அநியாயம் புரியாதீர்

43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் (அருளாளன் அல்லாஹ்வின்) நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.

43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

43:38. எதுவரை என்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும் போது (ஷைத்தானிடம்): “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும் மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்த நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.

43:39. (அப்போது) “நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).

43:40. ஆகவே (நபியே!) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அநியாயம் புரியாதீர்

மசூதிகள் ஏக இறை வழிபாட்டுக்குரியனவே!

பள்ளிவாசல்களை நிறுவுவதினால் அல்லாஹ்வைத் தொழுவது மட்டும் இலட்சியமாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தொன்று தொட்டு ஏக இறைவனை மட்டும் வணங்குவதற்கு மசூதிகளைக் கட்டி வந்தார்கள். இப்பள்ளிவாயில்களில் இறைவழிபாடுகளைத் தவிர்த்து வேறு எச்செயலையும் அனுஷ்டானம் என்ற பெயரில் செய்ய முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை. ஏகனைத் தொழலாம். அவனிடம் தன் நாட்டங்களைக் கேட்டுக் கெஞ்சலாம். இதைத் தவிர படைப்பினங்களில் எவரையும் அழைத்துப் பிரார்த்திக்கக் கூடாது. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on மசூதிகள் ஏக இறை வழிபாட்டுக்குரியனவே!

நபிகள் இறந்ததற்கப்பால் அவர்களிடம் பிரார்த்திக்கக் கோரலாமா?

பெருமானார் (ஸல்) உலகை விட்டு மறைந்த பின்னர் அவர்களிடம் சென்று அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து நமக்காகப் பாவமன்னிப்பு வாங்கித்தர வேண்டுவதும்: நபி வாழ்ந்திருக்கையில் ஸஹாபிகள் நபியிடம் பாவமன்னிப்பைத் தமக்காகப் பிரார்த்திக்கும்படி வேண்டியதற்குச் சமமானதாகும் என்று கூறி மேற்படி இறைவசனத்துக்கு தம் மனோ-இச்சைக்கொப்ப விளக்கம் அளித்தனர். இது அனைத்தும் முஸ்லிம் அறிஞர்களின் விளக்கத்துக்கும், ஸஹாபாக்களுடையவும் , தாபியீன்களுடையவும், ஏகமனதான தீர்மானங்களுக்கும் (இஜ்மாஉக்கும்) நேர் முரண் பட்டதாகும். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Comments Off on நபிகள் இறந்ததற்கப்பால் அவர்களிடம் பிரார்த்திக்கக் கோரலாமா?

நம்பிக்கையுடன் நன்மை செய்வோருக்கான நாளைய கூலி!

52:17. நிச்சயமாக, பயபக்தியுடைவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.

52:18. அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாக இருப்பார்கள் – அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.

52:19. (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களுடைய (ஹூருல் ஈன்கள்-என்னும் பெண்களை) மணமுடித்து வைப்போம்.

52:21. எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும் , நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் – ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.

52:22. இன்னும் அவர்கள் விரும்பும் கனி வகைகளையும், இறைச்சியையும் நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.

52:23. (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதுமில்லை.

52:24. அவர்களுக்கு (ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).

52:25. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.

52:26. “இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனைப் பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.

52:27. ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றினான்.

52:28. நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நம்பிக்கையுடன் நன்மை செய்வோருக்கான நாளைய கூலி!

விக்ரஹங்களால் சிபாரிசு செய்ய முடியாது

இறைவனுக்கு இணையுண்டு என நினைக்கின்ற முஷ்ரிக்குகள் கூறுகின்றனர்: மலக்குகளும், நபிமார்களும் எங்களுக்காக சிபாரிசு செய்ய வேண்டுமென்றே நாம் அவர்களை வேண்டுகிறோம்.வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை. நபிமார்கள்,மலக்குகள், நன்மக்கள் இவர்கள் சமாதியில் வந்து நாம் கேட்பதெல்லாம் சிபாரிசு ஒன்றைத்தான். உதாரணமாகக் கூறுவதாயின்: இரக்கமுள்ள நாச்சியார் மர்யம் அவர்களே! மேன்மைக்குரிய பீட்டர் அவர்களே! ஜுர்ஜீஸ் அவர்களே! நபி மூஸாவே! அல்லது இப்ராஹீமே! எங்களுக்காக உங்கள் இறைவனிடம் சிபாரிசை வேண்டுங்கள் எனக் கூறி நாங்கள் சம்பாஷணை நடத்தும் போது அல்லது இவர்களின் சமாதிகளில் சென்று நாங்கள் அவர்களோடு உரையாடும் போது அல்லது கண் மறைவாக வாழும் எங்கள் குருவுடன் நாங்கள் பேசும்போது இப்பெரியார்கள் தம் வாழ்வில் சாதித்த அறச் செயல்களைப் பற்றி நினைப்போம். அவர்களின் நன்னடத்தைகளைப் பற்றி சிறிதளவு எங்களுடைய சிந்தைகளில் புகுத்துவோம். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on விக்ரஹங்களால் சிபாரிசு செய்ய முடியாது

ஜின் ஷைத்தான்களின் ஆள்மாறாட்டம்

முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். ஜின் வர்க்கம் மனித வர்க்கத்தைப் போன்றதாகும். ஜின்களில் காஃபிர்கள் உண்டு. இறைவனை மறுத்துப் பேசுகின்றோரும் உண்டு. முஸ்லிம்களும் உண்டு. ஜின்களில் பாவிகள், குற்றவாளிகள், அறிவீலிகள் மூடத்தனமாக இறைவனுக்கு வழிப்படுகிறவர்கள் மனிதர்களில் சிலர்களைப் போன்று குரு (ஷைகு)மார்களை விரும்புகிறவர்கள் இப்படி பலதரப்பட்ட அமைப்பிலும் ஜின்கள் இருக்கிறார்கள். (இது ஸூரத்துல் ஜின் பதினொன்றாம் ஆயத்திலும் சுட்டிக்காட்டப்படுகிறது) சந்தர்ப்பங்களில் ஜின்கள் குரு (ஷைகு)மார்களின் வேடங்களை அணிந்து மனிதனிடம் காட்சியளிக்கிறார்கள். இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலும் காடு வனாந்திரங்களிலும், மக்கள் நடமாட்டமில்லாப் பகுதிகளிலும் நடக்கின்றன. மனிதனுக்கு முன்னால் ஜின்கள் ஆஜராகி ஏதோ ஆகாரத்தையும், நீரையும் கொடுத்து சாதாரணமாக நடக்கும் சில தூரமான சம்பவங்களைக் குறித்து மனிதனிடம் கூறிவிட்டுப் போய் விடுகிறார்கள். இதைக்கண்ட மனிதன் அறிவின்மையால் தனக்குரிய குரு (ஷைகு) ஆஜரானார். இறந்து போன அல்லது உயிரோடிக்கின்ற தன் குரு விஜயம் செய்தார் என்று நம்புகிறான். கிடைத்த உணவும், தண்ணீரும் தன்னுடைய குருவிடமிருந்து கிடைத்தவை என்றெண்ணி ஜின்னிடமிருந்து கேட்ட செய்திகளை குரு (ஷைகு)வின் பொன்மொழியாக ஏற்கிறான். அதற்கொப்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on ஜின் ஷைத்தான்களின் ஆள்மாறாட்டம்

விளங்கவும், செயல்படுத்தவும் எளிதான இறைவேதம்!

54:17. நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

39:27. இன்னும் இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

3:138. இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கிறது.

6;90. “இதற்காக நான் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.

16:89. அது (குர்ஆன்) யாவற்றையும் தெளிவாய் விவரிக்கக் கூடியதாய் இருக்கிறது…

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on விளங்கவும், செயல்படுத்தவும் எளிதான இறைவேதம்!

இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்

அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதரும் எவரைப் பற்றி இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்குகள் என்று விளக்கினார்களோ அவர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று: நூஹ் நபியின் சமூகத்திலுள்ளவர்களைப் போன்றோர். மற்றொன்று: நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரைப் போன்றவர்கள். இவ்விரு கூட்டத்தினரும் இறைவனுக்கு ஒவ்வொரு மாதிரியாக இணை வைத்தார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார் (ஸாலிஹீன்களான) இறைவனின் நல்லடியார்கள் இறந்தால் அவர்களுக்குச் சமாதிகளைக் கட்டி உயர்த்தி அந்த சமாதிகளின் மீது தரித்திருந்து நாட்களைக் கழித்து பிறகு சமாதிகளில் புதைக்கப்பட்டவர்களின் உருவச் சிலையைக் கட்டி உயர்த்தி அந்தப் பிம்பங்களுக்கு கீழ்ப்படிந்து வழிபாடுகளைச் செலுத்தினார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகமோ இணைவைப்பதில் மற்றொரு வழியைக் கையாண்டார்கள். நட்சத்திரங்களை வணங்கினார்கள். சூரியன் சந்திரன் மற்றும் கிரகங்களுக்கெல்லாம் வணக்கங்களைச் செலுத்தினார்கள். அவற்றைக் கடவுளாகவும் மதித்தார்கள். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்

சிலைகளை சிருஷ்டிகள் என்று ஒப்புக்கொள்ளல்.

அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களும் இருக்கின்றனர் எனக்கூறி இறைவனுக்கு இணை கற்பித்த முஷ்ரிக்குகள் தாம் கற்பித்த துணை கடவுள்களைப் பற்றி அவையும் சிருஷ்டிக்கப்பட்ட படைப்பு வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதை ஏற்றிருந்தனர். இருந்தும் அவற்றிற்குக் கீழ்படிந்து வணக்க வழிபாடுகள் செலுத்துவதினால் அவை தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்து அவனுடன் நெருங்கிய தொடர்பை பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையில் அத்தகைய கடவுள்களைத் தமக்குப் பரிந்து பேசும் தலைவர்களாக மதித்திருந்தார்கள். இதை அல்லாஹ் கீழ்வரும் இறை வசனங்களில் விளக்குகின்றான்:

“முஷ்ரிக்குகள் தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்யமுடியாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர். ஆகவே நபியே வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ யாவையும் நன்கறிந்தவன்) அவன் மிகத் தூய்மையானவன். அவர்கள் இணை வைப்பவற்றை விட எல்லாம் மிக்க உயர்ந்தவன் என்று கூறும்”. (10:18). Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on சிலைகளை சிருஷ்டிகள் என்று ஒப்புக்கொள்ளல்.

உண்மையான கல்வி ஞானம் எது?


2:204. (நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.

2:206. “அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது; நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.

22:3. இன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.

22:8. இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழிகாட்டியோ, வேத(ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்து தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.

22:9. (அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம (தீர்ப்பு) நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்கச் செய்வோம்.

22:10. ” உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்).

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உண்மையான கல்வி ஞானம் எது?