கண் திருஷ்டி, சூன்யம் பற்றி….

1411. நபி (ஸல்) அவர்கள், ‘கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே” என்று கூறினார்கள்.

புஹாரி :5740 அபூஹூரைரா (ரலி).

1412. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘பனூஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமை ஊட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ‘ஒரு நாள்’ அல்லது ‘ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், ‘இந்த மனிதரின் நோய் என்ன?’ என்று கேட்டார். அத்தோழர், ‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்ல, முதலாமவர் ‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?’ என்று கேட்டார். தோழர், ‘லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)” என்று பதிலளித்தார். அவர், ‘எதில் வைத்திருக்கிறான்?’ என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்” என்று பதிலளித்தார். அவர், ‘அது எங்கே இருக்கிறது?’ என்று கேட்க, மற்றவர், ‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ‘ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது. அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)” என்று கூறினார்கள்.

புஹாரி : 5763 ஆயிஷா (ரலி.)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on கண் திருஷ்டி, சூன்யம் பற்றி….

மூவரில் இருவர் ரகசியம் பேசுதல் கூடாது.

1409. நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6288 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) .

1410. நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும்வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6290 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on மூவரில் இருவர் ரகசியம் பேசுதல் கூடாது.

சிரமத்திலிருக்கும் அந்நியப் பெண்ணுக்கு உதவுதல்.

1408. என்னை ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து – நானே பேரீச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. (ஒரு நாள்) நான் என் தலை மீது பேரீச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். எனக்குத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக ‘இஃக், இஃக்’ என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து ‘(வழியில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தம் ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்” என்று கூறினேன். அதற்கு என் கணவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது” என்று கூறினார். (இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.

புஹாரி : 5224 அஸ்மாபின்த் அபூபக்கர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on சிரமத்திலிருக்கும் அந்நியப் பெண்ணுக்கு உதவுதல்.

மைல் கல்லையும், சாம்பலாகிப் போகும் மரத்தையும் வணங்குவது எவ்விதத்தில் பகுத்தறிவாகும்?

உண்மையை உணர்ந்து கொண்ட உள்ளங்கள்! அவர்கள் அதே நம்பிக்கையில் நிலைத்திருக்க அல்லாஹ் அருள் புரிவானாக!!! படத்தை பெரிதுபடுத்தி படிக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

நன்றி: வசந்தம் மாத இதழ் குவைத்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மைல் கல்லையும், சாம்பலாகிப் போகும் மரத்தையும் வணங்குவது எவ்விதத்தில் பகுத்தறிவாகும்?

அல்லாஹ்வை போற்றுபவர், போற்றாதவர் இருவருக்குமான உவமைகளாக அல்லாஹ்வின் தூதர் கூறியது என்ன?

கேள்வி எண்: 87. தனது இறைவனை நினைவு கூறுபவனுக்கும், தனது இறைவனை நினைவு கூறாதவனுக்கும் உவமைகளாக நபி (ஸல்) அவர்கள் கூறியது என்ன? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on அல்லாஹ்வை போற்றுபவர், போற்றாதவர் இருவருக்குமான உவமைகளாக அல்லாஹ்வின் தூதர் கூறியது என்ன?

ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி….

1407. என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த ‘அலி’, (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், ‘அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று கூறினார்கள். இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் ‘ஹீத்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புஹாரி :4324 உம்முஸலமா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி….

சபையில் அமரும் ஒழுக்கம்.

1405. ‘நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 66 அபூ வாக்கித் அல்லைஸீ (ரலி).

1406. ஒருவர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு இவர் அந்த இடத்தில் அமர வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6269 இப்னு உமர் (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on சபையில் அமரும் ஒழுக்கம்.

வேதத்தையுடையோர் அனைவரும் சமமல்லர்!

2:41.இன்னும நான் இறக்கிய (வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி (ஒழுகி) வருவீர்களாக.

3:98.
“வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

3:21.
“நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும், மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

3:113.
(எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்;. வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்;. இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.

3:199. மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.

அல்குர்ஆன்

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வேதத்தையுடையோர் அனைவரும் சமமல்லர்!

சந்தேகம் நீங்க தன் மனைவி எனக் கூறுதல்.

1404. நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல்வரை வருவார்கள். உம்மு ஸலமா (ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்” எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள்.

புஹாரி : 2035 அலி பின் அல் ஹூஸைன் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on சந்தேகம் நீங்க தன் மனைவி எனக் கூறுதல்.

குர்ஆன் எதைக் குறித்துப் பேசுகின்றது?

இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட இறுதி இறைவாக்கே திருக்குர்ஆன்! இதுவே, ஒவ்வொரு முஸ்லிமுடைய நம்பிக்கை மற்றும் வாழ்வியல் நடைமுறையின் தோற்றுவாயாக அமைந்திருக்கின்றது. மனித இயல்போடு தொடர்புடைய ஒவ்வொரு பணபைக் குறித்தும் அது பேசுகின்றது.

பகுத்தறிவு, கொள்கை விளக்கம், வணக்கவழிபாடு, சட்டம் என்று அவற்றை பட்டையலிட்டுக் கொண்டே செல்ல முடியும். ஆனால், திருக்குர்ஆனின் அடிப்படைக் கொள்கை படைப்பாளனுக்கும், படைப்பினங்களுக்கும் இடையிலான உறவைக் குறித்தே!

அதேவேளை, ஒரு நல்ல சமுதாயம் உருவாகிடவும், மனித ஒழுங்குகள் சீர்பெறவும், சமநிலை பொருளாதாரம் நிலவவும் திருக்குர்ஆன் தெளிவான வழிமுறைகளைக் காட்டுகின்றது.

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on குர்ஆன் எதைக் குறித்துப் பேசுகின்றது?