப்பட்டுள்ளது. எனவே, பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆன் எனும் இந்த இறைவேதம் தனித்தன்மை வாய்ந்த ஓர் அற்புதமே என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on குர்ஆன் – அது என்ன?