1393. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது ‘என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது” என்று கூறினார்கள்.
1394. ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையுடன்’ அல்லது ‘கூர்முனைகளுடன்’ அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரின் கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.
1395. உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.