குர்ஆன் – அது என்ன?

வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறைச்செய்தியின் பதிவே திருக்குர்ஆன்!

முஹம்மத் (ஸல்) அவர்கள், தான் மனனம் செய்த இந்த இறைவசனங்களை தம்முடைய தோழர்களிடம் கூறினார்கள். பின்னர் அவர்களில் எழுதத் தெரிந்தவர்களைக் கொண்டு இறைவசனங்கள் எழுதி வைக்கப்பட்டன. பின்னர், அதனை முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளிலேயே சரிபார்த்து அங்கீகரித்தார்கள்!

திருக்குர்ஆன் 114 அத்தியாயங்களைக் கொண்டது. பல நூற்றாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் அதன் வசனங்களின் ஒரு சொல்கூட மாற்றம் கண்டதும் இல்லை. இனியும் காண முடியாத வகையில் இறைவனால் பரிபூரணமாக்கித் தரப்பட்டுள்ளது. எனவே, பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆன் எனும் இந்த இறைவேதம் தனித்தன்மை வாய்ந்த ஓர் அற்புதமே என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.