2:41.இன்னும நான் இறக்கிய (வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி (ஒழுகி) வருவீர்களாக.
3:98. “வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
3:21. “நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும், மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
3:113. (எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்;. வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்;. இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
3:199. மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.
அல்குர்ஆன்