குகை வாசிகள் மூவர் கதை.

1745. ”(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர். அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை விட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான். மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2215 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on குகை வாசிகள் மூவர் கதை.

நரகில் பெண்கள் அதிகம்.

1743. நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5196 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

1744. (பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5096 உஸாமா இப்னு ஸைத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on நரகில் பெண்கள் அதிகம்.

எவ்வாறு இதயங்கள் அமைதி பெறுகின்றன?

கேள்வி எண்: 104. எவ்வாறு இதயங்கள் அமைதி பெறுகின்றன என்று இறைவன் கூறுகிறான்? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on எவ்வாறு இதயங்கள் அமைதி பெறுகின்றன?

பிரார்த்தனையில் அவசரம் கூடாது.

1742. ”நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6340 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on பிரார்த்தனையில் அவசரம் கூடாது.

துன்பத்தின் போது….

1741. நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது ‘லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்” என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

புஹாரி : 6345 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on துன்பத்தின் போது….

இதோ உலக அழிவு உங்கள் கண் முன்னே!

1. சூரியன் சுருண்டு விடும் போது…
2. நட்சத்திரங்கள் ஒளி மங்கி விடும் போது…
3. மலைகள் பெயர்க்கப்பட்டு தூள் தூளாக சென்று விடும் போது…
4. பத்து மாத நிறை கர்ப்ப ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும் போது…
5. வன விலங்குகள் ஒன்று திரண்டு விடும் போது…
6. கடல்கள் எரித்து விடப்படும் போது…
7. ஆன்மாக்கள் ஒன்றிணைக்கப்படும் போது…
8,9. உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைகள் நீ எப்பாவத்திற்காகக் கொலை செய்யப்பட்டாய் என விசாரிக்கப்படும் போது…
10. செயல் பதிவேடுகள் விரிக்கப்படும் போது…
11. வானத்திரை அகற்றப்படும் போது…
12. நரகம் எரிக்கப்படும் போது…
13. சுவர்க்கம் அருகாமையில் கொண்டு வரப்படும் போது…
14. அப்போது ஒவ்வொரு மனிதனும் தான் என்ன கொண்டு வந்துள்ளான் என்பதை அறிந்துக் கொள்வான்.

அல்குர்ஆன்: ஸூரா அத்தக்வீர்

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இதோ உலக அழிவு உங்கள் கண் முன்னே!

சேவல்கள் கூவக் கேட்டால்….

1740. நீங்கள் சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (எனவே தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (எனவே தான் கத்துகிறது.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3303 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on சேவல்கள் கூவக் கேட்டால்….

களைப்பு நீங்க திக்ர்.

1739. திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். உடனே, ஃபாத்திமா அவர்கள் (நபி – ஸல் – அவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கி வரச்) சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆயிஷா (ரலி) அவர்களைத் தாம் அங்கே கண்டார். எனவே, (தாம் வந்த நோக்கத்தை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா தெரிவித்தா. நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது ஆயிஷா (ரலி) ஃபாத்திமா வந்ததைத் தெரிவித்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்து நிற்கப் போனேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் (இருவரும்) உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். பிறகு, ‘நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய (உதவி) தனை விடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத் தரட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்கையில் முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன்’ என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ் – அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும் என்று கூறினார்கள்.

புஹாரி :3705 அலீ (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on களைப்பு நீங்க திக்ர்.

உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.

1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்”.

புஹாரி :247 பராவு இப்னு ஆஸிப் (ரலி) .

1735. நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ª ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.

(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6320 அபூஹுரைரா (ரலி).

1736. நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்து வந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்து விடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7383 இப்னு அப்பாஸ் (ரலி).

1737. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.

(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும்
மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.

புஹாரி :6398 அபூமூஸா (ரலி).

1738. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப்போரில் எதிரிகள் தோல்வியுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும் போது) ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்த எதிர்) அணியினரை அவனே தனியாக வென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப் போவது) இல்லை” என்று கூறினார்கள்.

புஹாரி : 4114 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.

மறுமை நாள் (அத்தியாயம்-4)

மறுமை நாள் என்ற நம்பிக்கை பகுத்தறிவு ரீதியானது. அது மனித இயற்கை வேண்டுகின்ற ஒரு அம்சம். அத்தோடு இறை நம்பிக்கை கொண்டவன் தவிர்க்க முடியாமல் மறுமை நம்பிக்கையையும் ஏற்க வேண்டியவனாகிறான். மறுமை நாள் நம்பிக்கையை ஏற்காதவன் இறைவனை மிகச் சரியான முறையில் நம்பிக்கைக் கொள்ள முடியாது. அந்நிலையில் அவன் இணைவைத்தலோடு அல்லது நிறைய பிழையான கருத்துக்களோடு தான் இறைவனை நம்பக் கூடியவனாக இருப்பான். அல்லது மறுமை நாள் நம்பிக்கைப் புரிந்து ஏற்காதபோது இறை நிராகரிப்புக்கும் அது இட்டுச் செல்ல முடியும். இவ்விஷயங்களை முதல் இரண்டு அத்தியாயங்களில் பார்த்தோம்.

மறுமை நாளை இவ்வாறு நம்பிக்கைக் கொள்ளும் போது மறு உலக வாழ்வு என்பது என்ன? அது எவ்வாறான தோற்றத்தைப் பெற்றிருக்கும்? அது எப்பொழுது நிகழும்? எவ்வாறு நிகழும்? என்ற கேள்விகள் இயல்பாகவே எழும்புகின்றன.

இக்கேள்விகளுக்கான பதிலை வெறும் பகுத்தறிவு மூலம் கண்டு பிடிக்க முடியாது. பகுத்தறிவு ஒன்றிருப்பதன் சாத்தியப்பட்டை சொல்ல முடியும். அது எவ்வாறிருக்கும் என்பதனை அதனால் விளக்க முடியாது. அதாவது ஏன்? என்ற கேள்விக்கு அது பதில் சொல்லும். எப்படி? என்ற கேள்விக்கு அது பதில் சொல்ல முடியாது.

மறுமை நாள் என்பது மறை உலகோடு சம்பந்தப்பட்ட விஷயமாகும். எனவே அது சம்பந்தமான மேற்கூறிய கேள்விகளுக்கும் வஹி (என்ற இறை செய்தி)யே பதில் சொல்ல முடியும். எனவே இக்கேள்விகளுக்கான பதிலை அல்குர்ஆன் சுன்னாவின் ஊடாக விளங்க முயற்சிப்போம்.

முதலில் மறுமை நாள் நம்பிக்கை என்பது இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாட்டின் ஒரு முக்கிய அம்சம் என்பதனை அல்குர்ஆனினூடாக நேரடியாகப் புரிந்து கொள்ளல் அவசியமானது. எனவே அந்த அம்சத்தைக் கீழே தருகிறோம்:

அல்குர்ஆனை வாசிக்கும் யாரும் இந்த உண்மையை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் மறுமை நாள் பற்றி சொல்லாத ஸூரா(அத்தியாயம்(க்கள் மிகக் குறைவு. ஒரு சில சிறிய ஸூராக்கள் மறுமை நாள் பற்றி பேசாது விட முடியும். தனியாக மறுமை நாளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசும் ஜுஸ்உ (பாகம்)வையே அல்குர்ஆனில் காண முடிகிறது. ‘ஜுஸ்உ அம்ம’ வே அதுவாகும். அந்த ஜுஸ்உவின் ஒரு சில ஸூராக்கள் தவிர மற்ற ஸூராக்கள் அனைத்துமே மறுமை நாள் பற்றி பல கோணங்களில் விளக்குவதை அவதானிக்க முடியும்.

இந்த வகையில் மறுமை நாள் நம்பிக்கை என்பது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரணமான அம்சமாகும். அவனது அன்றாட வாழ்க்கையில் இந்த நம்பிக்கையோடு சம்பந்தப்படும் வகையிலான வார்த்தைகளையும், நடத்தைகளையும் அவன் அதிகமாகக் கொண்டிருக்கிறான். ஐந்து வேளை அவன் தொழும்போது ஸூரா பாத்திஹாவை அவன் ஓதுகிறான்.

“கூலி கொடுக்கும் நாளின் அதிபதி”

என அந்த ஸூராவில் வசனத்தை ஓதும்போது அவனுக்கு மறுமை நாள் ஞாபகத்திற்கு வருகிறது. அவன் தூங்கும் போது ஓதும் துஆவும், விழிக்கும் போது ஓதும் துஆவும் மறுமை நாளை அவனுக்கு நினைவு கூற வைக்கின்றது. இந்த வகையில் மறுமை நாள் நம்பிக்கை என்பது அவனது அன்றாட வாழ்வின் ஓர் அம்சம். எனினும் மறுமை நாள் இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாட்டின் ஓர் அம்சம் எனக் காட்டும் சில அல்குர்ஆன் வசனங்களை இங்கே தருவது மறுமை நாள் பற்றிய இஸ்லாத்தின் விளக்கத்தைப் பார்க்க ஆரம்பமாக அமையும் எனக் கருதுகிறோம்.

“விசுவாசிகளே! அல்லாஹ்வையும், அவன் தூதரையும், அவனது தூதர் மீது அவன் இறக்கிய வேதத்தையும், முன்பு அவன் இறக்கிய வேத்ங்களையும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வையும், அவனது மலக்கு(வானவர்)களையும், வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும் நிராகரிக்கிறாரோ அவர் பெரும் வழிகேட்டில் சென்று விடுகிறார்.” (ஸூரா நிஸா: 136)

“மறுமை நாளை நம்பிக்கை கொள்ளாதோர் வேதனையிலும் பெரும் வழிகேட்டிலுமே உள்ளார்கள்.” (ஸூரா ஸபஉ:8)

மனித வாழ்வு இவ்வுலகுடன் முடிந்து விடுகிறது. அதன் பிறகு எந்த வாழ்வுமில்லை என்ற நம்பிக்கை நிராகரிப்பு என்பதை அல்குர்ஆன் கீழ்வருமாறு வலியுறுத்திச் சொல்கிறது:

“நாம் இறந்து பூமியில் மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டால் நாம் நிச்சயம் புதிதாகப் படைக்கப்படுவோமா? என அவர்கள் கேட்கின்றனர். இல்லை! அவர்கள் தமது இரட்சகனைச் சந்திப்பதை நிராகரிக்கிறார்கள்.” (ஸூரா ஸஜ்தா: 10)

இவ்வாறு சொல்வது மட்டுமின்றி இறை தூதின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று அந்த மறுமை பற்றி எச்சரிப்பதும், நன்மாராயம் சொல்வதுமே என அல்குர்ஆன் சொல்கிறது.

“தனது அடியார்கள் மீது கோணல் ஏதுமற்ற, மிகச் சீரான வேதத்தை இறக்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தாகுக! இது அவனிடமிருந்து வரும் கடும் தண்டனையொன்றை எச்சரிக்கவும், நற்செயல்கள் புரியும் விசுவாசம் கொண்டோருக்கு நன்மாராயம் சொல்லவுமே ஆகும்.” (ஸூரா கஹ்ப்: 1-2)

எனவே, மறுமை நாள் நம்பிக்கையை ஏற்காது விடல் இறைத் தூதையே நிராகரிப்பதாகும் என இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இவற்றிலிருந்து மறுமை நாள் நம்பிக்கை இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாட்டில் ஓர் அம்சம் என்பதுவும், அதனை ஏற்காமை இறை நிராகரிப்பு, பெரும் வழிகேடு என்பதுவும் தெளிவாகின்றது.

இனி மறை உலகோடு சம்பந்தபட்ட அந்த மறுமை நாளை அல்குர்ஆனும், ஸுன்னாவும் முன்வைக்கும் அமைப்பை நோக்குவோம். அதனை கீழ்வரும் தலைப்புகளின் கீழ் ஒழுங்கு படுத்தலாம்:

1. மரணமும், அதனைத் தொடரும் (B) பர்ஜக் வாழ்வும்
2. மறுமை நாளுக்கான அடையாளங்கள்
3. உலக அழிவும், மறுமை நாளின் தோற்றமும்
4. மஹ்ஷர் வெளி
5. சுவர்க்கமும், நரகமும்

இப்போது மறுமை நாள் பற்றிய தெளிவைத் தரும், அதனோடு சம்பந்தப்பட்ட இத்தலைப்புகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் தெளிவாக நோக்குவோம்.

மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-4)